புதன், 11 டிசம்பர், 2019

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்

வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் இரண்டாமிடத்திற்குச் சென்றுவிட்டது. மீண்டும் முதலிடத்தைத் தக்கவைக்க நீங்களும் வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு சென்னையில் நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நீச்சல் காரன்

image.png

நாள்: டிசம்பர் 15 2019 (ஞாயிறு)
நேரம் – காலை 9.00 – மாலை 4.00  (இதற்கிடையேயும் வரலாம்) 
இடம் : சென்னை லயோலா கல்லூரி
அனுமதி இலவசம்

முன்பதிவு அவசியம். https://forms.gle/TboqjL5Zb4TpMRxY7

நிகழ்ச்சி நிரல்:
போட்டி அறிமுகம் 
போட்டி தொடர்பான வழிகாட்டால்
கொடுத்துள்ள தலைப்பில் கட்டுரை உருவாக்கம்

****
புள்ளிவிவரம்: https://tools.wmflabs.org/neechal/tigerarticle.html
இங்குள்ள தலைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் கீழ், உருவாக்க/விரிவாக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்புகளைக் கீழே காணலாம். இந்தப் பட்டியல்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கட்டுரை எழுதலாம். நீங்கள் தேர்வு செய்யப்போகும் தலைப்புகளை மற்ற பயனர்கள் தேர்வு செய்துள்ளனரா என்பதனை இங்கு சரிபார்த்துக் கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன