புதன், 24 ஜூன், 2015

வாசிப்பை நேசி!



கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை, நூலகம் மற்றும் கோவை விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘வாசிப்புத் திருநாள்’ நிகழ்வு கல்லூரி நூலகத்தில் 23.06.2015 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
            இந்நிகழ்வினை மொழித்துறைத் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்கள் வாசித்தலே நம்மின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்; உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என நூல் பற்றிய புரிதலை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில்; சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறவாதீர்! என நூல்வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களின் மனதில் ஆழப் பதித்து, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்றார்.

             கோவை, விஜயா பதிப்பக உரிமையாளர் திருமிகு மு.வேலாயுதம் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், வாழ்க்கையில் சிறப்பமிக்க இருவர் ஆசிரியரும் நூலகரும் ஆவார் என்றும், வாழ்க்கையில் ஏக்கம், கஷ்டம், கவலை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை; இவை அனைத்தையும் நூல்கள் நமக்கு அளிக்கின்றன என்றும், நூல் வாசிப்பிற்கு, ஈடுபாடும் முயற்சியும் தேவை என்றும், நல்லெண்ணத்தையும் நற்செயலையும் நூல்கள் நமக்குத் தருகின்றன என்றும், நூல்கள் பற்றிய நற்புரிதலை மாணவர்கள் மத்தியில் விதைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
            முன்னதாகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். விழாவின் நிறைவாக நூலகர் திருமிகு எஸ்.ராஜ்குமார் நன்றி கூறினார்.



கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை, நூலகம் மற்றும் கோவை விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘வாசிப்புத் திருநாள்’ நிகழ்வில் விஜயா பதிப்பக உரிமையாளர் திருமிகு மு.வேலாயுதம் மாணவர்களுக்கு நூல்வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி நூல்கள் வழங்கினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன