ஞாயிறு, 11 ஜூலை, 2021

மொசில்லா பொதுக்குரல் நன்கொடைத் திட்டத்தில் பங்களிப்புச் செய்ததில் இந்தியாவிலே முதல்முறையாக ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி புதிய சாதனை முயற்சி

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாகப் பொதுக்குரல் திட்டத்தின் தேவையும் அவசியமும் எனும் பொருண்மையிலான சிறப்புரையை முனைவர் துரை.மணிகண்டன் (கணித்தமிழ் ஆய்வாளர் & தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி) அவர்கள் இணையவழி நிகழ்த்தினார்கள். இவ்வுரையில் கணித்தமிழில் சாதனை புரிந்த சாதனையாளர்களை அடையாளம் காட்டியும் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறிச் சாதனை விருதாளர்களுக்கு வாழ்த்தும் கூறினார்கள். அக்கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று ஆதித்யா கணித்தமிழ் விருதுச் சான்றிதழ் வழங்கினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. செல்வநாயகி அவர்களும் கணினித்துறைப் பேராசிரியர் திருமிகு ஸ்ரீதர் அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள். இந்நிகழ்வு 10.7.2021 அன்று மாலை 5.00 - 6.40 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்விற்குரிய போட்டி 15.6.2021 தொடங்கி 27.6.2021 வரை நிகழ்ந்தது. இப்போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற சாதனையாளர்கள் 29 பேர் ஆவார். இவர்கள் இப்போட்டிக்காலத்தில் பிறர் பேசிய தொகுப்புகளை 90476 என்ற எண்ணிக்கையில் கவனித்திருந்தனர். 22728 என்ற எண்ணிக்கையில் தங்களது குரலை  நன்கொடையாகத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையைக் கொண்டாடும் இந்நிகழ்வினைச் செல்வன் ந.மணிகண்டன் அவர்கள் தொகுத்து வழங்க, செல்வன் அ.ஆர்லின்ராஜ் அவர்கள் வரவேற்க, செல்வி நிவேதா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்ய, செல்வி ரேஷ்மா நன்றி நவில, சாதனையாளர்கள் பின்னூட்டம் அளிக்க, இந்நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தது. இந்நிகழ்வினை முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி அவர்களும் பேரா.கு.இராமஜெயம் அவர்களும் ஒருங்கிணைத்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன