வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெலுங்கு மரபிலக்கணங்களில் இலக்கணக்கலைச் சொற்கள்

            தெலுங்கு இலக்கணங்கள் கலைச் சொற்களுக்குப் பருந்துப் பார்வை பாரிபாஷிக பதாலு, சஞ்ஞாலு என இரு சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவ்விலக்கணங்களில் காணப்படும் கலைச் சொற்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம். அவை : -
1.    சமற்கிருத பிராகிருத மொழிக்குரியன
2.    தூய தெலுங்கு மொழிக்குரியன
3.    மணிப்பிரவாள நடை
1.    சமற்கிருதத்தில் தோன்றிய தெலுங்கு இலக்கணங்கள்
            சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தெலுங்கு மொழிக்கான இலக்கணங்களின் அமைப்பு முறை சுலோக வடிவில் காணப்படுகிறது. இவ்வமைப்பு முறையில் வரும் முதல் இலக்கணம் ஆந்திர சப்த சிந்தாமணி.

            அவ்விலக்கணம் (11ஆம் நூற்றாண்டு) சூத்திர எளிமைக்காகப் பாணினீயத்தைப் பின்பற்றிக் கலைச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் தெலுங்கு மொழிக்கேற்ப மற்ற கலைச் சொற்களையும் உருவாக்கியுள்ளது.
            வக்ரமு (கோணல்), வக்ரதமமு (மிகவும் கோணல்), பருஷமு (கடினம்), ஸரளமு (எளிமை), ஸ்தி2ரமு (நிலையான), களா (நகர ஈறு அற்றவை), த்3ருத ப்ரக்ருதி (நகர ஈறுடையவை), விக்ருதி (திரிபு), தத்ஸம (சமற்கிருத, பிராகிருத நிகர்), தத்34 (சமற்கிருத, பிராகிருதத்தில் இருந்து பிறத்தல்), தே3ஸ்2 (தேசியம்), சந்தி3 (புணர்ச்சி), வர்ணகமு (உருபு), ஸமாஸகமு (தொகை), ஔப (துணை), விப4க்தி (வேற்றுமை), மஹத் (உயர்திணை), அமஹத் (உயர்திணை அற்ற), மஹதீ (உயர்திணைப் பெண்பால்), ஸ்த்ரீஸம (பெண்பால் நிகர்), க்லீப3ஸம (விலங்குகளும் பறவைகளும்), யஸ்2ருதி (யகரம்), ப்ராணமு (உயிர்), ப்ராணி (மெய்), தத்33ர்மாதி3 (நிகழ்காலத் தொடர்வினை).
            இவை அனைத்தும் ஆந்திர சப்த சிந்தாமணியில் நன்னய்யவால் உருவாக்கப் பெற்ற கலைச் சொற்கள்.  
            திரிலிங்க சப்தானு சாஸனம் பெரும்பாலும் ஆந்திர சப்த சிந்தாமணியைப் பின்பற்றியுள்ளது என்பதற்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள தந்த்யம் (பல்லொலி), தாலவ்யம் (தாடை ஒலி), களா, த்ருத ப்ரக்ருதிகமுலு, தத்ஸம, தத்ப4, தே3ஸ்2, க்3ராம்ய போன்ற சொற்களே சான்று.
            புதிய சொல்வகையை அறிமுகப்படுத்தியதும் இந்நூலே. இதில் தெலுங்கு மொழிக்குத்த்ரிலிங்கம்என்பதைச் சுட்டிக்காட்டி இச்சொல்லை நிறுவிக் காட்டியுள்ளார். இந்நூல் வேற்றுமை உருபுகளைக் குறிப்பிடும் பொருட்டு மூன்றாம் வேற்றுமை உருபானசேதஎன்பதற்குமை’ (அவ்யயச் சொல்) என்று குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. இது மற்ற எந்த இலக்கணங்களிலும் காண முடியாது (4 : 1 – 2)
            நிவ்ருத்தி ஸேஷாசல [ஆந்திர வியாகரணத்தில் (1683 – 1712)] விஸர்க (:) என்பதற்குப்பிந்து3த்3வயம்’ (இரட்டைப் புள்ளிகள்) என்று குறிப்பிட்டுள்ளார்.
            “அச: ப்பரம் பி3ந்து3 த்3வய முக்த ஸஞ்ஜ்நு : ஸ்யாத்என்று சூத்திரம் அமைத்து இதற்குச் சான்றாகத் தேஜ : காந்துடு3 (ஒளிமயமானவன்) என்று குறிப்பிட்டுள்ளார். அப்பகவி விஸர்க (:) என்பதைப்பொ3ட்டுக3” (அப்ப. 2 : 10 – 11) என்று பெயரிட்டுள்ளார்.
            திரிலிங்க சப்தாநு சாஸநம் II (18) தத்சமம் என்ற சொல்லைத்தத்ஸஎன்று பயன்படுத்தியுள்ளது. அதர்வணனின் திரிலிங்க சப்தாநு சாஸனத்திலும் இவ்விதி பயன்படுத்தப் பட்டுள்ளது.
            சூத்திரம் :        “த்ரிலிங்க3 ஸா2ஸ்ரம் தத்ஸ தே3ஸ்2 க்3ராம்யாச்ச
                                     பே4தை3 : பஞ்ச வித4ம் ஸ்யாத் ǁ அத4 தத்ஸ பத3ம் கிம்
இந்நூலில்தத்பவஇயலில்த்ரிலிங்க3சொல்லில் இருந்துதெலு(கு3, தெலுங்கு3என்ற சொற்கள் பிறந்ததாக நிறுவிக்  காட்டப்பட்டன.
            இந்நூல் சிந்தாமணி உருவாக்கிய தெலுங்கு இலக்கணக் கலைச் சொற்கள் மட்டுமல்லாமல் அவற்றோடு வால்மீகி பிராகிருத இலக்கணத்தில் இருந்தும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளது. “ஸஞ்ஜ்ஞா ப்ராக்ருத வச்சஎன்று சூத்திரம் படைத்துஇஹஸா2ஸ்த்ரே வால்மீகீ யாதி3வத், பாணினீ யாதி3 வச்ச ஸஞ்ஜ்ஞாவேதி3 தவ்யாஎன்று விளக்கம் தந்துள்ளார் (சஞ்ஜ்ஞாசூ – 3). பிராகிருத இலக்கணச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெளிவாக எடுத்துக் கூறிய முதல் இலக்கண நூல் இதுவேயாகும்.
            பாணினீய மாஹேஸ்வர சூத்திரங்களான அண் ( ), ஏங் ( ), யண் ( ), ஜஸ்2 ( 3 3 3 3) போன்ற குறியீட்டுச் சொற்களை அவ்வாறே பயன்படுத்தியுள்ளது. சமற்கிருத இலக்கணத்தில் இருந்து கையாளப்பட்டஅச்என்ற குறியீட்டுச் சொல்லைஅச் ப்ராண :’ (உயிர் பிராணம்) என்று பயன்படுத்தியுள்ளது.
            சமற்கிருத சூத்திராந்திர வியாகரணத்தில் (1842) புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1.    உந்நாத3யஸ்2சி: உந்ந (இருக்கிற) போன்ற சொற்களுக்குச்சிஎன்ற குறியீடாகச் சுட்டுவது.
2.    அந்த்யாக்ஷரண்டி:” ஈற்றெழுத்திற்குடிகுறியீட்டைப் பயன்படுத்துவது. இது பாணினீயத்தின்டிகுறியீட்டைக் காட்டிலும் மாறானது.
3.    சிதோஹலோத்3வேசகரம் இகரமாக உள்ள மெய்க்கு இரட்டிப்பாக வரும்.
            இக்கலைச்சொற்களும் குறியீடுகளும் பயனுள்ளதாகவும் பொருளற்ற நிலையிலும் உள்ளதால் இவை பாலவியாகரணத்தில் பயன்படுத்தவில்லை.
            மேற்கூறப்பட்ட இலக்கணங்கள் அனைத்திலும் பாணினீயச் சொற்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸுப3ந்தம், திஙந்தம், ணிஜர்த2ம், க்த்வார்த2ம், ஸமாஸம், காரகம், க்ருதந்தம், தத்திதம் போன்ற சொற்கள் முன்னால் இலக்கணங்களில் இருந்து கையாளப்பட்டுள்ளன.
            சமற்கிருத மொழியில் உள்ள இந்தத் தெலுங்கு இலக்கணங்களில் சூரி பாலவியாகரணத்தில் பயன்படுத்திய இத்3வர்ணம், அதி4காரம், அதிதே32ம், த்ருவர்ணகார்த2கம், பர்யுதா3ஸம், க்ருதாக்ருத ப்ரஸங்கி3, 4வத்யர்த2ம் போன்ற மிகவும் கடினமான குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது கவனிக்கத் தக்கது.    
            சமற்கிருத முக்தபோத இலக்கண அமைப்பில் பயன்படுத்திய ஏகாக்ஷர (ஓரெழுத்து), த்3வ்யக்ஷர (இரண்டெழுத்து) போன்ற சொற்களைத் திரிலிங்க சப்தானு சாஸனம் -II; வைக்ருத சந்திரிக, சமற்கிருத சூத்திராந்திர வியாகரணங்கள் உருவாக்கின.
செய்யுள் அமைப்பு இலக்கணங்கள்
            செய்யுள் அமைப்பு இலக்கணங்கள் பெரும்பாலும் சமற்கிருதப் பெயர்களைத் தவிர்க்க முயன்றுள்ளன. இவ்விலக்கணங்கள் தெலுங்குமொழிக் கேற்றவாறு இலக்கணச் சொற்களை உருவாக்கிக் கொண்டன.
            ஆந்திர பாஷா பூஷணத்தில் ஙித்து, கித்து, டித்து, கணமு போன்று சூத்திரச் சுருக்கத்திற்காகப் பயன்படுத்தும் சொற்களையோ பருஷ, ஸரள, ஸ்தி2ரம் என்ற எழுத்து வகைப்பாட்டுக்கான சொற்களையோ களாத்ருத பிரகிருதிகம் போன்ற கலைச் சொற்கள் லோபம், ஆகமம், ஆதேசம், நித்யம் போன்ற விகாரத் தொடர்புச் சொற்களையோ காண முடியாது.
            இந்நூல் உயிரீற்றுச் சொற்களை அகாரேகாரோகாராந்தமுலு (அகர இகர உகர ஈற்றுச் சொற்கள்) என்று குறிப்பிடாமல் அதற்கு மாறாகக்
            கந்தம் :            “புற்றகு3 நுற்றந்தமுபை
                         முற்றகு3 நற்றந்த 2ப்33முலபை : ரெண்டந்
                         டு3ற்றகு3( பு3ருஷாக்2யலபை
                         நற்றுற்றகு3 நட்டியெட3 நபி4நவத3ண்டீ3” (செய்யுள் : 35)
எனவரும் விதியில் அற்று, இற்று, உற்று என்று குறிப்பிட்டுள்ளது. ‘அத்என்பதில் உள்ளகரம் பொருள் உடையது; இதில் வரும்ற்றுஎன்பது பொருளற்றது (ஜி. லலிதா. 113) ஆகும்.
            சமற்கிருதத்தில் இணைப்புச் சொல்லைச்சார்த2ம்என்பர். காவ்யாலங்கார சூடாமணி (1400) யில் இச்சொல்லைச் சகாரம் (9 – 56) என்று குறிப்பிட்டுள்ளது. முழுவட்டத்தை (0) ‘ஊது3என்று பயன்படுத்தியுள்ளது.
            கவி சிந்தாமணியில் (கி.பி. 15) தத்பவ மொழியைஅபப்4ரம்ஸ2 மொழிஎன்று குறிப்பிடுகின்றது. மேலும் விஷேஷ்யத்தைத்த்3ரவ்யம்என்றும் விஷேஷணத்தை (பண்புச் சொற்களை) ‘கு3ணபத3ம்என்றும் குறிப்பிடுகிறது.
            லக்ஷணஸார சங்கிரஹத்தில் (கி.பி. 16) தெலுங்கு எழுத்துகள் 52 என்று குறிப்பிட்டு அவ்வெழுத்துகள் நக்ஷத்ரப் பெயர்களைக் கொண்டு வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. இதில் நக்ஷத்ரம் என்ற சொல்லுக்குருக்ஷம்என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தன்மை மற்ற தெலுங்கு இலக்கணங்களில் காணப்படாத சிறப்பாகும்.
            சான்று :          
                        “ள க்ஷ றல் ரேவதி யநெடி3 ருக்ஷமகு3நு” (1 – 23)
( க்ஷ இவ்வெழுத்துகள் ரேவதி என்ற நக்ஷத்திரமாகும்)
            கவிஜன சஞ்ஜீவநி (கி.பி. 16) இயல் என்பதற்குத்தரங்கமுஎன்று பயன்படுத்தியுள்ளது.
            லக்ஷண சிரோமணி (கி.பி. 18) எழுத்திற்கு வர்ணம் (எழுத்து) என்றால் அக்ஷரம் என்றும் அர்ணம் என்றும் மாத்ருக என்று கூறியுள்ளது.
            கவி சம்ஸய விச்சேதமும் (கி.பி. 1720 – 1785) இயல் என்பதற்குத்தரங்கம்என்று பயன்படுத்தியுள்ளது.
            லக்ஷணமஞ்ஜரி (கி.பி. 18) றகரத்தைப்3ண்டி3ரா’ (. மஞ். . 13. 25 யதி) என்று குறிப்பிட்டுள்ளது. வின்னகோடஸத்தன, அப்பகவிஏகதரயதி’ (ஒரேவகை யதி) என்று குறிப்பிட மற்ற யாப்பு இலக்கணிகள் இதைஎக்கடியதிஎன்று குறிப்பிட்டனர். ஆனால் பீமன போன்றோர்எக்கடிவடி3என்று குறிப்பிட்டனர். இந்நூலாசிரியர் அப்பகவியையே பின்பற்றினார்.
            வேற்றுமைகளைச் சமற்கிருத இலக்கண மரபைப் பின்பற்றிப் ப்ரத2, த்3விதீய என்றும் வேற்றுமை உருபுகளைவர்ணகமுஎன்று கூறுவது மரபு. ஆனால் பட்டாபிராம பண்டிதீயத்தில் (1816) மொத3டி வந்நிய (முதல் வேற்றுமை உருபு) என்று உருபுக்குவந்நியஎன்ற பெயரை இட்டுள்ளது.
            ஸீஸம் :
                        டு3முவுலு நாவர்ணகமுலு மொதடி வந்நி
                        யலு கூர்சில நிநு வந்நெலு 3(பக3
                        ரெண்ட3 யவி மரி யுண்டசே சேததோ
                        தோட3 நா வந்நெலு மூ(3 யவி
                        கொறகை யநுநநி வருஸ நாலவயவி (பட்ட. சப்த – 107) சூரி பாலவியாகரணத்திலும்த்ருவர்ணகார்த2ம்புநந்தெ3டி3 யெரு3 வந்நியலகு3 என்ற சூத்திரம் அமைந்துள்ளது. அதில்வந்நியஎன்ற சொல்லை சூரி இந்நூலிலிருந்து கையாண்டு இருக்கலாம்.
            பத்யாந்திர வியாகரணத்தில் (1897) மல்லம் பல்லி மல்லிகார்ஜுன சாஸ்திரி எழுத்துகளைப் பற்றி விளக்கும் நிலையில் க்கள் த்3விஸ்வரைக்யமுலு ( + = : + = ), க்கள் த்ரிஸ்வரைக்யமுலு ( + = ; + + ) என்றும் விளக்கிய இவரேஅச்சு’, ‘ஹல்லுஎன்ற சொற்கள் பாணினீயச் சொற்கள் என்று குறிப்பிடுகிறார்.
            சிந்தாமணி வக்ரமு, வக்ரதமமு என்ற சொற்களைக் குறிப்பிட இவர்அகாராதி3  (லு) காராந்தமு பரிஸே2ஷந்யாயமுந வக்ரதரம்பு3லகு3” (சங்ஞா – 23) என்று (ரு லு) எழுத்துகளுக்குவக்ர தரமுஎன்ற புதிய பெயரைச் சுட்டியுள்ளார்.
            செய்யுள் அமைப்பு இலக்கணங்களில் கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில் சுதந்திரமாகச் செயல்பட்டனர் தெலுங்கு இலக்கணிகள். கேதன, வின்னகோட பெத்தன சிந்தாமணியை அறியாமல் இருக்கலாம். பின் வந்தவர் சிந்தாமணியைப் பார்த்தும் அதில் உள்ள கலைச் சொற்களைப் பயன்படுத்தவில்லை. இவர்களில் கணபவரபு வேங்கடகவி மட்டும் சமற்கிருத இலக்கணக் கலைச் சொற்களை முழுமையாகப் பயன்படுத்தினார்.
            சிந்தாமணி உருவாக்கிய வக்ர, வக்ரதம, பருஷ, ஸரள, ஸ்தி2, களாதிருத ப்ரக்ருதிக, தத்33கமாதி3சொற்களைச் செய்யுள் வகை இலக்கணிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. கூசிமஞ்சி திம்மகவி மட்டும் ஓர் இடத்தில்த்ருதப்ருக்ருதிகம்என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் (1 : 107).
            செய்யுள் அமைப்பு இலக்கணங்கள்த்ருதம்என்பதை நாந்தம் என்றும் பருஷங்களைக் என்றும் சரளங்களைக் 3 3 3 என்றும்க்த்வார்த2ம் என்பதைல்யப3ந்தம்என்றும்ப்ரேரணார்த2கம்என்பதைணிஜந்தம்என்றும் கூறிச் சென்றன.
            செய்யுள் அமைப்பு இலக்கணங்கள் துருத பிரகிருதிகத்தைநாந்தம்என்றும் நெடிலைச்சாவுஎன்றும் பிந்துவைப்பொட்டுஎன்றும் கூறிச் சென்றன.
சூத்திராந்திர வியாகரணங்கள்
            சூத்திராந்திர வியாகரணங்கள் புதிய கலைச் சொற்கள் சிலவற்றை அறிமுகப் படுத்தியுள்ளன.
            லகு வியாகரணம் (1856) சிந்தாமணியில் குறிப்பிடாதஸத்யர்த2கம்என்ற வினை தொடர்பான ஒரு சொல்லை அறிமுகப் படுத்தியுள்ளது. “ஸத்யர்த2ம்ப3 நொக க்ரிய மறியொக க்ரியநு ஸுசிஞ்சுட” (வினை சூ – 41) என்று ஒரு வினை மற்றொரு வினையைக் குறிப்பிடுவதுசத்பர்தம்என்று விளக்கத்தையும் தந்துள்ளது.
            பாலவியாகரணம் (1858) சமற்கிருத இலக்கணங்களில் இருந்து கலைச் சொற்களைக் கையாண்டுள்ளது. சிலவற்றைச் சிந்தாமணியில் இருந்து எடுத்துள்ளது. லாட்டு, லூட்டு, லஙி என்ற லகாரங்களும் (காலக் குறியீடுகள்), முத்து, குஞ்ஞ, ஙித்து போன்ற ப்ரத்யாஹாரக் குறியீடுகளையும் புதிதாக உருவாக்கியது.

            மற்ற இலக்கணங்கள் பெரும்பாலான சொற்களைச் சமற்கிருத இலக்கணங்களில் இருந்து கையாளப்பட்டுள்ளன. தெலுங்கு இலக்கண வரலாற்றில் பெரும்பாலான செய்யுள்வகை இலக்கணங்கள் மட்டும் இலக்கணக் கலைச்சொற் பயன்பாட்டில் மாற்றுப் பெயர்களை இட்டுச் சென்றன. பெரும்பாலான தெலுங்கு இலக்கணங்கள் சமற்கிருதச் சொற்களையே பயன்படுத்தியுள்ளன.

 முனைவர் சி.சாவித்ரி
            உதவிப் பேராசிரியர்
            இந்திய மொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
            தமிழ்ப் பல்கலைக் கழகம்
           தஞ்சாவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன