செவ்வாய், 1 ஏப்ரல், 2025

உழுவை வண்டியின் வரவு

ஈரெரு தொவ்வொரு

வீட்டிலும் நிற்க

ஈரச் சாணம் தெளித்திருக்கும்

வாசலின் முன்புறம்

கிருமிகள் நெருங்க

அஞ்சுமே உழுவைவரவு

அனைத்தும் மறைந்தோ டியதே கண்டாய்! 

          (கலித்தாழிசை)

ஞாயிறு, 30 மார்ச், 2025

தந்தைக் கொடை

அண்டை நாடும் சென்ற அப்பன்

அயலார் ஏசா வண்ணம் நின்றனன்

உந்தன் பிள்ளை அன்பும் காணாது

உந்தன் இல்லாள் அன்பும் காணாது

உந்தன் பிள்ளை மணமும் பாராது

பெற்ற பட்டம் பாராது

கொள்கை நின்று வென்றாய் வெந்தே 

(நேரிசை ஆசிரியப்பா)

(நன்றி: எழுத்து.காம், 17 செபுதம்பர் 2014)

புதன், 26 மார்ச், 2025

காடு - நாடகம் - மாற்றுக்களம்

உலக நாடக நாள் கொண்டாட்டத்தில் கோவை மாற்றுக்களம் நாடகக் குழுவினர் காடு நாடகத்தை அரங்கேற்றினர். நாடகம் சிறப்பாக நடைபெற்றது. என் குழந்தைகள் கண்டு இன்புற்றுனர். நீண்ட நாட்கள் கழித்து பேரா. த. திலிப்குமார், அன்பர் நந்தகிசோர், கெளதம் ஆகியோரைச் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி... 
தொடக்கம் முதல் இறுதி வரை சிறந்த வாழ்வியலை வாழ்ந்தார்கள் நாடகக் கலைஞர்கள் என்றே கூறவேண்டும்.

ஞாயிறு, 23 மார்ச், 2025

பெற்றோரும் கல்வியும்

உந்தன் கால்கள் அம்மையாக

உப்பங் கால்வாயா லுண்டாக

காய்ந்தமீனும் பெட்டிக் குள்ளே

கால்நடையாய் பல்லூர்சென்று விற்றாயே

தலையிலொன்றும் இடுப்பில் ஒன்றும்

தண்ணீர்ப் புட்டிதூக்கி வந்தாயே

கூரருவா கொண்டு குத்தும்

கூர்முள் நீக்கிவெட்டி மூட்டினாயே

பாத்திப்பாவி மிளகாய்ப் பாவிட

பதர்நீக்க குனிந்தாயே வில்லாய் 

கன்றுநட்டு பழம்நீக்கி விற்றாயே 

கடைகொணர்ந்து பெற்றாயே காசு

கற்க கூடுதல் இல்மீதியாம் 

கொஞ்சும் மழலைப் பேச்சும்

அன்பும் கண்டி டாமல்

சென்றிட் டாரே பொருளீட்ட அயல்நாடே! (கலித்தாழிசை)

(நன்றி: எழுத்து.காம், 28 ஆகட்டு 2014)

ஞாயிறு, 16 மார்ச், 2025

தாய்க் கொடை

காய்ந்த மீனும்

முற்று நெல்லும்

காய்ந்த வத்தலும் விற்று

விறகைக் குன்று போலடுக்கி

தீமூட்ட பெற்ற தீங்கரியும்

கொண்டு விற்று

கற்க முக்கா லீந்து

காலொன் றும்இல் வென்றா யம்மே!

(கலித்தாழிசை)

(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)