திங்கள், 10 பிப்ரவரி, 2025

தமிழ்த் தகுதி, மதிப்பீட்டுத் தேர்வு (SSLC Standard – 100 Questions)

 அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து:

விக்கிமூலத்தில் ஐங்குறுநூற்றுத் தரவு மேம்பாடு

அறிமுகம்

விக்கிமூலத்தில் தமிழ்மொழியின் தரவுகளை மேம்படுத்துவதுதான் தமிழார்வலர்களின் முதன்மையான பணியாகும். ஐங்குறுநூற்று இலக்கியத்தைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் ஐங்குறுநூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளை இந்த ஆய்வு முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆராய்கின்றது.

திங்கள், 3 பிப்ரவரி, 2025

விக்கிமூலத்தில் நற்றிணைத் தரவு மேம்பாடு

அறிமுகம்

விக்கிமூலத்தின் வழியாகத் தமிழ்மொழிக்கான இணையவாசல் திறந்துள்ளது. இதில் தமிழ்மொழியின் தரவுகளை மேம்படுத்துவதுதான் தமிழாய்வர்கள், தமிழார்வலர்களின் கடமையும் பணியுமாகும். ஏனெனில் தொல்காப்பியம் தொடங்கி பல்வேறு இலக்கியங்களைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் நன்றிணையின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்ற வேண்டிய வழிமுறைகளை இந்த ஆய்வு முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆராய்கின்றது.

புதன், 29 ஜனவரி, 2025

முல்லைப்பாட்டின் சிறப்பு – ஒரு ஆய்வு (சாட்சிபிடி விளக்கம்)

முன்னுரை

முல்லைப்பாட்டு தமிழ்ச் சங்க இலக்கியங்களுள் புகழ்பெற்ற ஒரு சிறப்புமிக்க படைப்பாகும். இது அகத்திணையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதனுள் தற்கால வாழ்வியலையும், போரியலையும் இணைத்துத் தமிழர் சமூகத்தின் முழுமையான வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. இயற்கையின் அழகு, காதலின் ஆழம், வீரத்தின் மகத்துவம், பாசறையின் அமைப்பு, வெற்றியின் பெருமையெனப் பல்வேறு அம்சங்களைச் சொல்லிக்காட்டும் காப்பியமென இது விளங்குகிறது.

முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

கார்காலத்தில் மழைபொழியும் மாலை நேரம்

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி        

பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,                 (1 - 6)


அருஞ்சொற்பொருள்: 

1. நனம் = அகற்சி; தலை = இடம்; வளைஇ = வளைத்து; நேமி = சக்கரம்; 2. வலம்புரி = வலமாகச் சுழிந்திருக்கும் சங்கு; பொறித்த = வைத்த;  மா = திருமகள்; தாங்கு = தாங்குகின்ற; தடக்கை = பெரிய கை; 3. நீர் செல = நீரை வார்க்க; நிமிர்ந்த = உயர்ந்து நின்ற; மாஅல் = மால் = திருமால்;  4. பாடு = ஒலி; இமிழ்தல் = ஒலித்தல்; பனிக்கடல் = குளிர்ந்த கடல்; பருகி = குடித்து; வலன் = வலிமை; ஏர்பு = எழுந்து; 5. கோடு = மலை; கொண்டு = குறித்து (நோக்கி); கொடுஞ் செலவு = விரைந்து செல்லல்; எழிலி = மேகம்; 6. பெயல் = மழை; பொழிந்த = பெய்த; சிறு = சிறுபொழுது; புன் = துன்பம்.