புதன், 17 பிப்ரவரி, 2021

தமிழியல் ஆய்வுகள் : அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும்

 தமிழாய்வுத்துறை - பிஷப் ஹீபர் கல்லூரி & 'இனம்' பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் இணைந்து நிகழ்த்தும்

பன்னாட்டுக் கருத்தரங்கம் : 
 *"தமிழியல் ஆய்வுகள் : அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும்"* 

நாள் : *22.2.2021* (திங்கட்கிழமை)
இந்திய நேரம் : பிற்பகல் 2.00 - 4.30

தடம் : *Zoom* 

https://us02web.zoom.us/j/82721473444?pwd=bWpWaEIyZUtoUDZpdnZmRXpRUkF3UT09

Meeting ID: 827 2147 3444
Passcode: 756703

புதன், 6 ஜனவரி, 2021

விக்கித் திட்டங்கள் - அறிமுகம்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ் மன்றத்தின் சார்பாக "விக்கித்திட்டங்கள் - அறிமுகம்" எனும் பொருண்மையிலான நிகழ்வு 07.1.2020 அன்று பிற்பகல் 5.00 முதல் 6.00 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். பயிற்றுநராக செல்வன் அ.ஆர்லின்ராஜ் (II பி.காம்.சி.ஏ., வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்) அவர்கள் கலந்து கொண்டு விக்கியில் பங்களிப்புச் செய்ய பயிற்சியளிக்க உள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள :-

https://meet.google.com/uik-jjxw-wnv (கூகுள்மீட்)

ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் சு.செல்வநாயகி
பேரா.ப.இராஜேஷ்
முனைவர் த.சத்தியராஜ்

சனி, 6 ஜூன், 2020

கணித்தமிழ் கற்க/கற்பிக்க வேண்டிய அறிதல்கள்

கணித்தமிழ் என்றால் என்ன?

கணித்தமிழ் என்பது கணினிவழி இயங்கும் தமிழ் எனக் குறிப்பிடலாம். இதை இப்படியும் புரிந்துகொள்ளலாம். கல்லில் எழுதப்பட்ட தமிழ்மொழியைக் கல்வெட்டுத்தமிழ் என்கிறோம். அதுபோலத்தான் கணினியில் எழுதக்கூடிய அல்லது கணினியில் இயங்கக்கூடிய தமிழைக் கணித்தமிழ் என்று இன்று நாம் அழைக்கிறோம். கணினிக்குத் தெரிந்தது 0, 1 என்ற எண் மட்டுமே.

செவ்வாய், 2 ஜூன், 2020

மதிப்பீட்டுரை - தெலுங்கு-தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள்


தமிழும் தெலுங்கும் உறவுடைய மொழிகள். திராவிடத்திலிருந்து இவ்விரண்டும் பிரிந்தது என்பது அறிஞர்கள் கருத்து. திராவிடர் என்றாலே அது தமிழர் எனக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அறிஞர்கள் பார்வையில் இருந்து வருகிறது. தமிழர்தம் பார்வையில் திராவிடர் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அது இருக்கட்டும் ஆய்வாளர் ஆ.ஈஸ்வரன் ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தும் அதன் பின்பும் மேற்கொண்ட ஆய்வுகளை ஒரு பொருண்மை கருதி தெலுங்கு - தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள் (உறவுநிலை - இலக்கியம் நூலாய்வு) எனும் தலைப்பில் தொகுத்து நூலாக்கியுள்ளார். இம்முயற்சி வரவேற்கத் தக்கதும் பாராட்டுக்குரியதும் ஆகும்.து நிற்க.

வியாழன், 28 மே, 2020

உள்ளடக்கமும் நடத்தை விதிகளும் 1

நீங்கள் சட்டபூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே உடேமியைப் பயன்படுத்த முடியும். உடேமி இணைய மேடையில் நீங்கள் இடுகையிடும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் தாங்கள்தான் பொறுப்பு. உடேமி நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சட்டத்திற்கு ஏற்ப நீங்கள் பதிவேற்றும் மதிப்புரைகள், கேள்விகள், பதிவுகள், படிப்புகள் இன்னும் பிற உள்ளடக்கங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்க வேண்டும். பெரிய குற்றங்களுக்காக உங்கள் கணக்கை உடேமி தடை செய்யலாம். உடேமி இணைய மேடையில் உங்கள் பதிப்புரிமையை யாராவது மீறுவதாக நீங்கள் நினைத்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.