திங்கள், 30 டிசம்பர், 2024

தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-3) Tholkaappiyam - Nunmarabu (Python Text-3)

அறிமுகம்

முந்தைய இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை பூ 2 இதழ் 2, 3-களில் தொல்காப்பியம் அறிமுகம், பைத்தான் அறிமுகம், பைத்தான் நிரல் எழுதும் முறை, தொல்காப்பிய நூற்பாவைப் பைத்தான் நிரலாக மாற்றும் முறைமைகளை அறிந்தோம். அவை தொல்காப்பிய நூன்மரபு முதல் ஏழு நூற்பாக்களுக்கு பைத்தான் நிரலாக்கமுறையில் விளக்கம் தரப்பெற்றதாகவும் பைத்தான் நிரல் உருவாக்கும் வழிமுறைககளை விளகுவதாகவும் அமைந்தன. அதன் தொடர்ச்சியாகத் தொல்காப்பிய நூற்பா 8-ற்கு ஆணைத்தொடர் (Algorithm) உருவாக்கிப் பைத்தான் நிரல் எழுதும் வழிமுறையை  இக்கட்டுரை இயம்புகின்றது. 

திங்கள், 23 டிசம்பர், 2024

தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-2) Tholkaappiyam - Nunmarabu (Python Text-2)


சென்ற இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை பூ 2 இதழ் 2-ல் தொல்காப்பியம் அறிமுகம், பைத்தான் அறிமுகம், பைத்தான் நிரல் எழுதும் முறை, தொல்காப்பிய நூற்பாவைப் பைத்தான் நிரலாக மாற்றும் அறிந்தோம். அதில் தொல்காப்பிய நூன்மரபு முதல் இரண்டு நூற்பாக்களைப் பைத்தான் நிரலாக்கமுறையில் விளக்கம் தரப்பெற்றது அல்லது அந்த நூற்பாவிற்குப் பைத்தான் நிரல் உருவாக்கும் வழிமுறை கூறப்பெற்றது எனலாம். அதன் தொடர்ச்சியாகத் தொல்காப்பிய நூற்பா 3 முதல் 7 வரையுள்ள நூற்பாக்களுக்குப் பைத்தான் நிரலாக்கம் எழுதும் வழிமுறையை  இக்கட்டுரை இயம்புகின்றது. 

வெள்ளி, 20 டிசம்பர், 2024

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2024

திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் 10.12.2024 (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த ஆட்சிமொழிப் பயிலரங்கில் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் / உதவியாளர் ஆகிய அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ் பயிற்சி / கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடுகுறித்த பயிற்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்கள். 

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2024

திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாப் பயிலரங்கம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் 19.12.2024 (வியாழாக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் / உதவியாளர் ஆகிய அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ் பயிற்சி / கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடுகுறித்த பயிற்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்கள். 

திங்கள், 16 டிசம்பர், 2024

தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை 1) Python via Tholkaapiyam Nuunmarapu

தொல்காப்பியத்தைப் பைத்தான் தொழில்நுட்பத்தோடு கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு இந்தப் பாடம் ஒரு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கின்றது. அப்படி என்ன அனுபவம் எனும் எண்ணம் உருவாகின்றதா? அது தொழில்நுட்ப முறையிலான விளக்கமாகும். அது என்ன தொழில்நுட்ப விளக்கம் என்ற வினா எழுகின்றதா? அது மனித மொழியைப் போன்று கணினி மொழியாகிய பைத்தான் அடிப்படையிலான விளக்கமாகும். இப்படி விளக்குவதனால் என்ன நடக்கும். தொல்காப்பிய விதிகளை மையமிட்ட தொழில்நுட்பம் உருவாகும். தட்டச்சுப் பிழைகளைச் சரிசெய்யும் நுட்பம் இன்னும் பொலிவுறும். இக்கால மாணவர்கள் மொழியைப் பிழையுடன் எழுதி வருவது பெரும் மன வருத்தைத் தருகின்றது. அதுவும் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உயிர், மெய், குறில், நெடில் எழுத்துக்களைக்கூட அவர்கள் கற்காமல் உயர்கல்வி வரை வந்திருக்கின்றனர். இதுபோன்ற நிலைகளை ஓரளவிற்கு எதிர்காலத்தில் குறைத்திட இதுபோன்ற கற்றலும் தேவைப்படும். தொழில்நுட்ப மேம்பாட்டில் விளையாட்டுக் குறுஞ்செயலிகள் உருவாக்கவும் இந்தக் கற்றல் மிக முக்கியமானதே. ஆகையால் இந்தக் கட்டுரை அதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. அதுமட்டுமின்றித் தொல்காப்பிய இலக்கணம் கணினி மொழிக்கு ஏற்ப எழுதப்பெற்றிருக்கும் சிறப்பையும் இக்கட்டடுரை வலியுறுத்துகின்றது.