மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
வெள்ளி, 29 ஜூன், 2018
திங்கள், 25 ஜூன், 2018
யாப்பியலும் கணக்கியலும்
இலக்கணச் செம்மை மிக்க மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. இதன் மரபிலக்கணங்கள் செய்யுளாக்கம் குறித்துத் தனிச்சிறப்பாகப் பேசியுள்ளன. குறிப்பாகத் தொல்காப்பியத்தில் செய்யுளியல் என்பதே அளவில் பெரிய பிரிவாகும். இவ்வியலுள் பாடுபொருளும் யாப்பும் இயைபுடன் விளக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர் எழுந்த இலக்கண நூல்கள், பாடுபொருளிலிருந்து யாப்பிலக்கணத்தை மட்டும் பிரித்துத் தனியாக இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விரு நிலைகளிலும் யாப்புறுப்புகளைத் தொகைவகை செய்தும் உறழ்ந்தும் காட்டும் முறைமைகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் கணக்கியல் எவ்வாறு பயன்பட்டுள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பொதுவாக, மொழியை (அ) செய்யுளை ஆராயப் புகும் இலக்கணம் என்பது ஓர் அறிவியல் துறையாகும். அதன் அடிப்படையில் பிற அறிவியல் துறைகளைப் போல யாப்பியலிலும் கணக்கியல் பயன்படுத்தப்பட்டிருப்பது தவிர்க்க இயலாதது.
தமிழில் நவீன உரைநடை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வளரத் தொடங்கியது. அதுவரை அனைத்துத் துறைசார்ந்த கருத்துகளும் செய்யுள் வடிவத்தில் தாம் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது தமிழர்கள் உரைநடையைவிடச் செய்யுட்களைக் குறுகிய நேரத்திற்குள் பாடி முடித்துவிடும் பழக்கத்தில் இருந்துள்ளனர். தமிழில் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு கணக்கதிகாரம், வானியல் நூல்கள் முதலானவை எழுதப்பட்டுள்ளன. இங்கு அவை குறித்துப் பேசாமல் யாப்பிலக்கணத்தில் கணக்கியலின் பயன்பாடு குறித்து மட்டும் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது.
https://www.inamtamil.com/yappiyalum-ka%E1%B9%87akkiyalum/
சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை
“எந்த ஒரு படைப்பாளியும், ஒரு படைப்பில் அடைய வேண்டிய உச்ச நிலையை நோக்கியதேடலில் ஈடுபடாமல் இருக்க இயலாது. அத்தகைய அவர்களின் தேடல்கள், பிற படைப்பாளியைப்பற்றிக் கூறுகிற கூற்றுக்கள், இலக்கியம் பற்றிய ஆழமான கணிப்புக்களாக அமைந்துகிடக்கின்றன” என்று க.பஞ்சாங்கம் (2011:43) படைப்பாளனையும் படைப்பையும் நிறுத்துப் பார்க்கிறார். அவ்வகையான படைப்பாகச் சொல் நிலம் அமைந்திருக்கிறது. இருப்பினும் சிற்சில முரண்களும், பிழைகளும் இல்லாமல் இல்லை. இது எந்தவொரு படைப்பும் முழுமையாகவோ பிழையற்ற தன்மையுடையதாகவோ அமைந்துவிடாது என்பதைக் காட்டுகிறது. தொடக்கக்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இவ்வரிசையில் நிறுத்திப் பார்க்கமுடியும். அதனைக் கருத்தில் கொண்டு சொல் நிலம் எனும் கவிதைத் தொகுப்பின் வெளிப்பாட்டுத் திறனைப் பார்க்க முயலுகிறது இவ்வெழுத்துரை.
சீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (ONE BELT ONE ROAD) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு
இந்துமகாசமுத்திரத் தீவில் தன்னிறைவு கொண்ட அரசாட்சியின்வழி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய செயற்றிட்டங்களை நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பேண்தகு அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பதேயாகும். இலங்கை நாடானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அந்நிய நாட்டவரின் கைக்குள் சொல்பேச்சுக் குழந்தையாகிச் சிக்கித் தவித்தது. அத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் என்ன பயன்? இன்று சர்வதேச வர்த்தகம், அபிவிருத்தி என்னும் பெயரில் உலக நாடுகளின் சதிவலைகளில் இலங்கையும் வீழ்ந்திருக்கிறது.
வாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழர்
இன்றைய தமிழ்ச் சமூகத்தளத்தில் ‘பாலியல்’ என்பது ஒரு தீண்டத்தகாத சொல். அதனால்தான் சில முக்கியமான தமிழ் அகராதிகளில் கூட (அபிதான சிந்தாமணி, நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி) இச்சொல் காணப்பெறவில்லை. ஆனால், இச்சொல் ஒரு தெளிவான பொருளுடையது. இருப்பினும், இது தீண்டத்தகாத, கெட்ட வார்த்தையாக மாறியது எப்போது? என்ற வினா ஆய்ந்து சிந்தித்தற்குரியது.
பாலியல் = பால் + இயல். இச்சொல் ஒவ்வொரு பாலுக்குமான (ஆண்பால், பெண்பால்) இயல்பைக் குறிக்கக் கூடியது என்று இதற்குப் பொருள் குறிக்கலாம். உயிரினங்களின் இயல்புகள் குறித்து நோக்கினால், அவற்றின் முக்கிய இயல்பாகக் கருதப்பெறுவது இனப்பெருக்கமாகும். இந்த இனப்பெருகத்திற்குப் பாலியலறிவு கட்டாயம் தேவை. இந்த அளவிற்கு முக்கியமான சொல்லைத் தீண்டத்தகாத சொல்லாக மாற்றியது நம் அறியாமையன்றி வேறென்ன?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)