திங்கள், 3 ஜனவரி, 2022

நானும் அண்ணனும் (முதுபெரும்புலவர் கொளுந்துறை இராமதாசர் சுவாமிகள்)

- சிவஞானதாசர்

D:\mudukulathur pulavar\b&W pic\siva.jpgஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துறை எனும் ஊரில் பழனியாண்டி பெருமாத்தாள் ஆகிய இருவருக்கும் 07.11.1916 ஆம் ஆண்டு பிறந்தவரே இராமதாசர். சிறுவயது முதல் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய எனது அண்ணன் இராமதாசர் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு மலேசியாவிற்கு சென்று தமிழ்ப் பணியாற்றியுள்ளார். மலேசியா மண்ணில் கல்வியறிவின்றி செப்பமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழர்களைக் கண்டு மதிப்புமிகுந்த நாகரிக வாழ்க்கைக்கு வழி காட்டியாக விளங்கியுள்ளார். செந்தமிழ்ப் பாடசாலைகளை நிறுவி கல்லாமை என்னும் இருளைப் போக்கியுள்ளார். தான் கற்ற கல்வி வாயிலாக வாழ்நாள் முழுவதும் சேவை மனப்பான்மையுடன் சிறந்துள்ளார். சமயப் பாகுபாடு பாராது மலேசிய மக்களுக்கு கோவில், மசூதி, கிறித்துவ ஆலயங்களையும் கட்டிக்கொடுத்துள்ளார். அவரிடம் பயின்ற மாணவர்கள் சிறந்த கவிஞர்களாகவும், சிறந்த ஆளுமைகளாகவும் விளங்கியுள்ளனர். எனது அண்ணன் இராமதாசர் வாழ்க்கை முழுவதும் தமிழுக்காகவும், தமிழருக்காவும் சேவையாற்றிய  28.4.1991 ஆம் ஆண்டு அதிகாலை 2 மணியளவில் இம்மண்ணைவிட்டுச் சென்றார். பிறந்த ஊரான கொழுந்துறையில் அவரது உடல் அடக்கச் செய்யப்பட்டுள்ளது. 

புதன், 29 டிசம்பர், 2021

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 2

பெண்கள் வெற்றிகொள்ள மாத்திரம் அல்ல. வெல்லப்படவும் விரும்புகின்றனர் - தாக்கரே

ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் - பீல்டிங்

எவ்விடத்தில் பெண் மதிக்கப்படுகிறாளோ அவ்விடத்தில் தேவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர் - மனுசாஸ்திரம்

பெண்ணிற்குப் பெருமை தருவது அவளது தூய்மையான இதயம் - கிளாடியசு

ஆண்கள் பார்வையைப் ெற்றிருக்கின்றனர்; பெண்கள் உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றனர் - ஹியூகோ

KRV

புதன், 24 நவம்பர், 2021

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 1

கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் பெண்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் - போவீ

பெண்களின் வாயைவிட அவர்களின் கண்களே அதிகம் பேசும் - காண்டேகர்

பெண் அடிமையாயிருந்தால் ஆண் சுதந்திரமாக இருக்க முடியாது - செல்லி

பெண்ணின் மடியிலே இறையன்பு வளர்கிறது - லாயர்

அன்பு இல்லாத பெண் வாசம் இல்லாத மலரைப் போன்றவள் – ரூசோ

பெண்களின் ஒரு கண் அன்பு ஒளியை வீசும்; மறுகண் யுக்தியால் எடைபோடும் - சார்லசு

KRV

புதன், 13 அக்டோபர், 2021

இதயம் - சில குறிப்புகள்

  • ஒரு நாளில் நம் இதயம் எத்தனை முறை துடிக்கிறது. - 115,000
  • ஒவ்வொரு நாளும் இதயத்தால் செலுத்தப்படும் இரத்த கேலன்களின் எண்ணிக்கை. - 2,000

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

பொருள் சார்ந்த நிரலாக்கத்தின் நான்கு அடிப்படை கொள்கைகள் யாவை? (What are four basic principles of Object Oriented Programming?)

ஒரு மொழியை பொருள் சார்ந்ததாக மாற்ற 4 முக்கிய கொள்கைகள் உள்ளன. இவை உறைதல் (Encapsulation), சுருக்கம் (Abstraction - டேட்டா அப்ஸ்ட்ராக்ஷன்), பாலிமார்பிசம் மற்றும் பரம்பரை. இவை பொருள் சார்ந்த நிரலாக்கத்தின் நான்கு தூண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.