சனி, 23 டிசம்பர், 2023

கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள்

மதிப்பிற்குரியீர், வணக்கம்.
இனம் - பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகின்றது. அதனடிப்படையில் இந்த முறை கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நாளும் பொழுதும் : 23.12.2023; (இந்திய நேரம்: மாலை 4.00-6.00)

வழி : கூகுள் கூடுகை (Google Meet) - https://meet.google.com/jpb-ufia-jod


செவ்வாய், 19 டிசம்பர், 2023

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் _ கணித்தமிழ்ப் பயிற்சி - திருப்பூர்

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.122023 வரையிலான ஒருவாரக் காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது.

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் ஒரு பகுதியாக 19:122023 (செவ்வாய்க் கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் 12:30 மணி வரை அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் /உதவியாளர் ஆகியோர்களுக்குக் கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்துப் பயிற்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ் பயிற்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு, கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்தும் பயிற்சியளித்தேன்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் - கணித்தமிழ்ப் பயிற்சி - கோவை

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27/12/1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குநரின் பார்வை (2) இல் உள்ள ஆணைக்கிணங்க கோயமுத்தூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரையிலான ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது.

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார ஒருபகுதியாக 18.12.2023 (திங்கள் கிழமை) அன்று முற்பகமல் 10.00 மணி முதல் 12.30 மணி வரை அரசு அலுவலகங்கள், வாரியங்கள் கழகங்கள் தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் /உதவியாளர் ஆகியோர்களுக்கு கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்துப் பயிற்சி கோயமுத்தூர் மாவட்ட ஒண்டிப்புதூர் கல்வியியல் கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் பயிற்சி கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் / கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்துப் பயிற்சி அளித்த்தேன்.

சனி, 16 டிசம்பர், 2023

இணையப் பாடங்கள் - கற்றல் - சான்றிதழ்கள்

 

நான் சிறப்புக் கல்வி (Great Learning) இணையம் மூலமாகக் கற்ற பாடங்களுக்குக் கிடைத்த சான்றிதழ்களை இங்குப் பகிர்கின்றேன். இதற்குக் காரணம் இதன் மூலமாவது என் வலைப்பூ வாசகர்களுக்கு அறியத் தரும் தகவலாக நான் கருதுகின்றேன். 

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

இனம் ஆய்விதழ் மீதான மதிப்பீடு

இனம் ஆய்விதழுக்கு வந்த மதிப்பீடு
....................................
ஒன்பதாண்டு உழைப்பிற்குக் கிடைத்த பலன் இதுபோன்ற கருத்துரைகளே... இனம் ஆய்விதழின் பத்தாம் ஆண்டுத் தொடக்கப் பதிப்பிலிருந்து (இதழ் 37) முன்னணி கணினி அறிவியல் ஆய்விதழான இசுபிரிங்கர் நேச்சர் லிங்க் இதழின் தரம் போன்று வரவிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
............................
மகிழ்ச்சி சத்தியராஜ் மற்றும் மூனிஸ்
என்னுடைய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. சில பிழைகள் இருக்கின்றன. என்னுடைய தட்டச்சு மற்றும் கணினி முறையே தவறுகளுக்குக் காரணம் என அறிந்து கொண்டேன்.
அகல்யாவின் ‘மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு’, சத்தியராின் ‘வள்ளலார் திருவருட்பா தெலுங்கு மொழிபெயர்ப்பு - பன்முகப்பார்வை”, இராசையா தேவேந்திரனின் ‘க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டலின் வினைத்திறனின்மையானது அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம்’ ஆகிய கட்டுரைகளையும் வாசித்தேன். மூன்றும் ஒரு திறத்தன. தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் நெறியில் ஆய்வு செய்யப்பட்டவை. ஆய்வேட்டிற்குரிய முறைமைகளையும் கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன. இதுபோல் ஆழமிக்கக் கட்டுரைகள் தமிழ் ஆய்விதழ்களின் வெளி வருவதில்லை. நமது இனம் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சி. தொடரட்டும் இப்பணி. வாழ்த்துக்கள்.

Dr. M.BALASUBRAMANIAN
ASSOCIATE PROFESSOR
TAMIL STUDIES & RESEARCH
ANNAMALAI UNIVERSITY
ANNAMALAI NAGAR
9488013050