திங்கள், 24 பிப்ரவரி, 2025

பரிபாடல் - தரவுமேம்பாட்டின் இன்றியமையாமை

அறிமுகம்

இந்தக் கட்டுரைக்காகப் பரிபாடலைப் படிக்கும் வாய்ப்பு நேரிட்டது. அப்போதுதான் பரிபாடலில் கிடைக்காதுபோன பாடல்கள் எத்தகைய பேரிழப்பு என்பதை உணர முடிந்தது. அத்தகைய தரவுகள் இத்தொகையில் நிறைந்துள்ளன. கிடைக்கும் 22 பாடல்களிலேயே இவ்வளவு தமிழ்த் தரவுகள் கிடைப்பின், கிடைக்காது போன எஞ்சிய பாடல்களால் எத்தகைய தமிழ்த்தரவுகள் கிடைத்திருக்கும் என்று எண்ணி வியப்பும், கிடைக்காது போனதை எண்ணி அயர்வும் உள்ளம் எய்துகிறது.

புதன், 19 பிப்ரவரி, 2025

குறில், நெடில் வேறுபாடு

இப்பகுதியில் 6 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான அனைத்துக் குறில், நெடில் வேறுபாடுபற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

  • தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

    • (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
      இடஞ்சுழி எழுத்துகள் – ட, ய, ழ

வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்

 வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிக்கு வரக்கூடிய இடங்கள் எவையென முன்பகுதியில் படித்தீர்கள். அல்லவா? இனி, இப்பதியில் அவ்வெழுத்துகள் மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சுட்டு, வினாச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
  • அவ்வளவு   +  பெரிது  =  அவ்வளவுபெரிது

  • இவ்வளவு  +  கனிவா  =  இவ்வளவு கனிவா?

  • எவ்வளவு  +  தொலைவு  =  எவ்வளவு தொலைவு?

திங்கள், 17 பிப்ரவரி, 2025

விக்கிமூலத்தில் புறநானூற்றுத் தரவு மேம்பாடு

 அறிமுகம்

புறநானூறு, சங்க இலக்கியத்தின் ஒரு முக்கியமான படைப்பு. இது பழந்தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், போர் முறைகள், வீரம், கொடை, அறம் போன்ற பலவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. எனவே, இந்த ஆய்வின் முதன்மை நோக்கம், புறநானூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளை ஆராய்வது ஆகும். இதற்காக, புறநானூற்றின் இலக்கியக் கூறுகள், வரலாற்றுப் பின்னணி, ஆய்வுகள் போன்றவற்றைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் இங்கே வழங்கப்படுகிறது.

புறநானூற்று இலக்கியத்தைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் ஐங்குறுநூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளையும் இந்த ஆய்வு முன்வைக்கின்றது.

புதன், 12 பிப்ரவரி, 2025

வல்லினம் மிகும் இடங்கள்

 

க், ச், (ட்), த், ப், (ற்)

க், ச், த், ப்

தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும்பொழுது கருத்திற்கொள்ள வேண்டுவனபற்றிச் சிறிது காண்போம்.

எழுதும்பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும்; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகா இடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும்; மொழி மரபும் சிதையும்.