திங்கள், 10 பிப்ரவரி, 2020

இனம், மலர் : 5 இதழ் : 20

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் - நாளை முதல் வாசிக்கலாம்.

பிப்ரவரி 2020 மலர் : 5    இதழ் : 20

February 2020 Volume V Issue 20
......................

உள்ளே ...
.......................

தமிழ்ச் செவ்வியல்

சங்க இலக்கியப் பதிவுகளில்

மருத நில விளையாட்டுகள்

Marutham Land games in Sangam literature

முனைவர் மூ.பாலசுப்பிரமணியன்/Dr.M.Balasubramanian I 4

https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/

திருக்குறளில் நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்)

Thirukuralil nilavu maraippu (sandirakiraganam)

முனைவர் இரா.இந்து/Dr.R.Indhu I 17

https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa/

பக்தி இலக்கியம்

திருமூலர் பற்றிய கதைகள் உணர்த்தும் உண்மைகள்

The Facts in behind of stories about Thirumular

முனைவர் ஆ.மணி/Dr.A.Mani I 24

https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

தற்கால இலக்கியம்

தூப்புக்காரி புதினத்தில் பண்பாடு - ஓர் ஆய்வு

    CULTURE OF THUPUKKARI  NOVEL

ரா.வனிதா /R.VANITHA I 30

https://inamtamil.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/

வாஸந்தியின் நாவலில்

மரபு உடைத்தலும் உரிமை பேணலும்

Vasnthi Navalil marapu udaithalum urimai penalum

பி.அனுராதா/P.Anurathan I 37

https://inamtamil.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa/

வரலாறு - சமூகவியல் - புவியியல் - கல்வியியல்

சோழர்கால வடமொழிக் கல்லூரிகள்

SANSKRIT COLLEGES IN CHOLA PERIOD

மு.கயல்விழி/M.kayalvizhy I 48

https://inamtamil.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0/

தமிழ், தெலுங்கு நுட்பவியல் கலைச்சொற்களின் அமைப்பும் மொழித்தூய்மையும்

Structure and Language Purity of Technical Terminology in Tamil and Telugu

முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri I 55

https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/

சர்வக்ஞர் பார்வையில் கடன் கொடுத்தலும் வாங்கலும்

(SARAVAJANAR PARVAIEL KADAN KODUTHTHALUM  VANGALUM)

முனைவர் சே.முனியசாமி/Dr S.MUNIYASAMY I 66

https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மீக்கோட்பாட்டாய்வு நோக்கில் திராவிடமொழிகளின் முதல் இலக்கண நூல்கள் (Meta Theory Concept in Dravidian First Grammars) - நன்றி மறவற்க

பல்கலைக்கழக மானியக்குழுவால் வழங்கப்பெற்ற நிதியுதவின்கீழ் "மீக்கோட்பாட்டாய்வு நோக்கில் திராவிடமொழிகளின் முதல் இலக்கண நூல்கள் (Meta Theory Concept in Dravidian First Grammars)" எனும் பொருண்மையில் மேற்கொண்ட ஆய்வு, கோவை இந்துஸ்தான் கல்லூரியில் தொடங்கி கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நிறைவுற்றது. இவ்வாய்வில் தொடர்ந்து பயணிக்க பல்வேறு வகையில் என் எழுத்துக்களில் இடம்பெற்ற தெளிவின்மைகளைத் திருத்த நெறிப்படுத்தி வரும் எம் பேராசிரியர் இரா.அறவேந்தன் அவர்களுக்கும், இவ்வாய்விற்கு ஒத்துழைப்பு நல்கிய இரு கல்லூரி நிருவாகத்தினருக்கும், இரு கல்லூரி முதல்வர்களுக்கும், இரு கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர்கள், உடன் பணியாற்றிய, பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், என் துணைவி இரா.நித்யா, என் குழந்தைகள் நி.ச.தமிழினி, நி.ச.பாவாணர் ஆகியோருக்கும், இவ்வாய் வைச் செய் என ஆற்றுப்படுத்திய என் மைத்துனர் பேரா.மு.முனீஸ் மூர்த்தி அவர்களுக்கும் ஒப்படைப்புச் செய்யும் ஐயங்களைத் தெளிவுபடுத்திய பேரா.பரமசிவன் அவர்களுக்கும் இதற்கு மறைமுகமாக உதவியவர்களுக்கும் நேரடியாக உதவி நல்கியவர்களுக்கும் நன்றியுடையனாவேன்.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

மொழிபெயர்ப்புக் கலை

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தேன்தமிழ் மன்றம் சார்பாக "மொழிபெயர்ப்புக்கலை"
எனும் தலைப்பில்  மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கும் விதமாக சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. செல்வநாயகி வரவேற்றார். இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராகப்
பேராசிரியர் முனைவர்.பி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பின் வழிமுறைகளைக் கற்பித்தார். தமிழ், மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு மாணவர்கள் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பின் தேவையையும் பயன்களையும் வேலைவாய்ப்பையும் அறிந்துகொண்டு பயன் அடைந்தனர்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிகரங்களைச் செதுக்குவோம்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக "சிகரங்களைச் செதுக்குவோம்"
எனும் தலைப்பில்  மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கைப் பேச்சாளர்,
பேராசிரியை முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் இன்றைய தலைமுறை மாணவர்களின் கவனச்சிதைவு மற்றும் அவற்றின் காரணிகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீண்டு எவ்வாறு வாழ்வில் உயரலாம் எனவும்,
மாணவர்கள் தங்களைத் தாங்களே  செதுக்கிக் கொண்டு, தங்களுடைய  வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலானவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிகரங்களைப்போல் செதுக்கிக் கொண்டு சமுதாயத்தில் மிகப்பெரிய நிலையை அடைந்தனர் என்பது பற்றியும் அருமையாகப் பேசி மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சிகரங்களைச்செதுக்க ஊக்கப்படுத்தினார்.

செய்தியாக்கம்: பேரா.ப.இராஜேஷ்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020

“ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020” கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள்  தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். தமிழர் பாரம்பரியப்படி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். வழிபாட்டின் போது மாணவிகள் கும்மியடித்தல் போன்ற கிராமிய நடனங்களை ஆடிப்பாடிக் கொண்டாடினார்கள். இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு கோலம் போடுதல், ரங்கோலி வரைதல், கயிறு இழுத்தல், உறியடித்தல், சாக்குப்போட்டி, லெமன் மற்றும் ஸ்புன், பலூன் உடைத்தல், கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கிப் பொங்கல்  வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தமிழர் பாரம்பரிய அங்காடிகள் திறக்கப்பட்டு பல்வேறு பாரம்பரிய பொருட்கள் விற்கப்பட்டன.  

செய்தி ஆக்கம் : பேரா.ப.இராஜேஷ்