சனி, 10 ஆகஸ்ட், 2013

தொல்காப்பியம் - பாலவியாகரணம் எச்சவியல் ஒப்பீடு!



தொல்காப்பியர்1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ்.  தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது.  இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை பெற்று விளங்குகிறது. தெலுங்குமொழி சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைச் சார்ந்தது.  தெலுங்கின் முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி (நன்னயப்பட்டு, கி;.பி.11). இந்நூலின் பெரும்பகுதி சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்பின், பன்னூறாண்டுகள் கழித்து மாணவர்களுக்காக தெலுங்கில் பாலவியாகரணம் (சின்னயசூரி, 1858) இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் பாலவியாகரணத்திலும் எச்சவியல் இடம்பெற்றுள்ளது.  அவ்வியல்களின் கருத்தியல்களை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. [மின்னஞ்சல் முகவரி: neyakkoo27@gmail.com ] .....முழுவதும் வாசிக்க  http://www.geotamil.com/pathivukalnew/sathiyaraj.pdf
Last Updated on Tuesday, 09 April 2013 18:403. தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு


தொல்காப்பியர்1.0. முகப்பு
தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்
 தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் மட்டுமின்றி எழுத்ததிகாரத்திலும் பொருளதிகாரத்திலும் சொல் குறித்த விளக்கங்களை முன்வைத்துள்ளார். இருப்பினும் சொல்லதிகாரத்தில்தாம் விரிவாக பேசியுள்ளார். அஃது தொடரியல், சொல்லியல்  என்றாயிரு வகைகளில் அமைந்துள்ளது.

 இனித் தொல்கப்பியர் வகுத்த சொற்பாகுபாடு குறித்துக் காண்போம். இவர் சொல்லுக்கான விளக்கத்தை ஒன்பது இயல்களில் விளக்கியுள்ளார். அவ்வொன்பது இயல்களுள் கிளவியாக்கம் வேற்றுமையியல் வேற்றுமைமயங்கியல் விளிமரபு ஆகியன தொடரியல் குறித்தும், பெயரியல் வினையியல் இடையியல் உரியியல் ஆகியன சொல்லியல் குறித்தும், எச்சவியல் எஞ்சியவற்றையும் விளக்குகின்றன(தெய்வச்சிலையார் 2003:58).

 விளிமரபு தனிச்சொல் பகுதியுடன் வைத்து எண்ணத்தக்கது எனவும், எச்சவியலைத் தொடரியலுடன் வைத்து எண்ணத்தக்கது எனவும் கருத்து நிலவுகிறது(செ.வைசண்முகம் 2004:1). இவ்வாறு சொல்லுவது ஒருபுறத்தார் கருத்து. மற்றொருபுறத்தார் தொல்காப்பியர் தனிசொற்களாக எண்ணியவை பெயர், வினை, இடை, உரி என்பவைகளையே எனக் கருதுகின்றனர்(தூ.சேதுபாண்டியன்,2013, அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் உயராய்வுப் பயிலரங்கின்போது கருத்துரைத்தக் கருத்து). இவ்வாறு கருத்து முரண்பாடுகள் இருப்பினும் தொல்காப்பியர் தொடரியல், சொல்லியல் குறித்த கருத்துக்களையே முன்வைத்துள்ளார் என்பது வெள்ளிடைமலை.
2.1. தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்பட்டவை
 தொல்காப்பியர் தனிச்சொற்களாக எண்ணியவை நான்கு. அவை: பெயர், வினை, இடை, உரி என்பன. இவற்றுள் இடையும் உரியும் தனிச்சொற்களாக எண்ணப்பட்டாலும் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.155).
2.1.1. பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் வேற்றுமை ஏற்கும்; காலம் ஏற்காது என்பது விதி. இதனைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
 பெயர் < + வேற்றுமை >  < - காலம் >
இவ்வாறு வேற்றுமை ஏற்று வரக்கூடிய பெயர்களை உயர்திணை, அஃறிணை, இருதிணைப்பொது(விரவுத்திணை) எனப்பகுத்து விளக்கியுள்ளார்.
2.1.2. வினைச்சொல்
 பெயர்ச்சொல் போன்றே வினைச்சொல்லும் உயர்திணை, அஃறிணை, இருதிணைப்பொது(விரவுத்திணை) என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரையறுக்கப்பட்ட சொற்கள் காலத்தை மட்டுமே ஏற்கும் என விதி கூறப்பட்டுள்ளது. இதனைத் தொல்காப்பியர்,
  வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
  நினையுங் காலைக் காலமோடு தோன்றும்  (சொல்.192)
எனவரும் நூற்பாவில் தெளிவுபடுத்துகிறார். இவ்விதி முறையைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.   
வினை < - வேற்றுமை >  < + காலம் >
2.1.3. இடைச்சொல்
மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மன்ற, தஞ்சம் போல்வன வரும் சொற்கள் இடைச்சொற்கள் வகைத்து என்பார் தொல்காப்பியர். இவர் இடையியலில் நாற்பத்து மூன்று சொற்கள் குறித்து விளக்கியுள்ளார். இச்சொற்கள் சொற்களின் முன்னும் பின்னும் மொழியடுத்தும் தம்மீறு திரிந்தும் பிறிதோர் இடைச்சொல்லையடுத்தும் வருதல் உண்டு(சொல்.248).
எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்ட புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதவும் சொற்களும், வேற்றுமையியலில் சொல்லப்பட்ட வினைசெயல் மருங்கின் காலமொடு தோன்றும் சொற்களும், இடையியலில் விளக்கப்பட்டுள்ள அசைநிலைக்கிளவி, இசைநிறைக்கிளவி, தத்தம் குறிப்பில் பொருள் செய்குபவை ஆகிய சொற்களும் இடைச்சொற்கள் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.247).
2.1.4. உரிச்சொல்
 உறு, தவ, நனி, உரு, புரை, குரு, கெழு, செல்லல், இன்னல், ஏ, உகப்பு, உவப்பு, பயப்பு போல்வன உரிச்சொற்கள் என்பார் தொல்காப்பியர். இவர் உரியியலில் நூற்றிரண்டு சொற்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.
 இவ் உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு, வினை, ஒருசொல் பல்பொருள், பலசொல் ஒருபொருள், பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களுடன் சொல்லல், தத்தம் மரபில் வருபவை, பொருள் வேறுபாடு தரும் சொற்கள் என்பனவாக அமையும் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.293).
2.2. தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்படாதவை
 செய்யுள் ஈட்டச்சொல், தொகைச்சொல், ஒருசொல்லடுக்கு, எச்சச்சொல் போல்வன தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்படாத வகைப்பாட்டைச் சார்ந்தவை எனலாம்.
2.2.1. செய்யுள் ஈட்டச்சொல்
 இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன செய்யுள் ஈட்டுவதற்குரிய சொற்கள்(சொல்.393). இவற்றுள் இயற்சொல்லாவது செந்தமிழ் நாட்டு வழக்கோடு பொருந்தி தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல்லாகும்(சொல்.394). திரிசொல்லாவது ஒரு பொருள்குறித்த வேறுசொல், வேறுபொருள் குறித்த ஒருசொல் என அமைந்து வருவதாகும்(சொ.395). திசைச்சொல்லாவது செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்துமுள்ளார் தத்தம் குறிப்பால் வெளிப்படுத்தும் சொல்லாகும்(சொல்.396). வடசொல்லாவது வடக்கேயிருந்து கடன் வாங்கப்பட்ட சொல்லாகும்(சொல்.397). இஃது வடமொழி மரபைப் பின்பற்றுபவர்களின் தத்சமக் கொள்கைக்கு ஒப்பானது(பிரயோகவிவேகம் 1973:77).
  எ – டு. சோறு, கூழ், பால், மரம்     - இயற்சொல்
   கிள்ளை(கிளி), மஞ்ஞை(மயில்) - திரிசொல்
   ஆ, எருமை – பெற்றம்                  - திசைச்சொல்
   வாரி, மேரு, குங்குமம்                  - வடசொல்.
2.2.2. தொகைச்சொல் 
 தொகைச் சொல்லாவது :- பொருளுணர்த்துஞ் சொல்லாயினும், தொழிலுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு சொல் விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப்பெயர் என்னுங் குறியும் பெறும் என்பார் தெய்வச்சிலையார்(2003:255). இத்தொகைச்சொற்கள் ஆறு வகைப்படும். அவை: வேற்றுமை, உவமை, வினை, பண்பு, உம்மை, அன்மொழி என்பன(தொல்.407).
 எ –டு. ஒருகுழை ஒருவன் போல் (கலி.26:1) - வேற்றுமைத்தொகை
  புலிப்பாய்த்துள்                                                    - உவமத்தொகை
  ஆடரங்கு, செய்குன்று                                        - வினைத்தொகை
  கரும்பார்ப்பன், கரும்பார்ப்பினி                         - பண்புத்தொகை
  தூணிபதக்கு, தொடியரை                                   - உம்மைத்தொகை
  வெள்ளாடை, பொற்றொடி                                 - அன்மொழித்தொகை.
2.2.3. ஒருசொல்லடுக்கு
 ஒரு சொல் இரண்டு முறைக்குமேல் வந்து அடுக்கி நிற்பதை ஒரு சொல்லடுக்கு அல்லது அடுக்குத்தொடர் என்பர். இச்சொற்கள் இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல் என மூவகைப்படும்(சொல்.418).
  எ – டு. ஏஏ ஏஏ அம்பல் மொழிந்தனள் - இசைநிறை
   மற்றோ மற்றோ                                    - அசைநிலை
   போம் போம், அவன் அவன்                - பொருளொடு புணர்தல்.
2.2.4. எச்சச்சொல்
 எஞ்சி நின்ற பொருள் உணர்த்துபவை எச்சச்சொற்களாகும். இவை பத்து வகைப்படும். அவை: பிரிநிலை, வினை, பெயர், ஒழியிசை, எதிர்மறை, உம்மை, என, சொல், குறிப்பு, இசை என்பன(சொல்.423).
  எ – டு. அவனே கொண்டான்  - பிரிநிலை
   உழுது வந்தான்                         - வினை
   உண்ணும் சாத்தன்                   - பெயர்
   கூரியதொரு வாள்மன்            - ஒழியிசை
   யானே கொள்வேன்                 - எதிர்மறை
   சாத்தனும் வந்தான்                  - உம்மை
   ஒல்லென ஒலித்தது                - என
   தீங்கு அட்டான்                         - குறிப்பு
   வயிறு மொடுமொடுத்தது       - இசை
   தேனென் கிளவி(எ.340)            - சொல்.
3.0. பாலவியாகரணமும் சொற்பாகுபாடும்
 சின்னயசூரி என்பார் ஆந்திர நாட்டைச் சார்ந்தவரும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமாவார். இருப்பினும் அவரின் பிறப்பும் பணிச்சூழலும் தமிழகமாக அமைந்துவிட்டது(சத்தியராஜ், பதிவுகள் இதழில் குறிப்பிட்ட கருத்து). அவ்வாறு அமைந்திடினும் ”...தமிழ், பிராகிருதம் ஆகிய மொழிகளையும், இலக்கணங்களையும் குருவழிக் கல்வி மூலம் தொடர்ந்து பயின்றார்...”(இராதாகிருஷ்ணா 1999:9) எனும் கருத்து இங்கு சுட்டிக்காட்டத்தகுந்தது.
 அவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் தெலுங்கைக் கற்பதற்காக இலக்கணநூலொன்று எழுத எண்ணம் கொண்டார். அவ்வெண்ணத்தின் வெளிப்பாடே பாலவியாகரணம்(கி.பி.1858) ஆகும். இஃது சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுந்த நூலாகும்.

 இப்பாலவியாகரணம் பத்துப் படலங்களால்(பரிச்சேதங்களால்) ஆனது. அவை: சஞ்ஞா, சந்தி, தத்சமம், ஆச்சிகம், காரகம், சமாசம், தத்திதம், கிரியா, கிருதந்தம், பிரகீர்ணகம் என்பன. இனி, சின்னயசூரியின் சொற்பாகுபாடு குறித்துக் காண்போம். இவரின் சொற்பாகுபாட்டில் தத்சமம், தத்பவம், தேசியம், கிராமியம், ஆச்சிகம், நாமம், தத்திதம், கிரியா, கிருதந்தம், ஆம்ரேடிதம் ஆகியனவற்றைக் காணமுடிகின்றது.
3.1. தனித்து எண்ணப்பட்டவை
 தத்சமம், ஆச்சிகம், சமாசம், தத்திதம், கிரியா, கிருதந்தம் ஆகியன மட்டுமே தனித்து எண்ணப்பட்டவையாகத் தெரிகின்றது.
3.1.1. தத்சமம்
 தத்சமம் என்பது சமசுக்கிருத பிராக்கிருத சொற்களுக்கு நிகரன(ஒப்பான) சொற்கள் என்பது பொருள்(சஞ்19). இதன் விரிந்த சிந்தனையே தத்சம பரிச்சேதம் எனும் படலமாகும்.
சமசு. சமசு.சமம்     பிராக்.      பிராக்.சமம்
ராம: ராமுఁடு3         -               -
ஹரி: ஹரி               -               -
கடு: -                       காரோ      காரமு
ஜடா -                      ஜடா3        ஜட3
3.1.2. ஆச்சிகம்
 ஆச்சிகம் என்பதற்குத் தூய தெலுங்குச் சொல் என்பது பொருள். இச்சொற்கள் சமசுக்கிருத பிராக்கிருதங்களுடன் எவ்வித தொடர்புமின்றி வழங்குவதாகும். அதனை,
 த்ரிலிங்க3 தே3ஸ2வ்ய வஹார ஸித்3த4ம் ப3கு3 பா4ஷ தே3ஸ்2யம்பு3   (சஞ்.20)
எனவரும் உரைநூற்பா விளக்குகிறது. இவ்விலக்கணம் ஆச்சிகத்திற்குரியதாக எவ்வாறு கருதப்பெறும் என எண்ணத்தோன்றும். இதன்கண் சொல்லப்பட்ட திரிலிங்கம் என்பது மூன்று எல்லைகளைக் குறிக்கும் சொல்லாகும். அவ் எல்லைகளுக்குள் வழங்கப்படும் சொற்களே தேசியச் சொற்கள். இச்சொற்கள் யாவும் தூய தெலுங்குச் சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலின் சஞ்ஞாவில் அதன் இலக்கணம் கூறி, பின்பு ஆச்சிகப்பரிச்சேதத்துக்கண் விவாகப் பேசியுள்ளார்.
  எ – டு.  ஊரு, பேரு, முல்லு, இல்லு, கோட.
3.1.3. சமாசம்
 சமாசம் என்பது தொகைச்சொல் ஆகும். இச்சொற்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து வருவதாகும். இச்சொற்களுக்கான விளக்குமுறை தனித்தப் படலத்துக்கண் பேசப்பட்டாலும் பிற படலங்களிலும் இடம்பெறுகின்றன. அவர்தரும் சமசங்களாவன: கருமதாரயம்(பண்புத்தொகை), பஹூப்ரீஹி(அன்மொழித்தொகை), துவந்தம்(உம்மைத்தொகை), துவிகு(எண்தொகை), தத்புருஷம்(வேற்றுமைத்தொகை) எனபன.
எ –டு
ஆசந்த3மு            - கருமதாரயம்
அந்நத3ம்முலு     - துவந்தம்
முக்கண்டி            - பஹூப்ரீஹி
முச்சிச்சு               - துவிகு
நெலதால்பு           - தத்புருஷம்.
3.1. 4. தத்திதம்
 தத்திதம் என்பது பெயரொட்டு ஆகும். அஃதாவது பெயர்ச்சொற்களை அடுத்து வரும் ஒட்டுக்களைச் சார்ந்தது. இதனைத் தத்திதப்படலத்துக்கண் விளக்கியுள்ளார். இப்படலத்துக்கண் அமையப்பெற்ற ஒட்டுக்கள் பின்னொட்டுக்களே.
  எ – டு. நல்ல + ந = நல்லந, தெல்ல + ந =தெல்லந.
3.1.5. கிரியா
 கிரியா என்பது வினைச்சொல் ஆகும். சின்னயசூரி தெலுங்குக்குரிய வினைச்சொற்களை காரகம்(பெயர்ச்சொற்கள் வேற்றுமையை ஏற்ற பின்பு சேரும் வினைகள் பற்றி விளக்கும் பகுதி), கிரியா, கிருதந்தம் ஆகிய படலத்துக்கண் விளக்கியுள்ளார். கிரியா படலத்துக்கண் விளக்கப்பெற்றவை வினையின் அடிச்சொற்கள்(தாது) உருபுகள் ஏற்கும் தன்மையையாகும்.
  கிரியா < + உருபு > < + காலம் >
இங்கு உருபு எனப்பட்டது வேற்றுமை உருபுகள் அல்ல ; இடையொட்டுக்கள் எனலாம்.
  எ – டு. வண்ட3க3லடு3 – வண்ட3ఁக3லரு, படி3ந – படி3ந்நு.
3.1.6. கிருதந்தம்
 கிருதந்தம் என்பது வினையொட்டு ஆகும். அஃதாவது வினைச்சொற்கள் ஒட்டுக்களை ஏற்கும் தன்மைக் குறிப்பதாகும். இதனைக் கிருதந்தபடலத்துக்கண் காணலாம். அங்கு விளக்கப்பட்டவை பின்னொட்டுக்களே.
  எ – டு. அலுகு3 – அலுக, ஆఁகு3 – ஆఁக, கொலுசு – கொலுபு, காசு – காபு.
3.2. தனித்து எண்ணப்படாதவை
 துருதம், கிராமியம், ஆம்ரேடிதம், பிராக்ருதுலு, தத்பவம், நாமம் ஆகியன தனித்தப்படலத்துக்கண் வைத்து எண்ணப்படாதவை.
3.2.1. துருதம்
 துருதம் என்பது நகர ஈறு ஆகும்(சஞ்.11). இத்துருதம் இருவகைத்து. ஒன்று துருதப்ரக்ருதுலு. அஃதாவது நகர ஈறுகளை இறுதியாகக் கொண்ட சொற்கள்(சஞ்12). மற்றொன்று களாலு. இஃதாவது நகரம் இற்தியாக வராத சொற்கள்(சஞ்.13). இச்சொற்கள் குறித்த விளக்கங்களைச் சஞ்ஞாபடலம் முதற்கொண்டே காணலம்.
 எ-டு.  நந்நுந்,   நாசேதந்,  நாகுந்               – துருதப்ரக்ருதுலு
            அய்ய,  அம்ம,      ராமுఁடு3          – களாலு.
இத்துருத சொற்பகுப்புமுறை தெலுங்கு மொழிக்கே உரிய தனிச்சிறப்பு எனலாம். ஏனெனின் பிற திராவிட மொழி இலக்கணநூலில் இது குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பெறவில்லை என்பதே.
3.2.2. தத்பவம்
 தத்பவம் என்பது சமசுக்கிருத பிராக்கிருதங்களிலிருந்து பிறந்த சொற்கள் ஆகும்(சஞ்.20).
சமசு.         சமசு.பவம்            பிராக்.         பிராக்.பவம்
வக்ர:         வங்கர                    -                   -
வேஸர:    வேஸட2மு          -                   -
ஸமுத்ர:   ஸமுத்ரமு           -                   -
மத்ஸர:       -                           மச்சரோ       மச்சரமு
யஜ்ஞ:         -                           ஜண்ணோ    ஜந்நமு
லக்ஷ்மீ:      -                            லச்சி2           லச்சி
விஷ்ணு:    -                            விண்ணூ      வெந்நுఁடு3
3.2.3. கிராமியம்  
 கிராமியம் என்பது கல்வியறிவு இல்லாதவர்கள் பயன்படுத்தும் சொற்களைக் குறிப்பதாகும்(சஞ்.22). இச்சொற்கள் இலக்கணக் கோட்பாட்டிற்கு உட்பட்டு வராது என்பது கருத்து.
  எ –டு . வஸ்தாఁடு3, தெஸ்தாடு3, வச்செநி.
3.2.4. ஆம்ரேடிதம்
 ஆம்ரேடிதம் என்பது ஒருசொல்லடுக்கு/அடுக்குத்தொடர் ஆகும். இச்சொல் குறித்த விளக்கங்களும் புணர்ப்பு(சந்தி) மாற்றங்களும் சந்திபடலம் முதற்கொண்டே காணப்படுகின்றன.
  எ –டு. ஔர + ஔர =ஔரௌர, ஆஹா + அஹா = ஆஹாஹா
3.2.5. நாமம்
  நாமம் என்பது பெயர்ச்சொல் ஆகும். தொல்காப்பியத்தில் பெயர்ச்சொல்லுக்கான இலக்கண வரையறை தனித்த இயலமைப்பில் உள்ளது. பாலவியாகரணத்தில் அவ்வாறு அமையவில்லை. இருப்பினும் நாமம் சஞ்ஞாபடலம் முதற்கொண்டே காணப்படினும், தத்சமபடலம் முதலே விரிவாக எண்ணப்பட்டுள்ளது.
3.2.6. பிராக்ருதுலு
  பிராக்ருதுலு என்பது வாய்பாடாகும். இதனைக் குறிக்க ஆது3லு, ஆதி3, மொத3லு போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஃது தனித்து விளக்கப் படவில்லை. இருப்பினும் பெயர்(நாமம்), வினை(கிரியா) தொடர்பான சொற்களை விளக்குமிடத்து விளக்கப்பட்டுள்ளது. ஒரு குடம்பத்தில் ஆண்/பெண் தலைமைப் பண்பை ஏற்பதுண்டு. அதனைப் போன்றே ஒரே தன்மையுடய குழுச்சொற்களுக்கு ஒரு சொல் தலைமைப் பண்பை ஏற்கும். அவ்வொரு சொல்லுக்குப் பின்பு பிராக்ருதுலு, ஆது3லு, ஆதி3, மொத3லு என்ற ஒட்டுச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது.
 நல்லாது3லு: நல்ல, தெல்ல, பச்ச, எர்(ற்)ற், சாம, அல்ல, திய்ய, கம்ம, புல்ல, சப்ப, விந்ந,
 திந்ந, ஒய்ய, திம்ம, சக்க, ப்ரேக.
சிறுதா3து3லு: சிறுத, நதி, நெலத, மெலத, பட3தி, மட்தி3, பொலதி, வெலதி3, நிப்பு, எம்மு.
இவ்விரு வாய்பாடுகளுள் நல்ல, சிறுத என்பவை தலைமைப் பண்பை ஏற்பதால் அதன் பெயராலே அழைக்கும் தன்மையைக் காணலாம்.
4.0. முடிப்பு
 இதுவரை விளக்கப்பெற்ற கருத்தியல்களின் அடிப்படையில் பெயர், வினை, இடை, ஒருசொல்லடுக்கு, தொகை, தத்சமம், தத்பவம், தேசியம் ஆகியன இருமொழி நூல்களிலும் பொதுச்சிந்தனையாக அமைந்துள்ளது எனவும், சிறப்புச்சிந்தனையாக தொல்காப்பியத்தில் உரி,எச்சம் ஆகியனவும், பாலவியாகரணத்தில் துருதம், பிராக்ருதுலு, கிராமியம் ஆகியனவும் அமைந்துள்ளது எனவும் கூறலாம்.
துணைநின்றவை
தமிழ்1. இராதாகிருஷ்ணா ப., 1999, பரவஸ்து சின்னையா சூரி, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி.
2. இளவழகன் கோ.(பதி.), 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
3. -------------------, 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
4. இளையபெருமாள்(மொ.ஆ.),1972, லீலாதிலகம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
5. கோபாலையர் தி.வே.(பதி.),1990, இலக்கணக்கொத்து, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
6. ----------------------- , 1973, பிரயோகவிவேகம், சரசுவதிமகால் நூலகம், தஞ்சாவூர்.
7. சத்தியராஜ் த.,2013, சுவமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்புநிலை ஒப்பீடு, ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம்,         சென்னை.
8. ------------ , 2013, பாலவியாகரணத்தில் தொல்காப்பியத்தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை), பதிவுகள்(இணைய இதழ்).
9. சண்முகம் செ.வை., 2004, தொல்காப்பியத் தொடரியல், உலகத்தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.
10. சாவித்ரி சி., பாலவியாகரணம், அச்சிடப்பெறாத ஏடு.
11. தாமோதரம்பிள்ளை சி.வை.(பதி.), வீரசோழியம், உலகத்தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.
12. வெங்கடாசலம் தண்.கி., (மொ.ஆ.), 2002, கவிராசமார்க்கம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.       
தெலுங்கு13. பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவ்யாகரணமு, பாலசரஸ்வதி புக் டிப்போ, ஹைதராபாத்.
14. புலுசு வேங்கடரமணய்ய காரி(உரை.), 1965, பாலவ்யாகரணமு(லகுடீக சகிதமு), வாவிள்ள ராமசாமி சாஸ்த்ரலு அண்ட் சன்ஸ்,         மதராசு.



முகப்புபாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது  தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம்.  அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி  தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார்.  இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.
தொல்காப்பியர் வித்திட்டது மொழித்தூய்மைக் கொள்கை. இச்சிந்தனை தெலுங்கு மொழிக்குரிய முதல் இலக்கணநூல் (ஆந்திர சப்த சிந்தாமணி) முதற்கொண்டே காணப்படுகின்றது. அச்சிந்தனை கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாலவியாகரணத்தில் விரிந்த நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் தலையாய நோக்கம்.
தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை

வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ  (தொல்.சொல்.எச்.5)
என்பது தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை. இக்கொள்கை வடசொற்களைக் கடன்வாங்கும்போது வடமொழிக்கே உரிய எழுத்துக்களை நீக்கி விட்டு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை இட்டுப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கருத்தை உள்வாங்கிய மரபிலக்கணங்கள் தத்தம் காலத்து வழங்கிய வடசொற்களில் உள்ள வட எழுத்தை நீக்கி தமிழ் எழுத்துக்களை இடும் தன்மைகளைப் பதிவு செய்துள்ளன.
பாலவியாகரண மொழித்தூய்மைக் கொள்கையும் தொல்காப்பியத்தாக்கமும்
சின்னயசூரியின் பிறப்பும் பணிச்சூழலும் தமிழகமாக அமைந்தது. இவரின் இலக்கணப் படைப்பு பாலவியாகரணம். அன்று தொல்காப்பியர் வித்திட்ட அவ் விதையைச்(மொழித்தூய்மை) சின்னயசூரி அறிந்திருக்க வேண்டும். அதனாலேயே தம் தாய்மொழியாகிய தெலுங்கையும் தூய தெலுங்காக மீட்டெடுக்க எண்ணினார்போலும். மீட்டெடுக்கக் கூடிய வழிமுறைகளையும் பதிவு செய்துள்ளார். அப்பதிவில் கற்பாருக்குத் தெலுங்கு மொழிக்குரிய சொற்கள் இவை, வடமொழிக்குரிய சொற்கள் இவை என இனங்கண்டறிந்து விளக்கியுள்ளார். இஃது அவரின் முதல்படலம்(பரிச்சேதம்) முதற்கொண்டே காணலாகின்றது.

சின்னயசூரியின் மொழித்தூய்மைச் சிந்தனையை இரு நிலைகளில் காணலாம். ஒன்று: புதைநிலைச் சிந்தனை. மற்றொன்று: புறநிலைச் சிந்தனை. முன்னது இச்சொல் இவ்வாறாகத் திரிந்து வரும் அல்லது இவ்வெழுத்து இவ்வெழுத்தாகத் திரிந்து வரும் என்பது போல்வனவற்றைச் சார்ந்தது. பின்னது இச்சொற்கள் தூய தெலுங்கிற்கு உரியவை, இவ் எழுத்துக்கள் தூய தெலுங்கிற்கு உரியவை என்பனவற்றைச் சார்ந்தது. புறநிலைச் சிந்தனைகளைக் காட்டுவன: சங்ஞாபரிச்சேதம்: 4,9,10,19,20,21,22, சந்திபரிச்சேதம்: 14,  தத்ஸமபரிச்சேதம்: 1-87, ஆச்சிகபரிச்சேதம்: 1-38. இவை தவிர்த்த பிற புறநிலைச் சிந்தனைகளாகக் கொள்ளலாம். இனிப் புறநிலைச் சிந்தனையிலிருந்து சில கருத்துக்கள் வருமாறு:
 1. சமசுக்கிருதத்திலிருந்து தெலுங்கிற்கு வந்த எழுத்தக்கள்(சங்.4)
 2. அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்களுடன் ஒன்றிவரும் ச, ஜ ஒலியுடைய
  சொற்கள். (சங்.9).
 எ.டு. சିିିலி, சாିப
3. சமசுக்கிருத பிராக்கிருதச் சொற்களுக்கு நிகரான மொழி தத்சமம் (சங்.19).
  எ.டு. வித்3யா – வித்3ய.
4. சமசுக்கிருத பிராக்கிருதங்களிலிருந்து பிறந்த மொழி தத்பவம்(சங்.20).
 எ.டு. அகாஸ2 – ஆகஸமு
5. திரிலிங்க தேசத்தில் வழங்கக்கூடிய சொற்கள் சமசுக்கிருத பிராக்கிருதத்துடன்    எவ்விதத் தொடர்புடையனவுமல்ல (சங்.21).
 எ.டு. ஊரு,பேரு,முல்லு
இவற்றுள் மூன்றாவதும் நான்காவதுமாகிய கருத்துக்கள் தொல்காப்பிய ‘வடவெழுத் தொரீஇ’ என்பதன் நேரடிச் சார்புடையவை. எவ்வாறு நேரடிச் சார்புடையவை என எண்ணத்தோன்றும்  அதன் காரணத்தைப் பின்வரும் அட்டவணைத் தெளிவுபடுத்தும்.
வடசொல்                           தமிழாக்கம்                             தெலுங்காக்கம்ராம:                                      இராமன்                                    ராமுఁடு3
லக்ஷ்மீ:                                இலட்சுமி                                   லச்சி
விஷ்ணு:                              விட்ணு                                      வெந்நுఁடு3
அக்3நி:                                  அக்னி                                        அகி3
வந:                                       வனம்                                         வநமு
ஸ்2ரீ:                                   திரு                                             ஸிரி
அஃதாவது ராம: என்பது வட சொல், அச்சொல்லைத் தமிழர் ராம: என்பதிலுள்ள விஸர்க(:) எனும் எழுத்தை நீக்கி அச்சொல்லின்முன் இகரத்தையும் பின் –ன் எனும் ஒற்றையும்(ஆண்பால் விகுதி) சேர்த்துப் பயன்படுத்துகின்றமையும், அதே சொல்லைத் தெலுங்கர் விஸர்க(:) என்பதை நீக்கி விட்டு உகரத்தையும் டு3 எனும் முதல் வேற்றுமை உருபையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றமையையும் கூறலாம்.
முடிப்புஇதுவரை விளக்கப்பெற்றவையின் வழி தொல்காப்பியர் கூறிய பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கும்போது தம் மொழிக்குரிய எழுத்துக்களை இடுகச் எனும் சிந்தனை தமிழ் மொழிக்கு மட்டுமின்றி தெலுங்கு மொழிக்கும் பொருந்தி வரும் என்பதையும், தொல்காப்பியத்தாக்கம் சின்னயசூரியிடம் காணப்பட்டதையும் அறிய முடிகின்றது எனலாம்.
துணை நின்றவை
தமிழ்1. தெய்வச்சிலையார்(உரை.),1984, தொல்காப்பியம் சொல்லதிகாரம், தமிழ்ப்     பல்கலைக் க்ழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு2. பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவ்யாகரணமு, பாலசரஸ்வதி புக் டிப்போ, ஹைதராபாத்.
3. புலுசு வேங்கட ரமணய்ய காரி (உரை), 1965, பாலவ்யாகரணமு (லகுடீக ஸஹிதமு), வாவிள்ல ராம்ஸ்வாமி ஸாஸ்த்ரிலு அண்ட் சன்ஸ், மதராசு.
 Language in India இதழில் வெளியிடப் பெற்றது
5.ஆந்திரசப்தசிந்தாமணியும் பாலவியாகரணமும்: ஒப்பியல் பார்வை 
Andhra Shabda Chintamani and Balavyakaranam: A Contrastive Study
 This article in Tamil compares and contrasts two notable grammatical works in
Telugu: Andhra Shabda Chintamani and Balavyakaranam
Focusing on the different styles of grammar proposed in Telugu tradition, this
article presents various aspects of similarities and dissimilarities between the
chosen grammatical works in Telugu.
As this article is primarily intended for a Tamil audience, the article also
presents some salient similarities and differences between these selected Telugu
grammars vis-a-vis some traditional Tamil grammars such as Tolkappiyam and
Nannuul.

T. Sathiya Raj, Ph.D. Candidate
School of Indian Languages and Comparative Literature
Tamil University
Thanjavur 613010
Tamilnadu
India
மேலும் வாசிக்க http://languageinindia.com/july2013/v13i7july2013.pdfLanguage in India இதழில் வெளியிடப் பெற்றது
5.ஆந்திரசப்தசிந்தாமணியும் பாலவியாகரணமும்: ஒப்பியல் பார்வை 
Andhra Shabda Chintamani and Balavyakaranam: A Contrastive Study
 This article in Tamil compares and contrasts two notable grammatical works in
Telugu: Andhra Shabda Chintamani and Balavyakaranam
Focusing on the different styles of grammar proposed in Telugu tradition, this
article presents various aspects of similarities and dissimilarities between the
chosen grammatical works in Telugu.
As this article is primarily intended for a Tamil audience, the article also
presents some salient similarities and differences between these selected Telugu
grammars vis-a-vis some traditional Tamil grammars such as Tolkappiyam and
Nannuul.

T. Sathiya Raj, Ph.D. Candidate
School of Indian Languages and Comparative Literature
Tamil University
Thanjavur 613010
Tamilnadu
India
மேலும் வாசிக்க http://languageinindia.com/july2013/v13i7july2013.pdf

பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு



பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு 1.0 முகப்புபாலவியாகரணம் தெலுங்கு மொழிக்குரிய முழுமையான இலக்கணநூலாகக் கருதப்படுகிறது. இதனை யாத்தவர் சின்னயசூரி (கி.பி. 1858). இந்நூல் இக்காலம் வரை கற்றலிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் பழைமையைப் போற்றும் பண்பே. மேலும், இந்நூல் பயனாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுள், முந்து நூல்களின் கருத்தியல்களின் ஆட்சியே மிகுதி. அவ்வாட்சியின் விழுக்கட்டைப் பி.சா.சுப்பிரமணியனின் குறிப்புகளை முன்வைத்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0 பாலவியாகரணமும் முந்து நூல்களும் சின்னயசூரி, பாலவியாகரணத்தின் மூலம் தெலுங்கு எழுத்துலகை  ஒழுங்கமைவுக்கு உட்படுத்தினார். இதனை  அந்நூல் வெளிவந்தபிறகு பழைமையான இலக்கியங்களும் திருத்தம் செய்து மீள்பதிப்பாக வெளிவந்தமையின்வழிக் காணலாம்(ஆனைவாரி ஆனந்தன்:1999). அதன் பின்பு இவர் வகுத்த கோட்பாடுகளே நிலைபேறாக்கம் பெற்றன என்பதே உண்மைநிலை. ... மேலும் வாசிக்க  http://www.geotamil.com/pathivukalnew/sathiyaraj_july2013.pdf
Last Updated on Monday, 01 July 20

வெண்பா



கன்னிக் கனிமொழியில் கண்ணுற்றேன் அன்பை
கனிந்தன என்னுள்ளம் அன்பே! - கனியா
கார்கூந் தலழகே! கண்ணிமைப் போர்விற்
கருமுகிலாய் துன்புறுத் தாதே
                                                                      - த. சத்தியராஜ்

வதுவைச் சடங்கு



மடங்கள் இருபத்தேழாம் நாளில்
மயங்கியவை நினைவுக்கு
வந்தன....
இஃது முற்கனவு.

அன்றிரா முதலே
அன்பின் ஈருயிர்
ஓருயிர் ஆனவோ?

ஆம்.... ஆம்......
காமத்தில் மட்டுமன்று
காம அன்பிலும்...
                                            - த. சத்தியராஜ்


இலக்கணவியல்: நூலறிமுகம்


இலக்கணவியல் எனும் நூல் பேரா. சு. இராசாராம் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் உலக இலக்கணங்களை மீள்வசிப்பிற்கு உட்படுத்த வழிவகுத்துத் தருகிறது. இது தமிழ் இலக்கணங்களை மீள்வசாசிப்பு செய்து பொதுக்கோட்பாடுகளை உருவாக்கித் தந்துள்ளது. இந்நூல் தமிழ் இலக்கணங்களில் ஆய்வு செய்து வருபவர்களுக்கு ஒரு மூலநூல் எனலாம்.    இதில் தரப்பெற்ற கருத்தியல் வாய்பாடுகளை இலக்கண ஆய்வுகளில் பொருத்திப் பார்க்கும்பொழுது அவ்விலக்கணத்தின் பொதுத்தன்மைகளையும் சிறப்புத்தன்மைகளையும் இனங்கண்டறிய முடியும். அவ்வாறு ஒவ்வொரு மொழி இலக்கணங்களின் பொது, சிறப்புத் தன்மைகளை இனங்கண்டறிந்து விட்டால் மூலத்தை எளிதில் ஊகித்துவிடலாம். இங்கு இலக்கணம் குறித்து அவர் தரும் குறிப்பு நோக்கத்தக்கது,

இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு காலகட்டதில் சமூகம்,அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு.இலக்கணத்தை எழுதுவதற்க்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப்பொறுப்பும் உள்ளன. இவ்விலக்கண அரசியல் பின்னணியில் இலக்கணத்தில் பல்வேறு பரிமாணங்களின் பிற சமூக விஞ்ஞானங்களோடுள்ள தொடர்பு பன்முக நோக்கில் அணுகப்பட வேண்டும். இலக்கணம் புனிதமானது: மாறாதது என்னும் பழைமையற்றைக் கைவிட்டு யதார்த்த மொழி நிலையைப் பூதக்கண்ணாடிக்கொண்டு பார்க்கும் மனபாங்கு வளர வேண்டும்.



பொதுவாக இக்கருத்தியல் தமிழ் மொழிக்கு மட்டுமின்றி அனைத்து மொழி இலக்கணக் கலைஞர்களுக்கும் பொருந்துவதே. மேலும், ஒரு மொழிக்குரிய இலக்கணங்களைத் தனிநிலை இலக்கணங்கள் இவை, பயனாக்க இலக்கணங்கல் இவை என வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய வழித்தடத்தையும் அமைத்துத் தருகிறது. ஆக, ஒப்பிலக்கணம் செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் தாம் மேற்கொள்ளும் ஆய்வில் இது தொடர்பான சிந்தனையையும் கருத்தில் கொண்டு ஆராய்து பார்ப்பீர்களாக!


வள்ளுவரும் சர்வக்ஞரும்: நட்புச் சிந்தனைகள்



சே.முனியசாமி
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்.
மனித உறவில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கடப்பாடு உண்டு. தாய்க்குப் பிள்ளையைப் பெற்றெடுப்பது; தந்தைக்குப் பொருளீட்டச் செல்வதும், பிள்ளைகளைச் சான்றோர்களாக்குவதும் ஆகும். இவை சமுதாயத்தில் நடக்கும் என்றும் மாறாத இயல்புகள். அதனைப் போல் நட்புக்கும் சில கடப்பாடு உண்டு . அது நட்பு உடையவர்களை நன்னெறிப்படுத்துவதும், உயர்வடையச் செய்வதும் ஆகும். ஞாயிறு எவ்வாறு இயல்பாக தோன்றுகின்றதோ அதுபோல நட்பினைப் பெறுவதற்கு யாரும் அடையாளம் காட்டத் தேவையில்லை. இயல்பாக மனத்தால் அறியக்கூடிய ஓர் உன்னத உறவே நட்பு. நட்பிற்கு இணையாக நட்பே கருதப்படுகிறது. அந்நட்புக் குறித்துத் தமிழில் வள்ளுவரும், கன்னடத்தில் சர்வக்ஞரும் எடுத்தியம்பியுள்ளனர். திருக்குறளிலும் சர்வக்ஞர் உரைப்பாவிலும் (மொழிபெயர்ப்பு) அமைந்த நட்புச் சிந்தனைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கட்டுரையை முழுமையாக வாசிக்க http://www.geotamil.com/pathivukalnew/muniyasamy9.pdf

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்



பிறப்பு: 07-02-1902      இறப்பு: 15.01.1981
பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார்பரிபூரணம் அம்மையார்
பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து தேவேந்தரனார் என்னும் கணக்காயருக்கும்பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை (Stokes)கிறித்தவமத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார் . ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். 1906 - பாவாணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்துரை என்பார் காப்பில் தேவநேயப் பாவாணர் தொடக்கக் கல்வி பயின்றார்.
           
அவர் மிகச்சிறந்த தமிழறிஞரும்சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதிசிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம்இலத்தீன்சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டிஅதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.


படிப்பும் பணிகளும்
·         1912 - தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர்வட ஆர்க்காடு மாவட்டம்ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும்ஆம்பூரில் உள்ள மிசௌரி உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில்எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார்.
·         1916 - பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில்(C.M.S.) IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 91011 ஆகிய வகுப்புகள்) பயின்றார்.
·         1919 - இராமநாதபுரம் மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த) யங் என்பவர் பணவுதவி செய்தார்பின்பு தன் 17ம் அகவையில்1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ(ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்..
·         1921 - ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார்.(3 ஆண்டுகள்)
·         1924 - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.'ஞா.தேவநேசக் கவிவாணன்மிசன் உயர்தரப் பாடசாலைஆம்பூர்,வடார்க்காடு ஜில்லா(மாவட்டம்)என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22)
·         சென்னை வருகைபிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப்பள்ளி.
·         1925 - சென்னைதிருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி.
·         1926 - சென்னைதாம்பரம் கிறித்தவ உயர்நிலைப்பள்ளி(மூன்றாண்டு)
·         திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே.(செந்.செல்.4:336);
·         சென்னைப் பல்கலைக்கழக வித்துவான்கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்;
·         எசுந்தர் அம்மையார் திருமணம்.ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்;தத்தாகத் தரப்படுதல்.
·         1929 மன்னார்குடிப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணிஇக்காலகட்டத்தில்இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார்.
·         1930 தேவநேயர்-நேசமணியார் திருமணம்.
·         1931 'மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளிவருதல்.
·         1934 திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணிசெய்தார்.
·         1935 - திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் தலைப்பில் கீ.க.மு.(M.O.L.) பட்டத்திற்காக இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில்வழங்குதல்.
·         1936 - இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். 'இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்என உறுதிக் கொள்ளல்.
·         1940 - ஒப்பியன் மொழிநூலை வெளியிட்டார்.[2]
·         1943 - சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி(ஓராண்டு). தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு(21.10.43). தொல்காப்பியக் குறிப்புரை வரைவு.
·         1944 - சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்(பன்னீராண்டு) ஏந்தாக வாழ்தல்.
·         1947 - பெரியார் வெள்ளிப் பட்டயம் வழங்கிப் பாராட்டல்.
·         1952 - தமிழ் முதுகலைப் பட்டம்(M.A.) பெறுதல்.
·         12.07.1956 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - திரவிட மொழியாராய்ச்சித் துறை (ஐந்தாண்டு)
·         24.09.1961 - காட்டுப்பாடியில் வாழ்வு.
·         27.10.1963 - மனைவியார் நேசமணி அம்மையார் இயற்கை எய்துதல்.
·         12.01.1964 - தமிழ்ப்பெருங்காவலர் விருதுதமிழ்க் காப்புக் கழகம்,மதுரை
·         06.10.1966 - உ.த.க. தோற்றம்திருச்சிராப்பள்ளி.
·         08.09.1967 - மணி விழாமதுரை.
·         28.12.1969 - உ.த.க. முதலாண்டு விழாபறம்புக்குடி
·         09.01.1971 - உ.த.க. இரண்டாம் விழாமதுரை.
·         12.02.1971 - தென்மொழிபாவாணர் அகரமுதலித் திட்டத் தொடக்கம்.
·         05.05.1971 - குன்றக்குடி அடிகளார் பாரி விழாவில் 'செந்தமிழ் ஞாயிறுவிருது வழங்குதல்
·         31.12.1972 தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடுதஞ்சை.
·         15.01.1979 - தமிழ்நாட்டு அரசு 'செந்தமிழ்ச் செல்வர்விருது வழங்குதல்.
·         05.01.1981 - மதுரை உலகத் தமிழ் மாநாட்டுப் பொதுநிலைக் கருத்தரங்கில், 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்என்னும் பொழிவு. நெஞ்சாங்குலைத் தாக்குண்டுமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்.
·         14.01.1981 - மீளவும் நெஞ்சாங்குலைத் தாக்கம்.
·         15.01.1981 - இரவு 12.30க்கு இயற்கை எய்துதல்.
·         14.01.1981 - சென்னைகீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம்.
இறுதி நாட்கள்
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும்தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.
பாவாணரின் குழந்தைகள்
1.    நச்சினார்க்கினிய நம்பி
2.    சிலுவையை வென்ற செல்வராசன்
3.    அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
4.    மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி
5.    மணிமன்ற வாணன்
6.    பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - 24.12.1939 இல் இயற்கை எய்துதல்.
திரட்டு நூல்கள் - 12
1. இலக்கணக் கட்டுரைகள்
1.   தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை
2.   இலக்கணவுரை வழுக்கள்
3.   உரிச்சொல் விளக்கம்
4.   ஙம் முதல்
5.   தழுவு தொடரும் தழாத் தொடரும்
6.   நிகழ்கால வினை
7.   படர்கை 'விகுதி
8.   காரம்,காரன்,காரி
9.   .குற்றியலுகரம் உயிரீறே (1)
10. .குற்றியலுகரம் உயிரீறே (2)
11. .ஒலியழுத்தம்
12. .தமிழெழுத்துத் தோற்றம்
13. .நெடுங்கணக்கு (அரிவரி)
14. .தமிழ் எழுத்து மாற்றம்
15. .தமிழ் நெடுங்கணக்கு
16. .',' 'அய்,அவ்தானா?
17. .எகர ஒகர இயற்கை
18. .உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை

2. தமிழியற் கட்டுரைகள்
1.   செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு
2.   தென்மொழி
3.   தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்
4.   தமிழ் தனித்தியங்குமா?
5.   தமிழும் திரவிடமும் சமமா?
6.   திராவிடம் என்பதே தீது
7.   மொழி பெயர்முறை
8.   நிகழ்கால வினைவடிவம்
9.   நிகழ்கால வினை எச்சம் எது?
10. கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்?
11. ஆய்தம்
12. மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்
13. பாயிரப் பெயர்கள்
14. திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்
15. சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
16. ஆவுந் தமிழரும்
17. கற்புடை மனைவியின் கண்ணியம்
18. அசுரர் யார்?
19. கோசர் யார்?
20. முருகு முதன்மை
21. மாந்தன் செருக்கடக்கம்
22. தற்றுடுத்தல்
23. தலைமைக் குடிமகன்
24. மாராயம்
25. முக்குற்றம்
26. திருவள்ளுவர் காலம்
27. வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்
3. மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
1.   உலக மொழிகளின் தொடர்பு
2.   முதற்றாய் மொழியின் இயல்புகள்
3.   வாய்ச் செய்கை யொலிச் சொற்கள்
4.   சொற்குலமும் குடும்பமும்
5.   சொற்பொருளாராய்ச்சி
6.   சொல்வேர்காண் வழிகள்
7.   ககர சகரப் பரிமாற்றம்
8.   மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே
9.   மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்
10. சேயும் சேய்மையும்
11. ஆலமரப் பெயர் மூலம்
12. கருப்பும் கறுப்பும்
13. தெளிதேனும் களிமதுவும்
14. கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்
4. மொழிநூற் கட்டுரைகள்
1.   ஒப்பியல் இலக்கணம்
2.   சொற்பொருள் வரிசை
3.   வண்ணனை மொழிநூல்
4.   பொருட்பாகுபாடு
5.   உலக வழக்கு கொச்சை வழக்கன்று
6.   எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்
7.   வடசொல் தென்சொல் காணும் வழிகள்
8.   பாவை என்னுஞ் சொல் வரலாறு
9.   திரு என்னும் சொல் தென்சொல்லாவடசொல்லா?
10. 'உத்தரம்', 'தக்கணம்எம்மொழிச் சொற்கள்?
11. 'மதிவிளக்கம்
12. 'உவமைதென்சொல்லே
13. திரவிடம் தென்சொல்லின் திரிபே
14. தமிழ் முகம்
15. வள்ளுவன் என்னும் பெயர்
16. கழகமெல்லாம் சூதாடுமிடமா?
17. இந்திப் பயிற்சி
5.பண்பாட்டுக் கட்டுரைகள்
1.   புறநானூறும் மொழியும்
2.   வனப்புச் சொல்வளம்
3.   அவியுணவும் செவியுணவும்
4.   501 ஆம் குறள் விளக்கம்
5.   அரசுறுப்பு
6.   பாவினம்
7.   அகத்தியர் ஆரியராதமிழரா?
8.   தமிழ்மன்னர் பெயர்
9.   வேளாளர் பெயர்கள்
10. பாணர்
11. குலப்பட்ட வரலாறு
12. கல்வி (Culture)
13. நாகரிகம்
14. வெடிமருந்து
15. பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை
6. தென்சொற் கட்டுரைகள்
1.   வடமொழிச் சென்ற தென்சொற்கள்
2.   வடமொழித் தென்சொற்கள்
3.   வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்
4.   'இலக்கியம்', 'இலக்கணம்'
5.   'இலக்கணம்', 'இலக்கியம்எம்மொழிச் சொற்கள்?
6.   திருவென்னும் சொல் தென்சொல்லே
7.   'காலம்என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?
8.   'மாணவன்தென்சொல்லாவடசொல்லா?
9.   என் பெயர் என்சொல்?
10. சிலை என்னுஞ் சொல் வரலாறு
11. .கருமம் தமிழ்ச் சொல்லே!
12. எது தேவமொழி?
13. சமற்கிருதவாக்கம்சொற்கள்
14. சமற்கிருதவாக்கம்-எழுத்து
15. சமற்கிருதவாக்கம் - இலக்கணம்
16. ஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்

7.செந்தமிழ் சிறப்பு
1.   மதிப்படைச் சொற்கள்
2.   தமிழின் தனிப்பெருந்தன்மைகள்
3.   தமிழின் தனியியல்புகள்
4.   தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்
5.   தமிழின் தொன்மையும் முன்மையும்
6.   தமிழும் திராவிடமும் தென்மொழியும்
7.   தமிழ் வேறு திரவிடம் வேறு
8.   செந்தமிழும் கொடுந்தமிழும்
9.   திசைச்சொல் எவை?
10. மலையாளமும் தமிழும்
11. இசைத்தமிழ்
12. 'கடிசொல் இல்லை காலத்துப்படினே'
13. புதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும்
14. போலித் தமிழ்ப்பற்று
15. மதுரைத் தமிழ்க் கழகம்
16. உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு
17. தமிழனின் பிறந்தகம்
18. தமிழன் உரிமை வேட்கை
19. உரிமைப் பேறு
8.தலைமைத் தமிழ்
1. தனிச் சொற்கள்
2. தொகுதிச் சொற்கள் (பூனைப் பெயர்கள், நெருப்புப் பற்றிச் 'சுள்அடிச் சொற்கள்)

9.மறுப்புரை மாண்பு
1.   குரலே சட்சம்
2.   குரல் சட்சமேமத்திமமன்று
3.   நன்னூல் நன்னூலா?
4.   நன்னூல் நன்னூலா - மறுப்பறுப்பு
5.   சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே
6.   பேரா. தெ.பொ.மீ. தமிழுக் கதிகாரியா?
7.   தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
8.   `பாணர் கைவழிமதிப்புரை (மறுப்பு)
9.   சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு
10.தமிழ் வளம்
1.   வேர்ச்சொற் சுவடி
2.   போலிகை யுருப்படிகள்
3.   அகரமுதலிப் பணிநிலை
4.   தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி
5.   உலகத் தமிழ்க் கழகக் கொள்கை
6.   பதவி விடுகையும் புத்தமர்த்தமும்
7.   உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு
8.   உ.த.க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க
9.   உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள்
10. பாவாணரின் மூன்று அறிக்கைகள்
11. தமிழா விழித்தெழு!
12. தமிழ் ஆரியப் போராட்டம்
13. கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து
14. தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை
15. பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும்
16. உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உரைத்த எச்சரிக்கை
17. அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு
18. தி.மு.க அரசிற்குப் பாராட்டு
19. மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் தமிழ்வார்த்தை இனிப்பாட வேண்டிய முறை
20. தனித் தமிழ் இதழாசிரியர் தவறு
21. வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள்
22. மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு
23. ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?
24. தேசியப் படை மாணவர் பயிற்சி ஏவல்கள்
25. திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள்
26. மதிப்புரைமாலை
27. கேள்விச் செல்வம்
28. ஈ.வே.இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள்
29. பிறந்த நாட்செய்தி

11.பாவாணர் நோக்கில் பெருமக்கள்
1.   மறைமலை யடிகளின் மும்மொழிப் புலமை
2.   நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு
3.   நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு
4.   பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன்
5.   தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள்
6.   தமிழ் எழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?
7.   தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு.கே.கே.சா அவர்கட்குப் பாராட்டு
8.   என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்?
9.   ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு அடிப்படை எவர் பட்ட அரும்பாடு?
10. செந்தமிழ்ச் செல்விக்கு உட்கரணம் கெட்டதா?
11. வரிசை யறிதல்
12. மகிழ்ச்சிச் செய்தி
13. துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்!
14. வல்லான் வகுத்த வழி
15. தீர்ப்பாளர் மகாராசனார் திருவள்ளுவர்
16. திருவள்ளுவரும் பிராமணீயமும் - மதிப்புரை
12.பாவாணர் உரைகள்
1.   மொழித் துறையில் தமிழின் நிலை
2.   இயல்புடைய மூவர்
3.   தமிழ்மொழியின் கலைச்சொல்லாக்கம்
4.   தமிழ் வரலாற்றுத் தமிழ்க் கழக அமைப்பு - மாநாட்டுத் தலைமையுரை
5.   பாவாணர் சொற்பொழிவு
6.   தமிழின் தொன்மை
7.   தமிழன் பிறந்தகம்
8.   வ.சு. பவளவிழா
9.   தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா
10. கலைஞர் நூல் வெளியீட்டு விழா
11. பாவாணர் இறுதிப் பேருரை

13. தேவநேயர் ஆக்கிய நூல்கள்
1.   இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
2.   இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள#. 31 பக்கங்கள்#.
3.   இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
5.   உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
6.   உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
7.   ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
8.   கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்னும் இசைநூல்இசைப்பாடல்கள் 35 கொண்டது#. பக்கங்கள் 33 1937#.
12. கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
13. கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள்50 இசைப்பாக்கள் கொண்டது
14. சிறுவர் பாடல் திரட்டு (1925) கதைவிளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது#.
19. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்
20. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
22. தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
23. தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
25. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
26. தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
27. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
28. திராவிடத்தாய் (19441956) 112 பக்கங்கள்#. முன்னுரைமலையாளம்கன்னடம்துளுமுடிவு ஆகிய 6 பாகமுடையது#.
29. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது#.
30. தொல்#. எழுத்து - குறிப்புரை (1946)
31. தொல்#. சொல் - குறிப்புரை (1949)
33. பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள்#.
34. பாவாணர் பாடல்கள்பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா#. இளங்குமரன் தொகுத்து#.
35. பாவாணர் மடல்கள்பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது#. தொகுப்பு#. இரா#. இளங்குமரன்#.#.
37. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள்#. குறிப்பொலிக் காண்டம்சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
38. வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது#.
40. வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்#.
41. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா#. கு#.பூங்காவனம்#. பக்கங்கள்??
42. The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
43. The Lemurian Language and its Ramifications
 பார்வை: விக்கிபீடியா(இத்தளத்தில் இடம்பெற்ற கருத்துக்களை ஒழுங்குப் படுத்தி வெளியிடப் பெறுகிறது), பாவாணர் என் சிற்றப்பா, பாவாணர் களஞ்சிம்