புதன், 11 டிசம்பர், 2019

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்

வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் இரண்டாமிடத்திற்குச் சென்றுவிட்டது. மீண்டும் முதலிடத்தைத் தக்கவைக்க நீங்களும் வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு சென்னையில் நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நீச்சல் காரன்

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இனம் ஆய்விதழுக்குக் கட்டுரை வழங்குவோர் கவனத்திற்கு

இனம் ஆய்வுநெறியை அறிந்து முறைப்படி கட்டுரையைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதற்கான காணொளிகளும் நெறிகளும் வருமாறு;
  1. உறுப்பினர் புகுபதிவு;https://www.youtube.com/watch?v=Mto19BmCseo
  2. கட்டுரையாளர்கள் குறிப்பு; https://www.youtube.com/watch?v=TIfUgV1_z_A
  3. கட்டுரை வழங்கும் முறை; https://www.youtube.com/watch?v=j1CIDqqcZmM&t=27s
  4. கட்டுரை வடிவமைப்பு முறை; https://www.youtube.com/watch?v=AK9xESiU5os
  5. இனம் நெறி;  https://inamtamil.com/instructions/
  6. இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே இடம்பெறும்.
  7. ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.

ஞாயிறு, 24 நவம்பர், 2019

ஒப்பும் மீக்கருத்தியலும் (தமிழ் – தெலுங்கு இலக்கணப் பனுவல்களின் இரண்டாம் வேற்றுமை கருத்தியல்களை முன்வைத்து) Oppum Mīkkaruttiyalum (Tamiḻ - Teluṅku Ilakkaṇap Paṉuvalkaḷiṉ Iraṇṭām Vēṟṟumai Karuttiyalkaḷai

தமிழும் தெலுங்கும் நெருங்கிய உறவுடையன. இம்மொழிகளில் எழுதப்பெற்ற இலக்கணப் பனுவல்களிலும் அவ்வுறவு தொடர்கின்றது. அதற்குக் காரணம் சமூகம், பண்பாடு, கலைசார்ந்த தொடர்புகளில் பண்டைக் காலந்தொட்டு ஒரு நீட்சி இருப்பதே. இருப்பினும் அதற்குள் சிற்சில வேறுபாடுகள் நிலவுகின்றன. அவ்வகையில் அவ்விரு மொழி இலக்கணப் பனுவல்களிடையே விளக்கப்பெற்றிருக்கும் இரண்டாம் வேற்றுமை குறித்தும், வரலாற்றுநிலை – சமகாலநிலை மீக்கருத்தியலில் அவ்விருமொழி இலக்கணங்களும் ஒருங்கு பயணிக்கும் முறைமை குறித்தும் இங்கு ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன.

வெள்ளி, 22 நவம்பர், 2019

தேர்வாள்

தேர்வு ஏதுக்கடி
சிந்தையில் ஏற்றடி
செவிட்டுப் பாம்படி
செவிட்டு ஆமையடி
விடையது பார்க்கும் மலடடி
மொழி பார்க்காது
கருத்துப் பார்க்காது

சனி, 16 நவம்பர், 2019

காலக்கணிதம் - கண்ணதாசன்

       முன்னுரை

       கண்ணதாசன் வரலாறு

      பிறப்பு

      கல்வி

      பணி

      படைப்பு

       காலக்கணிதம்

      கருப்படுபொருளை உருப்பட வைத்தல்

      ஆக்கல்அழித்தல் - அளித்தல்

      பிறர் உண்ணத்தருவேன்

      கம்பன்பாரதிபாரதிதாசன்

      மாற்றமே மானிடத் தத்துவம்

       முடிவுரை