வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு


செல்லுலகில் செல்ல
செவிகெடுக்கும் இன்னிசை
மூளைச் சலவை செய்யும்
நீலவண்ணக் காவியம்
பகுத்தறிவைப் பகடையாக்கும்
பற்பல செயலி விளையாட்டு
மதியை மதிப்பிழக்கச் செய்வன...
உணர்ந்திடு! எழுந்திடு!! விரைந்திடு!!!
வந்தோரை வரவேற்று
வருவிருந்து சிறுதானியமாம்
குழுவாய் அமர்ந்து உண்ண
குறியறிந்து கூடும்!
உழுது உழுது ஓடாய்த் தேய்ந்து
உள்ளதை இல்லையெனாது
அள்ளி அள்ளி வழங்கிய
வள்ளலே அருந்தமிழர்
உலகார் அறிய
வலைப்பூ தொடங்கு!
தமிழரின் அரிய உணவுப் பண்பாட்டைத்
தமிழால் அறிவி!
பானி பொறிக் கலவை
சுவைஞர்கள் மறக்க
சுவைத்தே வலையேற்று
சுவைக்கட்டும் சுவைக்கனியாய்
வலைப்பூ கண்ணே!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


     வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் சந்திப்பு 2015

வகை(5) இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதைப் போட்டி - 2015



கல்வி ஊற்றே சிந்தை ஊக்கும்!

(வெண்பா – வேறு)
1.      கணித்தமிழ்க் கல்வியைக் கற்றுக் கொடுக்க
கணித்தல் இலாது கணநேரம் தூங்கும்
ஒருகுழு நோக்கா ஒருகுழு பேசும்
புருவம் உயரா புகழ்!                               
(அறுசீர் விருத்தம் – வேறு)
2.      கணினிக் கலையை நோக்க கலைக்கல் லூரி நாடு!
கணித அறிவி யல்தீ கணினி வழியில் பற்று!
கண்ண ழகியாம் கன்னி கண்ணி விழியால் ஈர்க்கும்
உண்ணல் மறக்கத் தூர்க்கும் ஊன்றும் கலையும் நோக்கு! 

சனி, 19 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015


பதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்

















வணக்கம் வலைப்பதிவர்களே...

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில்! விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும் தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.


எந்தெந்த ஊரில் இருந்து யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று பார்க்க வருகைப் பதிவு பட்டியல் பாருங்கள்.