இனம் பல்துறைப் பன்னாட்டு ஆய்விதழ், பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் செயல்வடிவங்களுக்குக் கொண்டுவந்தது; இப்பொழுது கொண்டு வருவதிலும் முனைப்புக்காட்டி வருகின்றது என்பதைத் தொடர்ந்து இனத்துடன் பயணிப்பவர்கள் அறிவர். தமிழ் ஆய்வுகள் பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுமுறைகளைக் கடைப்பிடித்து எழுதுவதில் பின்தங்கியே உள்ளன. அதனால் என்னவோ புதிய ஆய்வுச் சிந்தனைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆய்வேடுகள் எழுதுவதுபோன்றே ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது என்ற எண்ணம் இன்று அருகியே உள்ளது. ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு அந்தத் தலைப்பில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளனவா என்ற புரிதல் இல்லாமல் அத்தலைப்பிற்குரிய விளக்கவுரையாகப் பெரும்பான்மையான ஆய்வுகள் குவிந்துள்ளன என்றால் மிகையில்லை. அவற்றை ஆய்வுகள் என்பதா அல்லது பொதுக்கட்டுரை என்பதா?
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
திங்கள், 18 நவம்பர், 2024
செவ்வாய், 12 நவம்பர், 2024
கோவை - சென்னை - தஞ்சாவூர் - கோவை
9.11.2024 அன்று இரவு 9.30-ற்குக் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சென்னைக்குச் செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் ஏறி தூங்கினேன். அடுத்த நாள் (10.11.2024) காலை 7.30-ற்குச் சென்னை கிளாம்பாக்கம் வந்திறங்கினேன். பேருந்தும் பேருந்து நிலையமும் நல்ல தரத்துடன் இருந்தமை கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது. மற்றொருபுறம் இவை தொடர்ந்து பராமரிக்கப்படாவிட்டால் இந்தக் கட்டுமானமும் சீக்கிரம் சிதலமடையுமே என்ற எண்ணத்துடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வந்தேன். காலை, மாலை என இரண்டு அமர்வுகளில் ஆய்வாளர்களுக்குத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் முதல் இலக்கண நூல்களின் குறிப்புகளையும் ஆய்ந்து பார்க்க வேண்டிய களங்களையும் அறிமுகம் செய்தேன்.
வியாழன், 7 நவம்பர், 2024
வரலாற்றுநிலை - சமகாநிலை
இலக்கணங்களுக்குத் தரவுகளாகச் செய்யுளும், வழக்கும் அமைகின்றன. இவை வரலாற்றுநிலையைச் சார்ந்தது என்றோ அல்லது சமகால நிலையைச் சார்ந்தது என்றோ ஆய்ந்து பார்ப்போமேயானால் பிழைபடும். ஏனெனில் உலகில் எழுதப்பட்ட அனைத்து இலக்கணங்களின் தரவுகளும் இவ்விரு காலநிலைகளைச் சார்ந்தே இருக்கும். அதனை அறிய ஒவ்வொரு இலக்கணக்கூறினையும் முன்பு அல்லது பின்பு எழுதப்பட்ட இலக்கணங்களோடு ஒப்பிடல் வேண்டும். இங்கு இலக்கணவியல் அறிஞரின் கருத்து குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024
கணினியியல் தமிழ் மொழிபெயர்ப்பு - உரையரங்கம் (Symposium on Computer Technology Knowledge Article Translation for Tamil)
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாகக் கணினியியல் தமிழ் மொழிபெயர்ப்பு - உரையரங்கம் (Symposium on Computer Technology Knowledge Article Translation for Tamil) எனும் பொருண்மையிலான உரையரங்கம் 16.08.2024 அன்று பிற்பகல் 1.40 முதல் 2.40 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் பங்குபெற்ற மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் உரையாளர்களாகச் செல்வி ஶ்ரீநிகா சி., (பிசிஏ, இரண்டாம் ஆண்டு), செல்வி பிரியங்கா பா., (பிசிஏ, இரண்டாம் ஆண்டு), செல்வி திவ்யா த., (பிசிஏ, இரண்டாம் ஆண்டு) ஆகியோர் கலந்துகொண்டு, விக்கிப்பீடியாவில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்த்த தங்களின் அனுபவங்கள் குறித்து உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் 40-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வினை பேரா.கு.இராமசெயம் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.
சனி, 27 ஜூலை, 2024
கோவைக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கிமூலக் கூடுகை
26.07.2024 அன்று கோவையில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கி மூலக்கூடுகை நடைபெற்றது.
இக்கூடுகையில் விக்கிமூலத்தில் அதிகப் பங்களிப்புச் செய்த லோகநாதன் (எ) தகவலுழவன் அவர்களும் பேராசிரியர்களான
முனைவர் ந.இராேஜந்திரன்,
முனைவர் த.சத்தியராஜ்,
முனைவர் பா.கவிதா,
முனைவர் இரா. குணசீலன்,
முனைவர் இரா.நித்யா,
முனைவர் க.பாலாஜி, பேராசிரியர் இரா. அரிகரசுதன்,
முனைவர் ம. மைதிலி,
முனைவர் வ.காருண்யா,
பேராசிரியர் லலிதா
திரு. ஸ்ரீதர், ஆகியோரும் இணைந்து
தேவநேயப் பாவாணரின் 52 தொகுதிகளையும் மெய்ப்புப் பார்த்து, மேம்படுத்தி விரைவில் விக்கிமூல மின்நூலகத்தில் தரவு மேம்பாடு செய்வது குறித்தும் அதற்கான திட்டங்கள் குறித்தும் உரையாடினோம்.
தனியார் கல்லூரிகளில் பணி செய்யும் தாங்கள் ஒன்றிணைந்து தமிழுக்காக வேலை செய்வதைப் பார்க்கும்பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் தகவலுழவன்.
பேராசிரியர்கள் விக்கிமூலத் திட்டம் குறித்து இதுவரை என்னென்ன பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன இனிசெய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்துக் கலந்துரையாடினோம்.
இந்தப் பணிக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் இன்றைய காலகட்டத்தில் பெரிதாக நம்பப்படும் செய்யறிவுக்கான (AI - ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட்) தரவுகளை வெகு விரைவாக விக்கிமூலத் திட்டத்தில் உருவாக்கிவிடலாம் என்பது பேராசிரியர்களின் கருத்தாக அமைந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)