முனைவர் த. சத்தியராஜ்
தமிழ் உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 042
கணினித் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைகின்றது. இந்த துறை மனிதரைப் போன்று செயல்படும் திறன் படைத்தது. இதன் வகை நான்கு. அவை; எதிர்வினை செயற்கை நுண்ணறிவு (Reactive Machine AI), வரையறுக்கப்பட்ட நினைவகச் செயற்கை நுண்ணறிவு (Limited Memory AI), கோட்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு (Theory Mind AI), விழிப்புணர்வு செயற்கை நுண்ணறிவு (Self - Aware AI) என்பன. இவை செயல்திட்டம் (Planning), கற்றல் (Learning), தர்க்கம் (Reasoning), பிரச்சனைக்கு தீர்வு (Problem Solving), தீர்வு காணல் (Decision making) என்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்குபவை. இந்தப் புரிதலின் அடிப்படையில் தமிழ்மொழித் தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு முறையில் தரும்பொழுது தேடுவோரின் தேடலுக்கு ஏற்ப அது தருவதற்கு முயற்சி செய்யும். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் குறித்துப் பின்வரும் வரைபடம் விளக்கும்.