புதன், 22 நவம்பர், 2023

தொல்காப்பியக் குறுஞ்செயலிக்குப் பரிசு - 7500

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தமிழ் மொழியுடன் இணைக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கில் தொல்காப்பியக் குறுஞ்செயலி உருவாக்கம் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை அளித்திருந்தோம். அந்தக் கட்டுரையின் கருத்தைத் தகவல் தொழில்நுட்ப மாணவர் கோ.பூவேந்திரன் அவர்கள் கருத்தரங்க நாளன்று எடுத்துரைத்தார்கள். அது இரண்டு சுற்றளவில் நடைபெற்றது. இதிலும் வாகை சூடிய எங்கள் கருத்துரு முதல் பரிசைப் பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியதாய் அமைகின்றது. 
நன்றிக்குரியோர்
...........................
கல்லூரி நிருவாகம்
கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள்
முனைவர் அ.வினோத் (கட்டுரையாளர்)
கோ.பூவேந்திரன்

சனி, 18 நவம்பர், 2023

விக்கித் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு

16.11.2023 அன்று தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ் விக்கிமூலத்தில் திருக்குறள் இருப்பும் தேவையும் என்ற தலைப்பில் கருத்து வழங்கினேன் (இணை ஆசிரியர் முனைவர் சே. முனியசாமி, கட்டுரைப் பொருண்மையை எடுத்துரைத்தார்.). அந்த அமர்வை மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே அமர்வில் என்னுடைய பதினேழாவது நூலாகிய விக்கித் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு நூல் முனைவர் இனிய நேரு அவர்கள் வெளியிட கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்ட நிகழ்வும் நடந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நூலை வெளியிடுவதற்குச் சூழலை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கழகத்தின் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்கு நன்றியுடையேன். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வருகின்றேன் என்பதை அறிந்த திண்டுக்கல், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமாகிய பேரா.சி.சிதம்பரம் அவர்கள் அன்று காலை 10.00 மணியளவில் அந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலைப்பூ உருவாக்கம் குறித்தும், விக்கித் திட்டங்கள் குறித்தும் உரையாட வாய்ப்பு ஏற்படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியுடையனாவேன்.

கிண்டிலில் வெளியிடப் பெற்றுள்ளது.

அதன் உரலி - விக்கிமீடியத் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு : Python usage in Wikimedia projects (Tamil Edition) https://amzn.eu/d/9O4nTz1

புதன், 11 அக்டோபர், 2023

ஒரு நாள் தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு (One day workshop on proofread in Tamil Wikisource)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக ஒரு நாள் தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு (One day workshop on proofread in Tamil Wikisource) எனும் பொருண்மையிலான பயிற்சி 11.10.2023 அன்று முற்பகல் 10.00 முதல் 3.00 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராக திருமிகு இர.லோகநாதன் (எ) தகவலுழவன்  (விக்கிமீடியர்) அவர்கள் கலந்துகொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம், நூல்கள் மெய்ப்புத் திருத்தம் போன்ற விக்கிமூல நுட்பங்கள் குறித்துப் பயிற்சியளித்தார்கள். இந்நிகழ்வில் 50-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்கள்.

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

புறப்பொருள் வெண்பாமாலை - புலியூர்க் கேசிகன் உரை

இன்று தந்தை பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்ற புலியூர்க் கேசிகன் நூற்றாண்டு விழாவில் புறப்பொருள் வெண்பாமாலை உரையை இலக்கணவியல் நோக்கில் அணுகிக் கருத்துரைத்தேன். என் கருத்துரைக்கு வலு சேர்க்குமாகப் பேரா. ஆசியதாரா, பேரா.முனீசுமூர்த்தி, பேரா.இளமாறன், பேரா.பாலாஜி, பேரா. பரமசிவன், பேரா.மோரிஸ் ஜாய் ஆகியோரது கருத்துரைகள் அமைந்திருந்தன. கூடுதலாகக் கற்றுக் கொண்டதும் அளவளாவியதும் மகிழ்ச்சியாக இருந்தன.

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஒத்தைப்பனை - பழமன் (கட்டுரை அமைப்பு)

  • ஒத்தைப்பனை - பழமன்

    • முன்னுரை

    • பழமன் - அறிமுகம்

    • ஒத்தைப்பனை - அறிமுகம்

    • ஒத்தைப்பனை - புதினச் சிறப்புகள்

    • ஒத்தைப்பனை - பன்முகப் பார்வை

      • கதைச் சுருக்கம்

      • கதை மாந்தர்கள்

        • இராமசாமிக் கவுண்டர்

          • முருகையன்

            • காளியம்மாள்

            • செல்லம்

            • சுப்பு

          • சின்னையன்

            • மங்களம்

            • குமார்
        • துளசி

        • தொழிற்சாலை முதலாளி

        • வடிவேலு - செல்லம் மாமன்

      • புதினம் கூறும் கருத்துக்கள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் சமூகம்

      • ஒத்தைப்பனை புதினத்தில் அறக் கருத்துக்கள்

      • ஒத்தைப்பனை இலக்கிய நயம்

      • ஒத்தைப்பனை - கதை மாந்தர் சிறப்புகள்

        • சின்னையன்

        • செல்லம்

        • இராமசாமிக் கவுண்டர்

      • ஒத்தைப்பனை புதினத்தில் வறுமையும் வளமையும்

      • ஒத்தைப்பனை புதினத்தில் பழமொழிகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் கொங்குச் சொலவடைகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் கதைக்கள ஊர்கள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் பெண்ணியம்

      • ஒத்தைப்பனை புதினத்தில் ஆசிரியரின் வெளிப்பாடுகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் உவமையும் உருவகமும்

      • ஒத்தைப்பனை புதினத்தின் அமைப்பு

      • ஒத்தைப்பனை புதினத்தில் தொடக்கம் - உச்சம் - வீழ்ச்சி

      • ஒத்தைப்பனை புதினத்தின் கதைப் புனைவு

      • ஒத்தைப்பனை புதினம் - திறனாய்வு

    • முடிவுரை