செவ்வாய், 21 ஜூன், 2022

வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

 

மகனே
வழக்கமான தாலாட்டை 
உனக்கு நான் 
வாசிக்க முடியாது

அவை 
மொழியின் ஆடம்பரங்கள்
கைது செய்து வைத்த 
கனாக்கள் 

தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

 

வருங்கால மனிதன் வருக!

புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!


விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!

சனி, 18 ஜூன், 2022

சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

 அழித்து எழுதமுடியாத

அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா

கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

 

‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு –சில
கைகள் கனிந்த கனிவு –குடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல
இலைகள் இரண்டு வரவு-அதில்
இயற்கை கலந்த அழகு
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலே –அந்தக்
கரிசல் கழனிமேலே –அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலே –அந்த

பாரதிதாசன் - தமிழின் இனிமை

 கவிஞர் பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!