வியாழன், 3 அக்டோபர், 2013

செல்லரித்த அட்டையாய்.....

மனித உயிர்களின் நேசம்
மயிர் போன்றது
நினைத்தால் முளைக்க வைக்கலாம்
வெறுத்தால் இழக்க வைக்கலாம் - இதில்
வாய் பேசா குழந்தை
தலையும், தடுமாறும்
மனமும் தான்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்


உரைநடை வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது. இந்நூற்றாண்டில்  அரசியலாரும், கிறித்துவ மதக்குருக்களும் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களையும், பாடசாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய முறைப்படி மாணவர்களுக்குப் பற்பல பாடங்களைக் கற்பித்தனர். சென்னைக் கல்விச்சங்கம்(Madras College) என்பதை நிறுவிப் பாடப் புத்தகங்களையும், உரைநடைப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.
      இதே காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (The madras school society) என்பதை 1850இல் நிறுவி சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இக்கழகத்தார் தகுந்த பரிசுகளை வழங்கி உரைநடை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினர்.

சனி, 28 செப்டம்பர், 2013

பயம்

கல்வி பழகிய பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
 மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்

இப்போது பயம்
கல்வியில் திளைத்து
குடும்பத்தைத் தவறவிடுவேனோ என
                                               -  இரா. நித்யா சத்தியராஜ்


உயர் கல்வியின் நிலைப்பாடுகள்


அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.