ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தேன்தமிழ் மன்றம் சார்பாக "மொழிபெயர்ப்புக்கலை"
எனும் தலைப்பில் மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கும் விதமாக சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. செல்வநாயகி வரவேற்றார். இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராகப்
பேராசிரியர் முனைவர்.பி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பின் வழிமுறைகளைக் கற்பித்தார். தமிழ், மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு மாணவர்கள் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பின் தேவையையும் பயன்களையும் வேலைவாய்ப்பையும் அறிந்துகொண்டு பயன் அடைந்தனர்.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 28 ஜனவரி, 2020
மொழிபெயர்ப்புக் கலை
செவ்வாய், 21 ஜனவரி, 2020
சிகரங்களைச் செதுக்குவோம்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக "சிகரங்களைச் செதுக்குவோம்"
எனும் தலைப்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கைப் பேச்சாளர்,
பேராசிரியை முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் இன்றைய தலைமுறை மாணவர்களின் கவனச்சிதைவு மற்றும் அவற்றின் காரணிகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீண்டு எவ்வாறு வாழ்வில் உயரலாம் எனவும்,
மாணவர்கள் தங்களைத் தாங்களே செதுக்கிக் கொண்டு, தங்களுடைய வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலானவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிகரங்களைப்போல் செதுக்கிக் கொண்டு சமுதாயத்தில் மிகப்பெரிய நிலையை அடைந்தனர் என்பது பற்றியும் அருமையாகப் பேசி மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சிகரங்களைச்செதுக்க ஊக்கப்படுத்தினார்.
செய்தியாக்கம்: பேரா.ப.இராஜேஷ்
செவ்வாய், 14 ஜனவரி, 2020
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020
“ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020” கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். தமிழர் பாரம்பரியப்படி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். வழிபாட்டின் போது மாணவிகள் கும்மியடித்தல் போன்ற கிராமிய நடனங்களை ஆடிப்பாடிக் கொண்டாடினார்கள். இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு கோலம் போடுதல், ரங்கோலி வரைதல், கயிறு இழுத்தல், உறியடித்தல், சாக்குப்போட்டி, லெமன் மற்றும் ஸ்புன், பலூன் உடைத்தல், கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கிப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தமிழர் பாரம்பரிய அங்காடிகள் திறக்கப்பட்டு பல்வேறு பாரம்பரிய பொருட்கள் விற்கப்பட்டன.
செய்தி ஆக்கம் : பேரா.ப.இராஜேஷ்
வியாழன், 9 ஜனவரி, 2020
ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 09.01.2020 இன்று “ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா” நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் இரா.குணசீலன்(இணையத்தமிழ் ஆய்வாளர்) அவர்கள் கலந்துகொண்டு “இணையத்தமிழ் நுட்பங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். வலைப்பதிவு, விக்கிப்பீடியா, யுடியுப், குறுஞ்செயலிகள், தமிழ் எழுத்துருக்கள், இணையவழிக் கல்வி, இ-புக் ஆகியவற்றை இணையங்கள் மூலம் தமிழில் பதிவேற்றவும் தரவிறக்கம் செய்வதற்கும், தமிழ் மொழியை உலகளாவில் வளர்ச்சி அடைய செய்யக்கூடிய செயல்கள் குறித்து தன் கருத்துரையில் விளக்கினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவாக சான்றுகளுடன் விளக்கினார். இக்கருத்தரங்கம் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்தது.
ஆக்கம் :
பேரா.ப.இராசேசு
வியாழன், 2 ஜனவரி, 2020
தமிழியல் ஆய்வுகள்: அடைவுபடுத்தலும் மதிப்பிடுதலும் (International Seminar on Indexable and Evaluation of Tamilology)
இணைந்து மார்ச் 2020இல் பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதற்கு உலகத் தமிழாய்வாளர்கள் ஆர்வலர்கள் கட்டுரை
வழங்கிச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.