சனி, 16 டிசம்பர், 2023

இணையப் பாடங்கள் - கற்றல் - சான்றிதழ்கள்

 

நான் சிறப்புக் கல்வி (Great Learning) இணையம் மூலமாகக் கற்ற பாடங்களுக்குக் கிடைத்த சான்றிதழ்களை இங்குப் பகிர்கின்றேன். இதற்குக் காரணம் இதன் மூலமாவது என் வலைப்பூ வாசகர்களுக்கு அறியத் தரும் தகவலாக நான் கருதுகின்றேன். 

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

இனம் ஆய்விதழ் மீதான மதிப்பீடு

இனம் ஆய்விதழுக்கு வந்த மதிப்பீடு
....................................
ஒன்பதாண்டு உழைப்பிற்குக் கிடைத்த பலன் இதுபோன்ற கருத்துரைகளே... இனம் ஆய்விதழின் பத்தாம் ஆண்டுத் தொடக்கப் பதிப்பிலிருந்து (இதழ் 37) முன்னணி கணினி அறிவியல் ஆய்விதழான இசுபிரிங்கர் நேச்சர் லிங்க் இதழின் தரம் போன்று வரவிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
............................
மகிழ்ச்சி சத்தியராஜ் மற்றும் மூனிஸ்
என்னுடைய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. சில பிழைகள் இருக்கின்றன. என்னுடைய தட்டச்சு மற்றும் கணினி முறையே தவறுகளுக்குக் காரணம் என அறிந்து கொண்டேன்.
அகல்யாவின் ‘மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு’, சத்தியராின் ‘வள்ளலார் திருவருட்பா தெலுங்கு மொழிபெயர்ப்பு - பன்முகப்பார்வை”, இராசையா தேவேந்திரனின் ‘க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டலின் வினைத்திறனின்மையானது அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம்’ ஆகிய கட்டுரைகளையும் வாசித்தேன். மூன்றும் ஒரு திறத்தன. தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் நெறியில் ஆய்வு செய்யப்பட்டவை. ஆய்வேட்டிற்குரிய முறைமைகளையும் கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன. இதுபோல் ஆழமிக்கக் கட்டுரைகள் தமிழ் ஆய்விதழ்களின் வெளி வருவதில்லை. நமது இனம் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சி. தொடரட்டும் இப்பணி. வாழ்த்துக்கள்.

Dr. M.BALASUBRAMANIAN
ASSOCIATE PROFESSOR
TAMIL STUDIES & RESEARCH
ANNAMALAI UNIVERSITY
ANNAMALAI NAGAR
9488013050

வியாழன், 30 நவம்பர், 2023

இனம் _ ஒன்பதாம் ஆண்டின் இறுதிப் பதிப்பு - பிப்ரவரி 2024இல் வெளிவரும்

இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கி வருகிறது.

இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித் தமிழ், தமிழ் இயற்கை மொழி, ஊடகம் போன்ற ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும்.

இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம். எனவே, தங்களின் ஆய்வுச் சிந்தனைகளை அனைவரும் வாசிக்கவும் மேற்கோள் காட்டவும் இவ்விதழ் உறுதுணை நல்கும் என உறுதியளிக்கின்றோம்.

Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials. 

Dear researcher, we welcome original articles from all over the world who willing to support the Tamil research journal from Tamil Nadu, India. The articles from Arts, Literature, Grammar, Philosophy, Linguistics, Folklore, Archeology, Religion, Science, Tamil NLP and Computing Tamil Related Researches are most preferable. Your article will be published in the journal “Inam” if your manuscript qualified the editorial review process. 

The aim of the journal is to extend the readability of the Tamil research article among interested readers around the world. We hope, this journal exposes your research to a vast audience and aids to cite your research.

CURRENT ISSUE
..................
Vol. 9 No. 36 (2023): மலர் : 9, இதழ் : 36 நவம்பர் (November) 2023
 View Vol. 9 No. 36 (2023): மலர் : 9, இதழ் : 36 நவம்பர் (November) 2023
..................
PUBLISHED: 30.11.2023
Full Issue
 FULL ISSUE DOWNLOAD
..................
Articles
..................
அற இலக்கியப் பதிவுகளில் காமன் என்னும் தொன்மம் Khaman Myth in Moral Literature
முனைவர் மூ. பாலசுப்பிரமணியன் | Dr. M. Balasubramanian
1 - 10
 பதிவிறக்கம் (DOWNLOAD)
...............
மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு The involvement of parents in enhancing the knowledge of students who excel in learning
பட்டிருப்பு வலய, மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்ட 1 AB, 1C, வகை - 2 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு
ஒய். அகல்யா | Y.Ahalya, பி.சோபா | B.Soba
11 - 22
 பதிவிறக்கம் (DOWNLOAD)
..................
வள்ளலார் திருவருட்பா தெலுங்கு மொழிபெயர்ப்பு - பன்முகப்பார்வை Vallalar Thiruvarutpa Telugu Translation - Multiview
சத்தியராஜ் தங்கச்சாமி | Sathiyaraj Thangasamy
23 - 30
 பதிவிறக்கம் (DOWNLOAD)
......................
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டலின் வினைத்திறனின்மையானது அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் The Impact on the G.C.E A/L students due to lack of guidance on professional skills
இராசையா தேவேந்திரன் | Rassaiah Devendran
31 - 40
 பதிவிறக்கம் (DOWNLOAD)

புதன், 22 நவம்பர், 2023

தொல்காப்பியக் குறுஞ்செயலிக்குப் பரிசு - 7500

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தமிழ் மொழியுடன் இணைக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கில் தொல்காப்பியக் குறுஞ்செயலி உருவாக்கம் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை அளித்திருந்தோம். அந்தக் கட்டுரையின் கருத்தைத் தகவல் தொழில்நுட்ப மாணவர் கோ.பூவேந்திரன் அவர்கள் கருத்தரங்க நாளன்று எடுத்துரைத்தார்கள். அது இரண்டு சுற்றளவில் நடைபெற்றது. இதிலும் வாகை சூடிய எங்கள் கருத்துரு முதல் பரிசைப் பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியதாய் அமைகின்றது. 
நன்றிக்குரியோர்
...........................
கல்லூரி நிருவாகம்
கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள்
முனைவர் அ.வினோத் (கட்டுரையாளர்)
கோ.பூவேந்திரன்

சனி, 18 நவம்பர், 2023

விக்கித் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு

16.11.2023 அன்று தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ் விக்கிமூலத்தில் திருக்குறள் இருப்பும் தேவையும் என்ற தலைப்பில் கருத்து வழங்கினேன் (இணை ஆசிரியர் முனைவர் சே. முனியசாமி, கட்டுரைப் பொருண்மையை எடுத்துரைத்தார்.). அந்த அமர்வை மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே அமர்வில் என்னுடைய பதினேழாவது நூலாகிய விக்கித் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு நூல் முனைவர் இனிய நேரு அவர்கள் வெளியிட கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்ட நிகழ்வும் நடந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நூலை வெளியிடுவதற்குச் சூழலை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கழகத்தின் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்கு நன்றியுடையேன். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வருகின்றேன் என்பதை அறிந்த திண்டுக்கல், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமாகிய பேரா.சி.சிதம்பரம் அவர்கள் அன்று காலை 10.00 மணியளவில் அந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலைப்பூ உருவாக்கம் குறித்தும், விக்கித் திட்டங்கள் குறித்தும் உரையாட வாய்ப்பு ஏற்படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியுடையனாவேன்.

கிண்டிலில் வெளியிடப் பெற்றுள்ளது.

அதன் உரலி - விக்கிமீடியத் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு : Python usage in Wikimedia projects (Tamil Edition) https://amzn.eu/d/9O4nTz1