மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
வெள்ளி, 28 ஜூலை, 2023
முக ஓவியப் போட்டி
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, யுவா மன்றத்தின் சார்பாக, உலக இயற்கைப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இயற்கையும் மனிதனும் என்ற பொருண்மையிலான முக ஓவியப் போட்டி 28.07.2023 அன்று முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் சிறப்பு மதிப்பீட்டாளராக பேராசிரியர் பிரியதர்ஷினி ( வணிகத் தொழிநுட்பவியல் துறை) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் தனித்திறனை மதிப்பீடு செய்தார்.
வியாழன், 27 ஜூலை, 2023
விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் (Account create in Wikisource)
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் (Account create in Wikisource) எனும் பொருண்மையிலான பயிற்சி 27.07.2023 அன்று பிற்பகல் 2.10 முதல் 3.20 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராக முனைவர் ம.மைதிலி (தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர்) அவர்கள் கலந்துகொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் குறித்துப் பயிற்சியளித்தார்கள். இந்நிகழ்வில் 66-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்கள்.
புதன், 26 ஜூலை, 2023
தமிழில் வடிவமைப்புப் பயிற்சி (திறன் மேம்பாட்டுப் பயிற்சி)
தமிழில் வடிவமைப்புப் பயிற்சி (திறன் மேம்பாட்டுப் பயிற்சி)
நண்பர்களுக்கு,
தமிழ் வணக்கம்.
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விப்புலச் சார்பு பணிகளில் இருப்பவர்கள், நிறுவனங்கள் வைத்து நடத்துபவர்கள், இலக்கிய அமைப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சார்ந்து இணையத்தில் தொடர்ந்து இயங்குபவர்கள், சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள், இணையக் கல்வி பயிற்சியாளர்கள் போன்றோர்கள் தங்கள் பணித்தேவைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தற்போதைய கணினி யுகத்தில் வடிவமைப்புப் பற்றிய புரிதல் பெற்றிருத்தல் மிகவும் அவசியமானதாகும்.
வடிவமைப்பு என்றால் கணினியின் மென்பொருள் அறிவு பெற்றிருப்பது என்று பொருள் அல்ல. மாறாக அடிப்படையாக ஒரு மனிதர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வடிவமைப்புப் பற்றிய விழிப்புணர்வும் வடிவமைப்பிற்கான அடிப்படை உறுப்புகளை பற்றிய அறிதலும் ஆகும்.
இவ்வடிப்படை விழிப்புணர்விலிருந்தே, கணினித் தொழில்நுட்ப அறிவு ஓரளவு இருந்தாலே நம்மால் தரமான, நேர்த்தியான, பொருள்பொதிந்த, அழகியலுடன் கூடிய வடிவமைப்புகளை உருவாக்க இயலும்.
அத்தகையப் பயிற்சியாகத்தான் இப்பயிற்சியை அனலியும் இனமும் இணைந்து மிகக்குறைந்த கட்டணத்தில் அதே வேளையில் தரத்திலும் அடர்விலும் குறைவுபடாது நடத்தயிருக்கிறோம்.
எப்போதும்போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
கீழே தரப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி இப்பயிற்சிக்கான பெயர் பதிவில் இணைந்து கொள்க.
https://forms.gle/Xmkx1XWWEjWEM3d89
தோழமையுடன்
அனலியும் இனமும்
செவ்வாய், 25 ஜூலை, 2023
வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்
தமிழ்த்துறையின் கணித்தமிழ் யுகமன்றத்தின் சார்பாக ”வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்” எனும் தலைப்பில் பயிலரங்கம் இன்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்வின் பயிற்றுநராகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார். வலைப்பதிவு உருவாக்கும் முறை, பதிவுகள் மற்றும் தரவுகள் பதிவேற்றும் முறை, வாசகர்கள் ஊடாடும் முறை, வலைப்பதிவின் நன்மைகள் ஆகியவற்றை சிறப்பாகப் பயிற்றுவித்தார். பல துறைசார்ந்த மாணவர்கள் 75 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மாணவர்களின் பல வினாக்களுக்குத் தெளிவாக விடையளித்து வலைப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இந்நிகழ்வை கணித்தமிழ் யுகமன்ற ஒருங்கிணைப்பாளர் ப.ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.
விக்கித்திட்டங்கள் அறிமுகம் (Introduction to Wiki Projects)
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக விக்கித்திட்டங்கள் அறிமுகம் (Introduction to Wiki Projects) எனும் பொருண்மையிலான பயிற்சி 25.07.2023 அன்று பிற்பகல் 2.10 முதல் 3.10 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்களும் கணினி அறிவியல்துறைத் தலைவர் முனைவர் கே.சித்ரா அவர்களும் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராகத் திருமதி வா.காருண்யா (தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர்) அவர்கள் கலந்து கொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் குறித்துப் பயிற்சியளித்தார்கள். இந்நிகழ்வில் 64 - ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)