வியாழன், 6 ஜனவரி, 2022

கலைச்சொல் விளக்கம் 1

அக அமைப்பு (Deep Structure) : அக அமைப்பு தொடரமைப்பு. வீதி தோற்றுவிக்கப்பட்ட நுண்குறியீடுகளின் தொடர்ச் சங்கிலி. வாக்கியத்திற்குப் புற அமைப்பு என்ற நிலையும் அக அமைப்பு என்ற நிலையும் உண்டு. வாக்கியத்தின் சொற்களுக்கு இடையே அமைந்த இலக்கண உறவு (எழுவாய் பயனிலை போன்ற உறவுகள்) வரையறுக்கப்படுகின்ற நிலை அக அமைப்பு. பொருளியல் விதிகள் செயல்படுகின்ற தொடரியல் நிலையும் இதுதான்.

அடி(Base) : மாற்றிலக்கணத்தின் ஒரு துணைப் பகுதியை அடி  என்று மாற்றிலக்கணத்தார் குறிப்பிடுகிறர்கள். இதை அடிப்பகுதி என்றும் இவர்கள் கூறுவார்கள். அக அமைப்பைத் தோற்றுவிக்கின்ற தொடரமைப்பு விதிகளும் பெயர்வினைப் பாகுபாட்டு விதிகளும் சொற்களஞ்சியமும் அடங்கிய மாற்றிலக்கணத்தின் துணைப் பகுதி இது.

அடிப்பகுதி (Base Component): அடி என்பதும் இதையே குறிக்கும். அக அமைப்பை உருவாக்க உதவக்கூடிய விதிகள் கொண்ட மாற்றிலக்கணத்தின் துணைப் பகுதி இது. மாற்றிலக்கணம் அடிப்பகுதியோடு மாற்றுவிதி பகுதியையும் பொருளியல் பகுதியையும் ஒலியனியல் பகுதியையும் உள்ளடக்கியது. அடிப்பகுதியும் மாற்று விதிப் பகுதியும் தொடரியல் பகுதியின் அங்கங்கள்.

அடிப்படை வாக்கியம் (Kernel Sentence): மொழியில் உள்ள வாக்கியங்கள் ஒன்றற்கொன்று தொடர்புடையவை. தொடர்புடைய வாக்கியங்களுக்கு அடிப்படை வாக்கியம் ஒன்றைத் தொடரியல் விதிகளும் கட்டாய மாற்றுவிதிகளும் தோற்றுவிக்கின்றன. இவ்வடிப்படை வாக்கியத்தின்மீது சிறப்பு மாற்று விதிகள் செயல்படும்பொழுது மற்றைய தொடர்புடைய வாக்கியங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. 1957ல் உருவான மாற்றிலக்கணத்தில் காணப்படுவது இது. இதற்குப் பின்பு உருவான மாற்றிலக்கணத்தில் இக்கருத்து கைவிடப்பட்டது. (பக்.70-71)

இந்நூலில் இடம்பெற்ற கலைச்சொல் விளக்கங்களே தொடர்ந்து இனி வெளிவரும்.

திங்கள், 3 ஜனவரி, 2022

நானும் அண்ணனும் (முதுபெரும்புலவர் கொளுந்துறை இராமதாசர் சுவாமிகள்)

- சிவஞானதாசர்

D:\mudukulathur pulavar\b&W pic\siva.jpgஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துறை எனும் ஊரில் பழனியாண்டி பெருமாத்தாள் ஆகிய இருவருக்கும் 07.11.1916 ஆம் ஆண்டு பிறந்தவரே இராமதாசர். சிறுவயது முதல் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய எனது அண்ணன் இராமதாசர் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு மலேசியாவிற்கு சென்று தமிழ்ப் பணியாற்றியுள்ளார். மலேசியா மண்ணில் கல்வியறிவின்றி செப்பமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழர்களைக் கண்டு மதிப்புமிகுந்த நாகரிக வாழ்க்கைக்கு வழி காட்டியாக விளங்கியுள்ளார். செந்தமிழ்ப் பாடசாலைகளை நிறுவி கல்லாமை என்னும் இருளைப் போக்கியுள்ளார். தான் கற்ற கல்வி வாயிலாக வாழ்நாள் முழுவதும் சேவை மனப்பான்மையுடன் சிறந்துள்ளார். சமயப் பாகுபாடு பாராது மலேசிய மக்களுக்கு கோவில், மசூதி, கிறித்துவ ஆலயங்களையும் கட்டிக்கொடுத்துள்ளார். அவரிடம் பயின்ற மாணவர்கள் சிறந்த கவிஞர்களாகவும், சிறந்த ஆளுமைகளாகவும் விளங்கியுள்ளனர். எனது அண்ணன் இராமதாசர் வாழ்க்கை முழுவதும் தமிழுக்காகவும், தமிழருக்காவும் சேவையாற்றிய  28.4.1991 ஆம் ஆண்டு அதிகாலை 2 மணியளவில் இம்மண்ணைவிட்டுச் சென்றார். பிறந்த ஊரான கொழுந்துறையில் அவரது உடல் அடக்கச் செய்யப்பட்டுள்ளது. 

புதன், 29 டிசம்பர், 2021

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 2

பெண்கள் வெற்றிகொள்ள மாத்திரம் அல்ல. வெல்லப்படவும் விரும்புகின்றனர் - தாக்கரே

ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் - பீல்டிங்

எவ்விடத்தில் பெண் மதிக்கப்படுகிறாளோ அவ்விடத்தில் தேவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர் - மனுசாஸ்திரம்

பெண்ணிற்குப் பெருமை தருவது அவளது தூய்மையான இதயம் - கிளாடியசு

ஆண்கள் பார்வையைப் ெற்றிருக்கின்றனர்; பெண்கள் உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றனர் - ஹியூகோ

KRV

புதன், 24 நவம்பர், 2021

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 1

கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் பெண்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் - போவீ

பெண்களின் வாயைவிட அவர்களின் கண்களே அதிகம் பேசும் - காண்டேகர்

பெண் அடிமையாயிருந்தால் ஆண் சுதந்திரமாக இருக்க முடியாது - செல்லி

பெண்ணின் மடியிலே இறையன்பு வளர்கிறது - லாயர்

அன்பு இல்லாத பெண் வாசம் இல்லாத மலரைப் போன்றவள் – ரூசோ

பெண்களின் ஒரு கண் அன்பு ஒளியை வீசும்; மறுகண் யுக்தியால் எடைபோடும் - சார்லசு

KRV

புதன், 13 அக்டோபர், 2021

இதயம் - சில குறிப்புகள்

  • ஒரு நாளில் நம் இதயம் எத்தனை முறை துடிக்கிறது. - 115,000
  • ஒவ்வொரு நாளும் இதயத்தால் செலுத்தப்படும் இரத்த கேலன்களின் எண்ணிக்கை. - 2,000