வியாழன், 13 மே, 2021

மலர் 7 இதழ் 27 கட்டுரை வரவேற்றல்


இனம் ஏழாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது
................................
இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (ISSN:2455-0531)

ஆகஸ்ட் 2021 மலர் :7 இதழ் : 26 
Auguest  2021  | Volume VII Issue 27
பதிப்பிற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 
இறுதி நாள் : 20 சூன் 2021

அடிப்படைக் கட்டமைப்புநெறிகள்
....................

தமிழில் /ஆங்கிலத்தில் கட்டுரைத் தலைப்பு
 
தமிழ் / ஆங்கிலம் பெயர்

ஆங்கிலம் / தமிழ் - ஆய்வுச் சுருக்கம்

திறவுச் சொற்கள்

Citation: கென்னடி ஜீ., (May 2021), “டோனி மொரிசனின் நாவல்களில் தலைமுறையினருக்கு இடையேயான முரண்பாடு (Generational Conflict in Toni Morrison’s Novels)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.7, Issue 27, pp.. (என அமைதல் வேண்டும்)

இதன் பின்பு கட்டுரை தொடங்கலாம்....

மதிப்பீட்டு முறையும் வெளியீடும்
..............................
இதுதான் முதல் மதிப்பீடாக இருக்கும்

அடுத்த மதிப்பீடு புதியவற்றை முன்வைக்கிறதா என்பது

இறுதி மதிப்பீடு துறைசார் வல்லுநரிடம்

பின்பு கட்டுரை மெய்ப்பாக்கம்

இறுதியில் இணையத்தில் வெளிவரும்.

ஞாயிறு, 9 மே, 2021

உடேமியின் உள்ளடக்க பதிவும் வாழ்நாள் அணுகலும்

நீங்கள் ஒரு பாடநெறி அல்லது பிற உள்ளடக்கத்தில் சேரும்போது, ​​உடேமி சேவைகள் வழியாக அதைப் பார்க்க உடேமியிடமிருந்து உரிமத்தைப் பெறுவீர்கள், வேறு எந்தப் பயனும் இல்லை. உள்ளடக்கத்தை எந்த வகையிலும் மாற்றவோ மறுவிற்பனை செய்யவோ முயற்சிக்க வேண்டாம். சட்டரீதியான அல்லது கொள்கை காரணங்களால் அல்லது சந்தா திட்டங்கள் வழியாகச் சேருவதால் உள்ளடக்கத்தை முடக்க வேண்டும் என்பதைத் தவிர, உடேமி பொதுவாக உங்களுக்கு வாழ்நாள் அணுகல் உரிமத்தை வழங்குகிறது.

சனி, 8 மே, 2021

தொல்லியல் கலைச்சொற்கள் (Archaeological Terms)

Pre-Historic Period - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
Proto - Historic Period - வரலாற்றிற்கு இடைப்பட்ட காலம்
Historical Period - வரலாற்றுக் காலம்
Palaeolithic Period - பழைய கற்காலம்
Neolithic Period - புதிய கற்காலம்
Megalithic Period - முதல்நிலை பெருங்கற்காலம்
Early Palaeolithic Period - முதல் பழைய கற்காலம்
Middle Palaeolithic Period - இடைப்பழைய கற்காலம்
Late Palaeolithic Period - கடைப் பழைய கற்காலம்
Introduction of Archaeology - தொல்லியல் ஓர் அறிமுகம்
History of Archaeology - வரலாற்றுப் பார்வையில் தொல்லியல்
Information about Excavations and its Methodology - அகழாய்வுகளும் அதன் நெறிமுறைகளும்
Notification of Historical Sites - அகழாய்விற்குரிய இடங்களைத் தெரிவு செய்தல்
Importance ofArchaeological Excavations - அகழாய்வின் இன்றியமையாமை
Stratigraphy - மண்ணடுக்குகள்
Measurements - அளவீடுகள்
Clasification of Periods - காலக்கணிப்பு முறைகள்
Clasification of Antiquities - தொல்பொருட்கள் பகுப்புமுறை
Necessary equipments - தேவையான உபகரணங்கள்
Recording - பதிவுமுறைகள்
Registers - பதிவேடுகள்
preserving - பாதுகாத்தல்
Preparation of Excavation Report - அகழாய்வு அறிக்கை தயாரித்தல்
Antiquity Act 1972 - தொல்லியல் பாதுகாப்புச் சட்டம் 1972
Monuments of Tamilnadu State Archaeology - தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்கள்
Glossary of Archaeological Terms - தொல்லியல் சொல்லகராதி


ஞாயிறு, 2 மே, 2021

உடேமியின் பயன்பாட்டு நெறிகள் - கணக்கு

உடேமியில் இணைந்து செயல்பட ஒரு கணக்கு தேவை. அந்தக் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனென்றால் உங்கள் கணக்குடன் தொடர்புடைய எல்லா செயல்பாடுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பு. உங்கள் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், எங்கள் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்வதன் மூலம் தெரியப்படுத்தலாம். உடேமியைப் பயன்படுத்த உங்கள் நாட்டில் ஆன்லைன் சேவைகளுக்கான ஒப்புதல் வயதை நீங்கள் அடைந்திருக்க வேண்டும்.

சனி, 1 மே, 2021

உடேமியின் பயன்பாட்டு விதிமுறைகள்

 உடேமி பயன்பாட்டு விதிமுறைகளைக் கடைசியாக ஏப்ரல் 1, 2021 அன்று புதுப்பித்தது.

கற்றல் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதே உடேமியின் நோக்கம். கல்வி உள்ளடக்கத்தை (பயிற்றுநர்கள்) உருவாக்கவும் பகிரவும், அந்தக் கல்வி உள்ளடக்கத்தைக் (மாணவர்கள்) கற்றுக் கொள்ளவும் எங்கும் எவருக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் சந்தை மாதிரியை அதன் பயனர்களுக்கு மதிப்புமிக்க கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகக் கருதுகிறது. அனைவரும் இந்தத் தளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் விதிகள் தேவை. ஆகவே, இந்த விதிமுறைகள் உடேமி வலைத்தளம், உடேமி மொபைல் பயன்பாடுகள், தொலைக்காட்சிப் பயன்பாடுகள், ஏபிஐகள், பிற தொடர்புடைய சேவைகள் ஆகியவற்றில் உள்ள உங்கள் எல்லாச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.