திங்கள், 9 நவம்பர், 2015

தமிழறிஞர் முனைவர் துரை. மணிகண்டன்

தெய்வ சுந்தரம் நயினார்'s photo.
முனைவர் துரை. மணிகண்டன் (1973) ... தமிழ் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிற ஒரு துடிப்புள்ள தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் உலகில் வலைப்பூக்கள் மலர்ந்து மணம் தரவேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கில் இடைவிடாது தனது பயிலரங்கப் பயணத்தை மேற்கொண்டுவருபவர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழில் இளங்கலை, முதுகலை , ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தேசியக் கல்லூரியில் ( பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 'இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ' என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். கணினிப்பிரிவிலும் சான்றிதழ் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பேராசியராகத் திருவரங்கத்தில் ( ஸ்ரீரங்கம்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் தமிழ் இணையம், வலைப்பூக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உடைய எவருக்கும் இவரைத் தெரியாமல் இருக்கமுடியாது.

சனி, 7 நவம்பர், 2015

தமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழி (புரோகிராமிங் லாங்வேஜ்)

கணினி தமிழர்களுக்கு அறிமுகமான காலத்திலிருந்தே, தமிழிலும் ஒரு கணினி நிரலாக்க மொழி உருவாக்கிட முயற்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்று தான். பற்பல காரணங்களுகாகவும் இது முழுவதுமாக நிறைவேராத ஒன்றாகவே இருக்கிறது. "முழுவதுமாக நிறைவேராத ஒன்று" என நான் குறிப்பிட்டுள்ளதற்கு காரணம், பலரும் இதை செயற்படுத்த முனைந்துள்ளனர். கணினிசார் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களாலும் சில தொழிற்நுட்ப கல்விக்கூடங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களிலும் இது முயற்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் பலநேரம் ஒரு ஆய்வறிக்கையோடே நின்றுவிட்டது அல்லது இவ்வாய்வாளர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினையான அறிவுரைகளாலும் சரியான உக்குவிப்பு கிடைக்காததாலும் ஒரு சலிப்பு ஏற்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழறிஞர் முனைவர் ந. அரணமுறுவல்

தெய்வ சுந்தரம் நயினார்'s photo.முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) ... தனித்தமிழ் உணர்வாளர் ... தமிழியக்கத் தொண்டர் ... ஈழ விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் ... பொதுவுடமைச் சிந்தனையாளர் ... தமிழ்த்தேசியப் போராளி... இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர் ... தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்., பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச் செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார். சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.

நாடக நிலத்திலிருந்து

'மணல்மகுடிக் கலைஞர்களுடன் முருகபூபதி அண்ணன்'
நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் நிலத்தின் கோமாளி தேடிய மணல்மகுடியின் பயணம் மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும்  பாறைவெளியில் நவீன ஓவியர்களின் தூரிகையில் கோமாளி முகம் தேடிய கலைமுகாமில் துவங்கி தமிழ் நிலமெங்கும் அலைந்து சூரங்குடி சாமியாட்டம்,தொன் கோயில் சிற்பங்கள் என மணல்மகுடி கலைஞர்கள் திரட்டிய பதிவுகளுடன் சமவெளி கடந்து ஜவ்வாது மலைக்குன்று கூத்துக் கலைஞர்கள், நீலகிரி மலைவாழ் படுகர்கள்,தோடர்கள், இருளர்கள் என ஆதிப் பழங்குடிகளின் மொழி அலையுறும் மலைக்காட்டுக் கருவிகளின் இசை இழுத்து மூச்சாக்கி,கரிசல் நிலத்தின் ஜிம்ளா முயங்களில் நம் நாடக தாத்த சங்கரதாசு சாமிகளின் ஆசி வழி பிரதியாகி ஒத்திகையில் ஆற்றுகை வடிவமாகிக்கொண்டிருக்கிறது.

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம்

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம் - கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு.
________________________________________________
nel 2
பழனி அருகே உள்ள பொருந்தல் பகுதியில் வாழ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கண்ணாடி மணிகள் மெருக்கேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. இந்த மணிகள் பல்வேறு நிறத்தில் காணப்படுகின்றன.