சனி, 7 நவம்பர், 2015

தமிழறிஞர் முனைவர் ந. அரணமுறுவல்

தெய்வ சுந்தரம் நயினார்'s photo.முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) ... தனித்தமிழ் உணர்வாளர் ... தமிழியக்கத் தொண்டர் ... ஈழ விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் ... பொதுவுடமைச் சிந்தனையாளர் ... தமிழ்த்தேசியப் போராளி... இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர் ... தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்., பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச் செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார். சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.

நாடக நிலத்திலிருந்து

'மணல்மகுடிக் கலைஞர்களுடன் முருகபூபதி அண்ணன்'
நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் நிலத்தின் கோமாளி தேடிய மணல்மகுடியின் பயணம் மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும்  பாறைவெளியில் நவீன ஓவியர்களின் தூரிகையில் கோமாளி முகம் தேடிய கலைமுகாமில் துவங்கி தமிழ் நிலமெங்கும் அலைந்து சூரங்குடி சாமியாட்டம்,தொன் கோயில் சிற்பங்கள் என மணல்மகுடி கலைஞர்கள் திரட்டிய பதிவுகளுடன் சமவெளி கடந்து ஜவ்வாது மலைக்குன்று கூத்துக் கலைஞர்கள், நீலகிரி மலைவாழ் படுகர்கள்,தோடர்கள், இருளர்கள் என ஆதிப் பழங்குடிகளின் மொழி அலையுறும் மலைக்காட்டுக் கருவிகளின் இசை இழுத்து மூச்சாக்கி,கரிசல் நிலத்தின் ஜிம்ளா முயங்களில் நம் நாடக தாத்த சங்கரதாசு சாமிகளின் ஆசி வழி பிரதியாகி ஒத்திகையில் ஆற்றுகை வடிவமாகிக்கொண்டிருக்கிறது.

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம்

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம் - கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு.
________________________________________________
nel 2
பழனி அருகே உள்ள பொருந்தல் பகுதியில் வாழ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கண்ணாடி மணிகள் மெருக்கேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. இந்த மணிகள் பல்வேறு நிறத்தில் காணப்படுகின்றன.

வெள்ளி, 6 நவம்பர், 2015

விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்

விகிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு அழகிய அஞ்சல் அட்டைகளை வெல்லுங்கள்! கூடுதல் கட்டுரைகளை உருவாக்கி “விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்” என்ற சிறப்பினைப் பெறுங்கள்!
க்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
WikipediaAsianMonth-ta.svg
ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம்(Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2015 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.
ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் “விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்” என சிறப்பிக்கப்படுவார்கள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

உறவு


வண்டுகள் ரீங்கார மிட்டனர்
வளர் பூக்களைக் கண்டு!

ஆடுகள் மெய் சிலிர்த்தனர்
ஆசைதரும் புட்களை உண்டு!

மாடுகள் மகிழ்வு எய்தினர்
மயக்கும் பசுந்தளிர் தின்று!

கிளிகள் கிள்ளைப் பேசினர்
கிணற்றுக் கண்ணாம் பொந்து கண்டு!

மைனாக்கள் மயக்கம் தெளிந்தனர்
மையலார் நட்ட பனை கண்டு!

கோழிகள் குதூகளித்தனர்
காலை வரவைக் கண்டு!

காக்கைகள் கூச்சலிட்டனர்
கருத்து உணவு கண்டு!

மனித சந்துகள் புலம்பின
மயக்கும் மது உண்டு!

மாலையும் மயங்கினர்
மையல்கள் குழுமிடக் கண்டு!

கொண்டவனும் கொக்கரிக்கும்
கொளுந்து உசுப்பிவிடக் கண்டு!

குருதி உறவும்
குதறிப் போகுதே இன்று
அண்ணன் தம்பி
அக்காள் தங்கை
மச்சான் மச்சினி
உறவுகளே ஆக்கும் நின்று
இதை அறியடா மண்டு! மண்டு!!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடுஇந்தியா,
                                                                    9600370671

   உறவு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன்இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும்போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.