மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
புதன், 26 ஆகஸ்ட், 2015
ஞாயிறு, 19 ஜூலை, 2015
உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும்கல்லூரி)
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல்,
பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
கட்டணம் செலுத்திய ரசீது.
மதிப்பெண் பட்டியல் நகல்,
பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
புதன், 24 ஜூன், 2015
வாசிப்பை நேசி!
கோவை, இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை, நூலகம் மற்றும் கோவை விஜயா பதிப்பகமும் இணைந்து
நடத்திய ‘வாசிப்புத் திருநாள்’ நிகழ்வு கல்லூரி நூலகத்தில் 23.06.2015 காலை 10.00 மணியளவில்
நடைபெற்றது.
இந்நிகழ்வினை மொழித்துறைத் தலைவர் திரு.த.திலிப்குமார்
அவர்கள் வாசித்தலே நம்மின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்; உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்
என நூல் பற்றிய புரிதலை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி
அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில்; சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க
மறவாதீர்! என நூல்வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களின் மனதில் ஆழப் பதித்து, இது
போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்றார்.
திங்கள், 22 ஜூன், 2015
வாசிப்புத் திருநாள்
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களை நூல் வாசிக்க வைக்க வேண்டும் எனும் நோக்கில் 23.06.2015
அன்று கல்லூரி நூலகத்தில் வாசிப்புத் திருநாள்
நிகழவிருக்கின்றது.
இதுபோன்ற நிகழ்வுகளை அனைவரும்
வரவேற்க வேண்டும். ஏனெனின் மாணவர்கள் வாசிப்பு என்பது பற்றிய அறிவு இன்றியே கல்லூரியில்
சேர்ந்துவிடுகின்றனர். இதனுள் சிறுமாற்றம் நிகழ்ந்தால் அது இந்நிகழ்வின் வாகையாகும்.
அதனையே எதிர் நோக்குகின்றது இந்நிகழ்வு.
சனி, 16 மே, 2015
இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
இனம் பற்றி,
இந்தியாவில் இருந்து இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும்.
அருமைத் தமிழ்ச் சொந்தங்களே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் www.inamtamil.com தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு தமிழியல், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், கலை, கணினி தொடர்பான தொழில் நுட்பம் போன்ற துறைசார் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும். இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)