திங்கள், 29 மே, 2017

பொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்


      Pressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும் இலவசமாக நூல் வெளியிடுவதற்கு வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

வியாழன், 18 மே, 2017

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்

2017 (August)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.

பேரூர் நூலக நூல் அட்டைகள்

நன்றி  - பேரூர் தமிழ்க் கல்லூரி நிருவாகம்





வியாழன், 27 ஏப்ரல், 2017

முதற்றாய்மொழி: சில புரிதல்கள்

முனைவர் த.சத்தியராஜ்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
முன்னுரை
மனிதன் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்த/அறிவிக்க மொழி எனும் கருவியைக் கண்டுபிடித்தான். அக்கண்டு பிடிப்பே ஆய்வு சார்ந்தது. ஏனெனில் எடுத்த எடுப்பிலே ஒரு மொழி உடனே மொழியுருவாக்கம் பெறுவது கிடையாது.
இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்த அநாகரிக மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அளவான கூட்டுறவு பூண்டு வாழ்ந்து வந்தனர். அவர் வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (vocative sounds), ஒப்பொலிகள் (Imitative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்ச்செய்கையொலி (Gesticulatory sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery sounds), சுட்டொலி (Deictic sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையொகவும் ஆண்டு வந்தனர் (ஞா.தேவநேயப் பாவணர், முதற்றாய்மொழி 2009:5).
இக்கருத்தின் அடிப்படையை நோக்கினால் மொழி உருவான முறையை உணர்ந்து கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு மொழிதான் பின்பு எழுத்துருவாக்கம், சொல்லுருவாக்கம், தொடர் உருவாக்கம் எனப் பலநிலைக் கடந்து செவ்வியல் மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அது ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கலாம். ஒரு குழுந்தைப் பிறந்ததிலிருந்து ஓராண்டுகளுக்குப் பிறகே சில சொற்களைக் கூற தலைப்படுகிறது என்பதை உற்று நோக்கினால் மொழி உருவாக்கத்தினை உணரவியலும். அப்படிப் பல உருமாற்றங்களுக்குப் பிறகு உருவான ஞால முதல்மொழி தமிழ் என இன்று ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதற்கு மாறுபட்ட கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை ஞால முதன்மொழி தமிழ்தான் என்பதை இதுவரை ஆய்ந்த கருத்துக்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முயலுகின்றது.