செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

காற்றும் அதன் மருத்துவக் குணமும்


42ஆம் பாடம்
வடக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்கு, வாடை என்றும், வடகாற்று என்றும் பெயர்.
தெற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குத், தென்றல் என்றும், தென்காற்று என்றும் பெயர்.
தென்றற் காற்று, உடம்புக்கு ஆரோக்கியத்தைத் தரும்; அது சித்திரை, வைகாசி மாதங்களில் வீசும்.
கிழக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கொண்டல் என்றும், கீழ்காற்று என்றும் பெயர்.
மேற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கோடை என்றும், கச்சான் என்றும், மேல் காற்று என்றும் பெயர்.
-       பாலபாடம், 2003:35 – 36

திசைகள்


41ஆம் பாடம்
திக்கு நான்கு, அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு.
சூரியன் உதிக்கின்ற திக்குக்குப் பெயர் கிழக்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு வலப் பக்கமாகிய திக்குக்குப் பெயர் தெற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு பிற்பக்கமாகிய திக்குக்குப் பெயர் மேற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு இடப்பக்கமாகிய திக்குக்குப் பெயர் வடக்கு.
தெற்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் தென்கிழக்கு.
தெற்கும் மேற்குமகிய மூலைக்குப் பெயர் தென்மேற்கு.
வடக்கும் மேற்குமாகிய மூலைக்குப் பெயர் வடமேற்கு.
வடக்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் வடகிழக்கு.
-       பாலபாடம், 2003:35

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தூய்மை

                                            35ஆம் பாடம்

நித்தமும் வேட்டியை நன்றாகத் தோய்த்து அலப்பிப் பிழிந்து, உலரப் போடு.
உடம்பில் அழுக்கைத் தேய்த்து ஸ்நானம் பண்ணு.
நெடுநேரம் சலத்திலே நில்லாதே.
உடம்பு வெயர்க்கும் பொழுது ஸ்நானம் பண்ணாதே.
ஸ்நானம் பண்ணின உடனே, சூடு பிறக்கும்படி, ஈரத்தைக்(த்) துவட்டிப் போடு.
தோய்த்து உலர்ந்த சுத்த வஸ்திரம் தரித்துக் கொள்.
அழுக்கு வேட்டியாவது, ஈரவேட்டியாவது, தரியாதே.
சனிக்கிழமை தோறும், எண்ணெய் தேய்த்துக் கொண்டு தலை முழுகு.
எப்பொழுதும் உடம்பும், வஸ்திரமும் சுத்தமாய் இருந்தால், வியாதி உண்டாகாது.         - பால பாடம், 2003:32, 1959:23-24, 1950:23-24

ஸ்நானம் - குளியல்
வஸ்திரம் - ஆடை, துணி

இது செய் இது செய்யாதே

                                             34ஆம் பாடம்
பகலிலும் விடியற் காலத்திலும் நித்திரை பண்ணாதே.
இரவில், ஒன்பது மணிக்குப் பின்பே, நித்திரை பண்ணு.
நித்தமும், விடியுமுன், நித்திரை விட்டு எழுந்துவிடு.
நித்திரை விட்டு எழுந்த உடனே, கடவுளைத் தோத்திரம் பண்ணு.
பல் விளக்கி, நாக்கு வழித்து, வாய் கொப்பளித்து, முகம் கை கால், கழுவி, ஈரந் துவட்டு.
நின்றுகொண்டாவது, நடந்துகொண்டாவது, பல் விளக்கலா காது.
புத்தகத்தை எடுத்துப் புதுப் பாடத்தையும், பழம் பாடங்களையும் படி.
                                    - பாலபாடம் 1950:22-23, 1959:22-23, 2003:32
                                                                                                               

புதன், 21 ஆகஸ்ட், 2013

நாட்கணக்கு முறை

33ஆம் பாடம்

ஒரு காலை தொடங்கி மற்றைக் காலை வரையும் உள்ள காலம் ஒரு நாள்.
ஆங்கிலேயர்கள், ஒரு நாளை, இருபத்து நான்கு மணிநேரமாகப் பிரித்திருக்கிறார்கள்.
இந்தியர்கள், ஒரு நாளை, அறுபது நாழிகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
முப்பது நாழிகை பன்னிரண்டு மணி.
பதினைந்து நாழிகை ஆறு மணி.
ஏழரை நாழிகை மூன்று மணி.
ஐந்து நாழிகை இரண்டு மணி.
இரண்டரை நாழிகை ஒரு மணி.
ஒன்றேகால் நாழிகை அரை மணி.
ஏழு நாடகள் கொண்டது ஒரு வரம்.
ஒரு வாரத்திலே, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்(ம்), வெள்ளி, சனி என்னும் ஏழு நாட்கல் உண்டு.
நாலு வாரம் கொண்டது ஒரு மாதம்.
பன்னிரண்டு மாதம் கொண்டது ஒரு வருஷம்.
                                       - பால பாடம் 1950:22, 1959:22, 2003:31-32