மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
திங்கள், 31 ஜூலை, 2023
கவிச்சோலை
நமது ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, தொல்லியல் மன்றத்தின் சார்பாகக் கவிச்சோலை என்ற பொருண்மை கொண்ட தலைப்பில் சிறப்புரை 31.07.23 அன்று பிற்பகல் 1.20 முதல் 2.00மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிணி த்துறை உதவிப் பேராசிரியர் எம். அருண் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவ மாணவிகள் பயன் பெறும் நிகழ்வாக அமைந்தது.
எண்ணும் எழுத்தும்
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"
நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, பண்பாட்டு மன்றத்தின் சார்பாக, 'எண்ணும் எழுத்தும்'என்ற பொருண்மையிலான சிறப்புரை 31.07.23 அன்று பிற்பகல் 02. 20 முதல் 03.20 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் S.நரேஷ் குமார் அவர்கள் இயக்குநர், அவர்கள் கலந்துகொண்டு நமது வாழ்வியலில் எண்ணிற்கும் எழுத்திற்கும் இடையேயான படிநிலைகள் மற்றும் அவற்றால் பெறும் பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொழிற்துளிர்
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, யுவா மன்றத்தின் சார்பாக, 'தொழிற்துளிர்' என்ற பொருண்மையிலான சிறப்புரை 31.07.23 அன்று முற்பகல் 11. 20 முதல் 12.30 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை, ஆசியன் மேற்கூரைக் கட்டுமானம், நிர்வாக இயக்குநர் (Asian Roofing Products) I. முகமது இஸ்மாயில் அவர்கள் கலந்துகொண்டு இளம் சமூகத்திற்கான தொழில் முனைவோரின் படிநிலைகள், அதற்கான உந்து சக்தி, செயலாக்கத்திறனையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
வெள்ளி, 28 ஜூலை, 2023
முக ஓவியப் போட்டி
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, யுவா மன்றத்தின் சார்பாக, உலக இயற்கைப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இயற்கையும் மனிதனும் என்ற பொருண்மையிலான முக ஓவியப் போட்டி 28.07.2023 அன்று முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் சிறப்பு மதிப்பீட்டாளராக பேராசிரியர் பிரியதர்ஷினி ( வணிகத் தொழிநுட்பவியல் துறை) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் தனித்திறனை மதிப்பீடு செய்தார்.
வியாழன், 27 ஜூலை, 2023
விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் (Account create in Wikisource)
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் (Account create in Wikisource) எனும் பொருண்மையிலான பயிற்சி 27.07.2023 அன்று பிற்பகல் 2.10 முதல் 3.20 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராக முனைவர் ம.மைதிலி (தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர்) அவர்கள் கலந்துகொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் குறித்துப் பயிற்சியளித்தார்கள். இந்நிகழ்வில் 66-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)