செவ்வாய், 25 ஜூலை, 2023

விக்கித்திட்டங்கள் அறிமுகம் (Introduction to Wiki Projects)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக விக்கித்திட்டங்கள் அறிமுகம் (Introduction to Wiki Projects) எனும் பொருண்மையிலான பயிற்சி 25.07.2023 அன்று பிற்பகல் 2.10 முதல் 3.10 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்களும் கணினி அறிவியல்துறைத் தலைவர் முனைவர் கே.சித்ரா அவர்களும் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராகத் திருமதி வா.காருண்யா (தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர்) அவர்கள் கலந்து கொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் குறித்துப் பயிற்சியளித்தார்கள். இந்நிகழ்வில் 64 - ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்கள்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

தமிழ்விடு தூது - மதுரைச் சொக்கநாதர்

தமிழ்விடு தூது - (முதல் 25 கண்ணிகள்) 
மதுரைச்சொக்கநாதர் 
கலிவெண்பா

1. சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந் 
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 

2. டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் 
திக்கு விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 

3. செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு 
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 

சனி, 4 பிப்ரவரி, 2023

கடித இலக்கியம் 1

கோயமுத்தூர், 20.07.2016
அன்புக் குழந்தைகளுக்கு,

நீங்கள் வாழும் உலகம் அற்புதமானது. அன்பாய் வாழுங்கள் என்று ஆசிரியன் சொல்வான். அவன் வாழ மாட்டான். ஆய்விற்கு முதன்மை கொடுப்பவன். ஆய்வினால் புத்துலகைப் படைக்க முடியும் எண்ணம் அவனுள். தொல்காப்பியன், சாக்ரடீசு, ஐன்சுடீன், நெப்பொலியன், அலெக்சாண்டர், அம்பேத்கார், அப்துல்கலாம், காமராசர், நல்லக்கண்ணு, கக்கன் எனப் பலபேர் தன்னுள் குடிகொண்டுள்ளனர் என்ற மிதமிதப்பு. சொல்வது உண்மை. செயலில் பொய்மை. அப்படி வாழ நினைக்காதீர் என் அன்புக் குழந்தைகளே...