ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

சிற்பி - ஓடு ஓடு சங்கிலி

 

  1. அழித்து எழுத முடியாத ஓவியம்

  2. ஆண்களின் பார்வை

  3. அம்மாவின் அர்ப்பணிப்பு

  4. பேரன் திருமணம், கொள்ளுப்பேத்தி வரவு

  5. அம்மா-வர்ணனை

  6. நேசிப்பு

  7. ஊர்ப்புறச் சமையல் சிறப்பு

  8. மரியாதை

  9. தன்னம்பிக்கை வார்த்தை

பாரதிதாசன் - தமிழின் இனிமை

 

  1. நாவின் சுவை

    • பலா

    • கரும்பு

    • பால்

    • பாகு

    • இளநீர்

    • தேன்

பாரதியார் - எங்கள் தாய்

 

  1. தேசப்பற்று

  2. இந்தியாவின் எல்கை

  3. இந்தியாவின் வயது

  4. இந்திய மக்கள் தொகை

  5. நல்லறம்

  6. இளமை

செவ்வாய், 12 ஜூலை, 2022

களப்பணி - ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வென்னல்கிரி வெங்கட்ரமணப் பெருமாள் திருக்கோயில், கோவை

 முன்னுரை

கல்வெட்டியல் என்பது தொல்லியலில் ஒரு பிரிவு என்பதாக புரிந்து கொள்ளலாம். கல்லில் வெட்டி வைக்கப்பட்டுள்ள களங்களை அறிவது கல்வெட்டியல் எனும் துறையின் படிப்பாகும். இத்துறையை முழுவதும் அறிந்திட அத்துறையில் தொடர்ந்து பயணம் தேவை. அதுமட்டுமின்றித் தொடர் பயிற்சியும் மிகத் தேவை. அப்பொழுதுதான் கல்லெழுத்துக்களை, அவை விளம்பும் தகவல்களை முழுமையும் அறிந்துகொள்ள இயலும். இத்துறை சார்ந்த புரிதல்களை இவ்வறிக்கை முன்வைக்க முயல்கின்றது.