வெள்ளி, 8 ஜூலை, 2022

மென் காற்று

மென்மைக் காற்று மென்தழைத் தடவ
மெல்லுடல் வணங்க மென்காற்று மெல்லிசை
நயம்பாட நந்தவனம் ஆட
நல்லாள் நாணமும் அறைக்குள் ஆர்க்குமே!

கனா

சன்னலைத் திறக்க
சட்டென்று உள்ளே வந்தாய்
புலுக்கமாய் இருந்த உடலுக்கு
பூப்போல் தடவிக் கொடுத்தாய்
காற்றே கட்டாந்தரையையும்
கவிப் பாட வைத்தாயே!
கவிச்சோலைக்குள் கனாக்காண வைத்தாயே!

கல்வெட்டில் கோவை மாவட்ட ஊர்ப் பெயர்கள் அன்றும் - இன்றும்