மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 18 ஜனவரி, 2022
தொல்காப்பியச் செல்வம் - முன்னுரை
சனி, 8 ஜனவரி, 2022
இந்திய மருத்துவச் சட்டம் - மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் - அட்டவணை செ ("Drugs and cosmetic Act, 1940, 1945, 1995, 'Schedule J')
'மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்' சட்டம் 1940இல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995இல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது ("Drugs and cosmetic Act, 1940, 1945, 1995, 'Schedule J' contains a list of 51 diseases and ailments (by whatever name described) which a drugh not purport to prevent or cure or make claims to prevent or cure"). அப்பட்டியலில் இடம்பெறும் நோய்களின் விபரம் வருமாறு:-
வியாழன், 6 ஜனவரி, 2022
கலைச்சொல் விளக்கம் 1
திங்கள், 3 ஜனவரி, 2022
நானும் அண்ணனும் (முதுபெரும்புலவர் கொளுந்துறை இராமதாசர் சுவாமிகள்)
- சிவஞானதாசர்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துறை எனும் ஊரில் பழனியாண்டி பெருமாத்தாள் ஆகிய இருவருக்கும் 07.11.1916 ஆம் ஆண்டு பிறந்தவரே இராமதாசர். சிறுவயது முதல் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய எனது அண்ணன் இராமதாசர் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு மலேசியாவிற்கு சென்று தமிழ்ப் பணியாற்றியுள்ளார். மலேசியா மண்ணில் கல்வியறிவின்றி செப்பமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழர்களைக் கண்டு மதிப்புமிகுந்த நாகரிக வாழ்க்கைக்கு வழி காட்டியாக விளங்கியுள்ளார். செந்தமிழ்ப் பாடசாலைகளை நிறுவி கல்லாமை என்னும் இருளைப் போக்கியுள்ளார். தான் கற்ற கல்வி வாயிலாக வாழ்நாள் முழுவதும் சேவை மனப்பான்மையுடன் சிறந்துள்ளார். சமயப் பாகுபாடு பாராது மலேசிய மக்களுக்கு கோவில், மசூதி, கிறித்துவ ஆலயங்களையும் கட்டிக்கொடுத்துள்ளார். அவரிடம் பயின்ற மாணவர்கள் சிறந்த கவிஞர்களாகவும், சிறந்த ஆளுமைகளாகவும் விளங்கியுள்ளனர். எனது அண்ணன் இராமதாசர் வாழ்க்கை முழுவதும் தமிழுக்காகவும், தமிழருக்காவும் சேவையாற்றிய 28.4.1991 ஆம் ஆண்டு அதிகாலை 2 மணியளவில் இம்மண்ணைவிட்டுச் சென்றார். பிறந்த ஊரான கொழுந்துறையில் அவரது உடல் அடக்கச் செய்யப்பட்டுள்ளது.