ஞாயிறு, 23 மே, 2021

இடுகையிடும் உள்ளடக்கத்திற்கான உடேமியின் உரிமைகள்

 

உங்கள் படிப்புகள் உட்பட உடேமி தளத்தில் இடுகையிடும் உள்ளடக்கத்தின் உரிமையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். பிற வலைத்தளங்களில் விளம்பரம் மூலம் விளம்பரப்படுத்துவது உட்பட எந்தவொரு ஊடகத்தின் மூலமும் உங்கள் உள்ளடக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சனி, 22 மே, 2021

மனித மதிப்புகள் (HUMAN VALUES)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்  சார்பாக * மனித மதிப்புகள் (HUMAN VALUES)* எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 22.5.2021 முதல் 24.5.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது.
*  *மின்சான்றிதழ் உண்டு*
*  *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்*
* *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது👇🏿*

https://forms.gle/WqZio9sUgs6NtaKr8

ஞாயிறு, 16 மே, 2021

உடேமியின் தொகை செலுத்துதல், வரவு வைத்தல், திருப்பிச் செலுத்துதல் நெறிகள்

நீங்கள் பணம் செலுத்தும் போது, ​​சரியான கட்டண முறையைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் உள்ளடக்கத்தில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், பெரும்பாலான உள்ளடக்க வாங்குதல்களுக்கு 30 நாள் பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது கடன் வழங்குதல் எனும் முறைமையை உடேமி பின்பற்றுகிறது.

சனி, 15 மே, 2021

நேர மேலாண்மை (Time Management)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்  சார்பாக * நேர மேலாண்மை (TIME MANAGEMENT)* எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 15.5.2021 முதல் 18.5.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது.

*  *மின்சான்றிதழ் உண்டு*
*  *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்*
* *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது👇🏿*

https://forms.gle/UBDFkCywVAoEWp1s9

வியாழன், 13 மே, 2021

மலர் 7 இதழ் 27 கட்டுரை வரவேற்றல்


இனம் ஏழாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது
................................
இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (ISSN:2455-0531)

ஆகஸ்ட் 2021 மலர் :7 இதழ் : 26 
Auguest  2021  | Volume VII Issue 27
பதிப்பிற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 
இறுதி நாள் : 20 சூன் 2021

அடிப்படைக் கட்டமைப்புநெறிகள்
....................

தமிழில் /ஆங்கிலத்தில் கட்டுரைத் தலைப்பு
 
தமிழ் / ஆங்கிலம் பெயர்

ஆங்கிலம் / தமிழ் - ஆய்வுச் சுருக்கம்

திறவுச் சொற்கள்

Citation: கென்னடி ஜீ., (May 2021), “டோனி மொரிசனின் நாவல்களில் தலைமுறையினருக்கு இடையேயான முரண்பாடு (Generational Conflict in Toni Morrison’s Novels)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.7, Issue 27, pp.. (என அமைதல் வேண்டும்)

இதன் பின்பு கட்டுரை தொடங்கலாம்....

மதிப்பீட்டு முறையும் வெளியீடும்
..............................
இதுதான் முதல் மதிப்பீடாக இருக்கும்

அடுத்த மதிப்பீடு புதியவற்றை முன்வைக்கிறதா என்பது

இறுதி மதிப்பீடு துறைசார் வல்லுநரிடம்

பின்பு கட்டுரை மெய்ப்பாக்கம்

இறுதியில் இணையத்தில் வெளிவரும்.