சனி, 25 ஏப்ரல், 2020

5 days E-Career Guidance Programme

Due to the unprecedented turbulence of COVID 19, Sri Krishna Adithya CAS has taken an initiative to conduct *5 days E-Career Guidance Programme* for the Class 12 students and their parents to help them choose their right career goal in the academic stream of Arts & Science, planning and giving a direction for the best of the opportunities ahead with the leading experts in the field along with the well experienced admin team of the college .
Kindly share this e -brochure with link to all your friends and relatives who are in need and help them to choose their right career.

http://www.skacas.ac.in/career_guidance-2020/

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

விழித்திரு... தனித்திரு....

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தேன்தமிழ் மன்றத்தின் சார்பாக, 17/4/2020 அன்று   காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை "விழித்திரு... தனித்திரு... (Covid 19)" எனும் பொருண்மையிலான கொரானா விழிப்புணர்வு உரையாடல் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் மருத்துவர் கு.சுப்பிரமணியன் (தலைவர், கம்பன் கலைக்கூடம், கோயமுத்தூர்) அவர்கள் சூம்வழி (Webinar) உரையாடலில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாகக் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் அரத்தக் கொடை முகாம்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கமும் IMA Masonic Rotary Midtown Mahaveers Blood Bank சேவையகமும்  கோவை மாவட்ட இந்தியச் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து 21.02.2020 அன்று அரத்தக்கொடை முகாமை (Blood Donation) நடத்தின. கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள்  தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்வில் 62 மாணவர்கள் அரத்தக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வினை இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர் முனைவர் த.சத்தியராஜ் அவர்களும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் தலைவர் தீபக்குமார் ( கணிதத் துறை) அவர்களும் ஒருங்கிணைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.