ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக "சிகரங்களைச் செதுக்குவோம்"
எனும் தலைப்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கைப் பேச்சாளர்,
பேராசிரியை முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் இன்றைய தலைமுறை மாணவர்களின் கவனச்சிதைவு மற்றும் அவற்றின் காரணிகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீண்டு எவ்வாறு வாழ்வில் உயரலாம் எனவும்,
மாணவர்கள் தங்களைத் தாங்களே செதுக்கிக் கொண்டு, தங்களுடைய வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலானவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிகரங்களைப்போல் செதுக்கிக் கொண்டு சமுதாயத்தில் மிகப்பெரிய நிலையை அடைந்தனர் என்பது பற்றியும் அருமையாகப் பேசி மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சிகரங்களைச்செதுக்க ஊக்கப்படுத்தினார்.
செய்தியாக்கம்: பேரா.ப.இராஜேஷ்