
முனைவர் துரை. மணிகண்டன் (1973) ... தமிழ் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிற ஒரு துடிப்புள்ள தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் உலகில் வலைப்பூக்கள் மலர்ந்து மணம் தரவேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கில் இடைவிடாது தனது பயிலரங்கப் பயணத்தை மேற்கொண்டுவருபவர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழில் இளங்கலை, முதுகலை , ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தேசியக் கல்லூரியில் ( பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 'இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ' என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். கணினிப்பிரிவிலும் சான்றிதழ் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பேராசியராகத் திருவரங்கத்தில் ( ஸ்ரீரங்கம்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் தமிழ் இணையம், வலைப்பூக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உடைய எவருக்கும் இவரைத் தெரியாமல் இருக்கமுடியாது.