விகிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு அழகிய அஞ்சல் அட்டைகளை வெல்லுங்கள்! கூடுதல் கட்டுரைகளை உருவாக்கி “விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்” என்ற சிறப்பினைப் பெறுங்கள்!
ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம்(Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2015 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.
ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் “விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்” என சிறப்பிக்கப்படுவார்கள்.