ஒரு மொழி பன்னெடுங்காலமாகப் பலரால் பேசப்படும் நிலையில் வட்டாரம், சமூகம் சார்ந்து மொழிக்குள் வேறுபாடுகள் சில அமைவதுண்டு. ஒரு மொழியில் ஏற்படும் இத்தகைய வழக்கு வேறுபாடுகள் கிளைமொழிகள் எனப்படுகின்றன. வட்டாரம், சமூகம், இனம், பால், வயது முதலியவற்றின் அடிப்படையில் ஒரு மொழியில் கிளைமொழிகள் அமைவதை மொழியியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். தமிழ்ச்சூழலில் வட்டாரம், சமூகம் சார்ந்த கிளைமொழிகள் தெளிவாக அமைந்துள்ளன. அதாவது, சென்னையில் பேசப்படும் தமிழுக்கும் நாஞ்சில் நாட்டில் பேசப்படும் தமிழுக்கும் காவிரி டெல்டா பகுதியில் பேசப்படும் தமிழுக்கும் கொங்கு தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கிளைமொழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 27 பிப்ரவரி, 2018
குறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு
செவ்விலக்கிய நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகைக்குப் பல பதிப்புக்களும் உரைகளும் வெளிவந்துள்ளன. அதேபோல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருப்பத்தோராம் நூற்றாண்டு வரையிலும் அந்நூல் குறித்துக் கட்டுரைகளும், நூல்களும் பல எழுதப்பட்டுள்ளன. நூல்களின் அமைப்பு நிலைகளுக்கேற்ப அவற்றினை அறிமுக நூல்களாகவும், விளக்கவியல் நூல்களாகவும், இரசனைசார் நூல்களாகவும், திறனாய்வு நூல்களாகவும் வகைப்படுத்தலாம். அவ்வகையில் ஆ.மணி என்பவர் ‘குறுந்தொகைத் திறனுரைகள்’ எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அது எவ்வகை நூல் என்பதனை அறிமுகப்படுத்தி, மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும்
தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தமிழ்நூல், தென்னூல் ஆகிய இலக்கண நூல்கள் எல்லாம் தத்தமது இலக்கணக் கோட்பாடுகளைக் காலமாற்றம், வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் கட்டமைத்துச் செல்வதோடு, தொல்காப்பியத்தையோ, நன்னூலையோ பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளன. மார்த்தாண்டம், நந்தன்காடு என்ற பகுதியிலுள்ள மீ.காசுமான் என்பவர் எழுதிய தற்கால இலக்கண நூலான தமிழ்க் காப்பு இயத்தின் வினைக் கோட்பாட்டு உருவாக்கத்தினையும் கட்டமைப்பினையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
சசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்
ஆய்வு அறிமுகம்
மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ் அணுகுமுறையின் முன்னோடியாக சுவிட்ஸ்சர்லாந்து மொழியியலாளர் சசூர் (Ferdinand.De.Saussure) விளங்குகின்றார். இவரே மொழிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியவராவார்.
அமைப்பியல்வாத சிந்தனையாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரோலன் பாத் (Roland Barthes), லூயிஸ் அல்தூசர் (Louis Althusser), பூக்கோ (Faucault), லகான் (Lacan), லெவிஸ்ட்ராஸ் Levi strauss போன்றோர் சசூரின் மொழிக் கட்டமைப்புக்கள் கருத்துருவ மாதிரிகளைக் கொண்டு மொழியின் மேலோட்டமான நிகழ்வுகளை (Parole), அதற்கு அடிப்படையாகவுள்ள முறைமையினை(Langue) குறியீடுகளைக் கொண்டு ஆராய்கின்ற விஞ்ஞானத்தை (Semiology) முழு வளர்ச்சியடையச் செய்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)