வியாழன், 13 டிசம்பர், 2018

மதிப்பிற்குரிய ஆசிரியரைப் போற்றுகின்ற ஒரு மாண்புமிகு மாணவனின் கவிதை

நான் அறிவைப் பெற்றேன்
உன்னை ஆசானாய்ப் பெற்றதால் உங்கள் உரையாடல்
இந்த உலகத்தின் உண்மையை உணர்த்தின
உங்கள் கேள்விகள்
எங்கள் உள்ளத்தைப் பாதித்தன என்ன தவம் பெற்றேன்
என அறிய இயலேன்
என்னால் முடிந்தவரை
இதனைப் பிறர்க்கு
எடுத்துரைக்க முயல்வேன்

- மாணவன் விக்னேஷ் பிரபு
பி.காம்.சி.ஏ., இ பிரிவு
முதலாம் ஆண்டு
வணிகவியல் துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்

சனி, 27 அக்டோபர், 2018

பாலபோதினி 3


அஃறிணைப்பால்.-ஒன்றன்பால், பலவின்பாலென விரண்டும் அஃறிணைக்குரியவைகளாம். அஃறிணையில் ஆண் பெண் என்ற பகுப்பில்லை. ஆணாயிருந்தாலும் அல்லாததாயிருந்தாலும் ஒன்றைக் குறித்தால் ஒன்றன் பாலென்றும், மேற்பட்டவற்றைக் குறித்தாற் பலவின் பாலென்றுஞ் சொல்லப்படும்.
- ம். அது வந்தது - ஒன்றன்பால். 
அவை வந்தன - பலவின்பால்.

ஒருமை - பன்மை; எந்தத் திணையிலும் ஒருபொருளைக் குறிப்பது ஒருமையென்றும், மேற்பட்ட பொருளைக் குறிப்பது பன்மையென்றும் சொல்லப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பாலிம் மூன்றும் ஒருமை. பலர்பால், பலவின்பால் இவ்விரண்டும் பன்மை.

இடம். -இடமாவது, சொற்கள் நிகழ்கின்ற ஸ்தானம். அது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும்.
சொல்லுபவன் தன்மையிடம்.
-ம். நான் வந்தேன்.
கேட்பவன் அதாவது முன்னிற்பவன் முன்னிலையிடம்.
- ம். நீ வந்தாய்.
பேசப்படும் பொருள் அதாவது யாரை, அல்லது எதைப்பற்றிப் பேசப்படுகிறதோ அப்பொருள் படர்க்கையிடம்.
- ம். அவன் வந்தான்; மரம் வளர்ந்த்து.

சொற்கள்.- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனத் தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும்.

வியாழன், 25 அக்டோபர், 2018

பாலபோதினி 2

பாலபோதினி.

முதலாவது
சொல்லதிகாரம்.

சொல்.-சொல்லாவது, இருதிணையிலும், ஐந்துபாலிலும் உள்ள பொருள்களை மூன்றிடங்களிலும் நின்று விளக்குவதாம்.

திணை.-திணையென்றால் ஜாதி. அது உயர்திணை, அஃறிணையென இருவகைப்படும். உயர்திணை உயர்வாகிய ஜாதி. அஃறிணை = அல்+திணை, =அல்லாத ஜாதி. அதாவது தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவை.

உயர்திணை.-மக்கள், தேவர், நரகர் உயர்திணையாம். மக்கள் = மனிதர்கள்.

அஃறிணை.-அம்மக்கள் தேவர் நரகரையல்லாதவை உயிருள்ளவையா யிருந்தாலு மில்லாதவையா யிருந்தாலு மஃறிணையாம்.

பால்.-பாலென்பது, மேற்சொல்லிய உயர்திணை அஃறிணைப் பொருள்களின் பகுப்பு. அது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும்.

உயர்திணைப்பால்.-ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்குரியவைகளாம்.
  உ - ம்.   அவன் வந்தான் - ஆண்பால்.
        அவள் வந்தாள்  - பெண்பால்.
        அவர் வந்தார்     - பலர்பால்.
ஒரு ஆணைக் குறித்தால் அது ஆண்பாலென்றும், ஒரு பெண்ணைக் குறித்தால் அது பெண்பாலென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையல்லது பெண்ணைக்குறித்தால் அது பலர்பாலென்றுஞ் சொல்லப்படும்.

பாலபோதினி 1

பாலபோதினி.


கோயமுத்தூர், தமிழ்ப்பண்டிதர்
. தி ரு ச் சி ற் ம் ம் பி ள் ளை
அவர்களால் இயற்றப்பட்டு,


.சுப்பிரமணியமுதலியாரால்,


சென்னை :
வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
 


1900.
(All Rights Reserved)