தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தமிழ்நூல், தென்னூல் ஆகிய இலக்கண நூல்கள் எல்லாம் தத்தமது இலக்கணக் கோட்பாடுகளைக் காலமாற்றம், வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் கட்டமைத்துச் செல்வதோடு, தொல்காப்பியத்தையோ, நன்னூலையோ பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளன. மார்த்தாண்டம், நந்தன்காடு என்ற பகுதியிலுள்ள மீ.காசுமான் என்பவர் எழுதிய தற்கால இலக்கண நூலான தமிழ்க் காப்பு இயத்தின் வினைக் கோட்பாட்டு உருவாக்கத்தினையும் கட்டமைப்பினையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 27 பிப்ரவரி, 2018
மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
சசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்
ஆய்வு அறிமுகம்
மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ் அணுகுமுறையின் முன்னோடியாக சுவிட்ஸ்சர்லாந்து மொழியியலாளர் சசூர் (Ferdinand.De.Saussure) விளங்குகின்றார். இவரே மொழிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியவராவார்.
அமைப்பியல்வாத சிந்தனையாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரோலன் பாத் (Roland Barthes), லூயிஸ் அல்தூசர் (Louis Althusser), பூக்கோ (Faucault), லகான் (Lacan), லெவிஸ்ட்ராஸ் Levi strauss போன்றோர் சசூரின் மொழிக் கட்டமைப்புக்கள் கருத்துருவ மாதிரிகளைக் கொண்டு மொழியின் மேலோட்டமான நிகழ்வுகளை (Parole), அதற்கு அடிப்படையாகவுள்ள முறைமையினை(Langue) குறியீடுகளைக் கொண்டு ஆராய்கின்ற விஞ்ஞானத்தை (Semiology) முழு வளர்ச்சியடையச் செய்தனர்.
பதிற்றுப்பத்தில் உழவும் உழவரும்
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு இணங்க உழவைப் போற்றி வளர்த்த நாடு தமிழ்நாடு. சங்கநூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றியது என்றாலும் வீரம் சார்ந்தது என்றாலும் உழவு சார்ந்த வேளாண்மைக் கருத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தில் நான்கில் ஒரு பங்கு உழவைப் பற்றி மட்டுமே கூறுகிறது. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள உழவு குறித்தும், உழவர் குறித்தும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உழத்திப்பாட்டு, பள்ளு, ஏர் பரணி, ஏர் எழுபது (எண் செய்யுள்) திருக்கை வழக்கம், நெல் விடு தூது முதலான உழவை மையமிட்ட சிற்றிலக்கியங்களுக்கான வேர் சங்க இலக்கியத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும்.
அகநானூறு சுட்டும் மருதநிலச் சிறப்பு
சங்க இலக்கிய நூல்களுள் அகச் செய்திகளைக் கூறும் நூல்களில் ஒன்று அகநானூறு. மருதத்திணையின் உரிப்பொருளாக ஊடலைச் சுட்டுகின்றார் தொல்காப்பியர். மருதம், வயலும் வயல் சார்ந்த பகுதி என்று குறிப்பிடப்படுகின்றது. அவ்வகையில், அகநானூறு – மருதத்திணைப் பாடல்கள் சுட்டும் வயல்வெளிக் காட்சிகளை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வயலின் சிறப்புகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் வயல் பகுதி உணவளிக்கும் அமுதசுரபியாகும். மாதம் மும்மாரி மழைபொழிந்து, முப்போகம் நெல்விளைந்து ஏழை எளியோரின் வயிற்றினை நிரப்பும் வயல் பகுதியானது கொடைத்தன்மை பெற்றதாகும்.
வயல் என்பதற்கு “கழனி, மருதநிலம், வெளி” என்று கழகத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)