செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

நாட்டுப்புறப் பாடல்களின் வளர்ச்சிப் படிநிலைகள்

தகவலைப் பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்துச் செல்லப் பயன்படும் கருவியே ஊடகமாகும்.  ‘ஊடகம்’ என்ற சொல்லும், ஊடகங்களும் தோன்றும் முன்னே தகவல் பரிமாற்றப் பணியினை நாட்டுப்புறக் கலைகள் செய்துவந்தன என்றால் அது மிகையாகாது.
சமிக்ஞைகளும் சப்தங்களும் மெருகூட்டப்பட்டு, செம்மையாக்கப்பட்டு, நாட்டுப்புறப் பாடலாகவும், கதைகூறல்களாகவும், கதைப்பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன.  இதன்வழி தன் எண்ணங்களையும், நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.  பிற்காலத்தில் இதனை நாட்டுப்புற ஊடகங்கள் என்றும் அழைத்து வந்தனர்.  இவையே நவீன ஒலி, ஒளி ஊடகங்களின் தோற்றுவாய் எனலாம்.
இவ்வாறாக ஊடகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த நாட்டுப்புறக் கலைவடிவில் ஒன்றாகிய நாட்டுப்புறப்பாடல்கள் ஊடகங்களில் பங்கு பெறும் விதம் பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன் தலைவியின் உளநிலை

ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார். இவர் ஆதன்அவினி என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து, மருதத்தில் அமைந்த நூறு பாட்டுக்களைப் பத்துப்பத்தாகப் பகுத்துப் பாடியுள்ளார். அவை, ‘வேட்கைப்பத்து’ முதலாக எருமைப்பத்து ஈறாக அமைகின்றன. இத்தகு பாடல்களில் வெளிப்படும் தலைவன் – தலைவியின் உளநிலையை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
தன் தவற்றை உணர்ந்த தலைவன்
தலைவன் பரத்தையோடு நெடுநாள் பழகி வந்தான். அதை அறிந்த தலைவி மனம்வருந்தி உடல் மெலிந்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்த தலைவன் மீண்டும் தன் தலைவியோடு வாழவேண்டுமென வந்து சேர்ந்தான். பின் தோழியிடம் நான் பரத்தையோடு வாழ்ந்த காலங்களில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் என்றான். அதை அறிந்த தோழி காஞ்சிப் பூவோடு சினையுடைய மீன் எப்படி இருக்கும் அதுபோல் உயர்ந்த குடியில் பிறந்த தலைவி உன்னைத் தாழ்வாகக் கருதினாள் என்றாள், https://www.inamtamil.com/ai%E1%B9%85ku%E1%B9%9Funu%E1%B9%9Fu-marutatti%E1%B9%87aip-pa%E1%B9%ADalka%E1%B8%B7-ve%E1%B8%B7ippa%E1%B9%ADuttum-talaiva%E1%B9%89-talaiviyi%E1%B9%89-u%E1%B8%B7anilai/

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும் (நூலறிமுகம்)

நூல் : ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்ஆசிரியர் : மதுரை பாலன்பதிப்பு : ஓவியா பதிப்பகம், திண்டுக்கல், பதிப்பாண்டு : 2015(முதற்பதிப்பு), விலை : உரூபாய்120/-
மதுரை பாலன் – அறிமுகம்
இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் நேசனேரி கிராமத்தில் 10.06.1954 இல் இருளப்பன், தீத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறைப் படைப்பாளராக அறிமுகமானார். முப்பத்தைந்து ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நிகழ்த்தி வருகிறார். இவரின் ‘முருக விஜயம்’ இன்றளவும் நாடக உலகினரால் கொண்டாடப்படும் நாடகமாகத் திகழ்கின்றது. மேலும், வழக்காடு மன்றம், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் சின்னத்திரையிலும் தனது தடத்தினை நீட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார்.

ஆய்வாளர் அணுக வேண்டிய கருவி நூல்கள்

காலந்தோறும் பல்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றி இலக்கியங்களை ஆய்வு செய்யும் வேளையில், அடுத்த தலைமுறை ஆய்வாளர்க்கும் மாணாக்கர்க்கும் ஆய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, காணவேண்டிய நுட்பங்களைக் குறித்து அறிவுறுத்திச் செல்ல வேண்டியதும் தேவையான ஒன்றாகின்றது. அவ்வகையில், பழந்தமிழிலக்கிய ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை முன்வைப்பதாக இவ்வுரை அமைகின்றது.
(இக்கட்டுரையைப் படங்களுடன் வாசிக்க கையாவண நூல் (PDF) பார்க்கவும்)

நுண்கடன் திட்டங்களினால் ஏற்படும் விளைவுகள்

அறிமுகம்
பண்டமாற்றுப் பொருளாதார முறைமைக்குள் முடங்கிக் கிடந்த பொருளாதாரச் செயற்பாடுகள், பணப்பரிவர்த்தனை பொருளாதார உருவாக்கத்தின் பின்னர் ஒரு புதிய உத்வேகத்தில் வீறுநடை போடத் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகமுமே பலவகையான சமூகப் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முன்னேற்றகரமானதாகவோ அல்லது பின்னடைவானதாகவோ காணப்படுகின்றன. அந்த வகையில் சமூகத்தினது முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற மாற்றங்கள் சிலவேளைகளில் பல தாக்க விளைவுகளினை ஏற்படுத்தக்கூடும்.