மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
வெள்ளி, 14 மார்ச், 2014
சனி, 1 மார்ச், 2014
கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள்
அன்பின்
ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும்
என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு
பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து
விளக்கியுள்ளார்.
ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில்
குறிப்பிடுகிறார்.
சனி, 22 பிப்ரவரி, 2014
மதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு
மு. அய்யனார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் உயராய்வு நடுவம்
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சி -24
தமிழில் அகமரபு இலக்கியத்திற்கென்றே தனித்ததொரு மரபினைக் கொண்ட குறுந்தொகைப்
பாடல்களையும் பழம் மொழிகளில் ஒன்றான பாலிமொழி இலக்கியமான பிராகிருதத்தில் இருந்து
உருவாக்கப்பட்ட காதா சப்த சதியையும் ஒப்பிட்டுச் சிலகூறுகளைக் கட்டுரையாளார்
முன்வைத்திருப்பது தமிழாய்வின் தேவைகளுக்குப் பயனளிக்கும்
முயற்சியே ஆகும். அ. செல்வராசுவின் காலம் சுட்டிக்காட்டலில் நிலவும் மயக்கநிலையைச்
சுட்டிக்காட்டும் ஆய்வாளார், சங்கச் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையையும் காதா
சப்த சதியையும் ஒரே காலத்தன என்னும் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார்.
குறுந்தொகை தமிழில் இயற்றப்பட்ட அகநூல்களில் பெரும்பெயர்
கொண்ட இலக்கியமாக விளங்குவது
காதா சப்த சதி பாலி மொழியில் விளங்கிவந்த ஒரு பழம்பெரும்
இலக்கியமாகும். கட்டுரையாளார் இரண்டிற்குமான சிறப்புகளை விளக்கும் பொழுது சில ஒற்றுமை
வேற்றுமைகளை முன்வைக்கிறார். இவற்றைக் காலக் கணிப்புச்செய்கையில் சிலவற்றைக் கவனத்தில்
கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு,
புதன், 29 ஜனவரி, 2014
கழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு
குபேந்திரன்
இளம் ஆய்வாளர்
அழகப்பா பல்கலைக் கழகம்
காரைக்குடி
முன்னுரை
சங்க
இலக்கியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின்
தொகுப்பாகும். சங்க காலப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர்
கழார்க் கீரன் எயிற்றியார் ஆவார். பெண்பாற் புலவர்களில்
ஒருவரான இவர் வேட்டுவக் குடியினைச் சார்ந்தவர். இவர் 'கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர்
தற்பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள
திருக்களார் என்றும் சோழர் படைத்தலைவராகிய கீரன் இவர்தம் கணவர் என்பதும்
இவரைப் பற்றிய குறிப்புகளாகும். வேட்டுவக்குடியைச் சார்ந்த
இப்புலவரின் பாடல்கள் வழி இவர்தம் தனித்தன்மையைக் காண்பது இக்கட்டுரையின்
நோக்கமாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)