வெள்ளி, 11 அக்டோபர், 2013

உருவம்

மனித உருவிற்கு
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
                                                 - இரா. நித்யா சத்தியராஜ்

வியாழன், 10 அக்டோபர், 2013

தாய்மை

தாயின்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
                                                   - இரா. நித்யா சத்தியராஜ்

தந்தைமொழி

குழந்தையாக இருந்தபோது
தந்தைமொழி கசந்தது
தந்தை என்னருகில் இல்லை
அவரது மொழி என்னருகில்
ஒலிக்கிறது இனிமையாக
நான் தாயான போது
                                         - இரா. நித்யா சத்தியராஜ்

சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு



-       . சத்தியராஜ்

கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும் விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம். பெரும்பான்மையான  இடங்களில், தெலுங்கு சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்

பரத்தை எனும் சொல்லும், காமக்கிழத்தி எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மை. இச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி (Prostitute) என வழங்கப்படுகின்றன. இம்மகளிர்களின் வாழ்க்கைநெறி காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்கு, அத்தாகத்தைத் தீர்த்து மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனை. இதனை ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன; பதிவு செய்தும் வருகின்றன. அச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும்  பதிவு செய்துள்ளன. அதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மேலும் வாசிக்க: http://www.muthukamalam.com/essay/literature/p60.html