Thursday, May 18, 2017

அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்

2017 (August)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.


“கணினித் தமிழ் : செய்தனவும் செய்ய வேண்டுவனவும்” 2017
அறிஞர் பெருமக்களுக்கும் ஆய்வு நண்பர்களுக்கும் வணக்கம்.
இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழானது பல்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டோரின் நல்ஊக்கத்தோடு இரண்டாமாண்டில் நடைபோடுகின்றமை தாங்கள் அறிந்ததே!
மொழிவளர்ச்சியை உள்ளடக்கிய இதழின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்து கணினித் தமிழ் : செய்தனவும் செய்ய வேண்டுவனவும் எனும் பொருண்மையில் ஓர் உரையரங்கம் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம். உரையரங்க எழுத்துரைகளை நூலாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இதழின் பதிப்பாசிரியர் இருவரும், கல்லூரியில் தன்நிதிப் பிரிவில் பணியாற்றி வருகின்றோம். வணிகநோக்கமின்றி இதழை நடத்திவரும் எங்களால், சொந்த நிதியில் உரையரங்கப் பணிகளை மேற்கொள்ள  இயலாத நிலையில் உள்ளோம்.
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் இயன்ற நன்கொடை அளித்து எம் முயற்சிக்கு உரமூட்டுவதுடன், உரையரங்கம் தொடர்பான நல்ஆலோசனைகளையும் வழங்கி உதவுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன