வெள்ளி, 14 மார்ச், 2014

தனியே நட


உன் குரல் கேட்டும்
யாரும் வரவில்லையானாலும்
டே! மடையா!
தனியே நட
உன்னுடன் சேர்ந்து
யாரும் பேசவில்லையானாலும்,
எல்லோரும்
முகம் திருப்பிக் கொண்டாலும்,
பயந்து நடுங்கினாலும்
டே! மடையா!

மனந்திறந்து உண்மை பேசு...
எல்லோரும்
பின்னோக்கி வந்தாலும்
முள்பாதையில் போய்க்கொண்டிருக்கும் உனை,
யாரும்
கண்டுகொள்ளவில்லை என்றாலும்
டே! மடையா!
முள்குத்தி இரத்தம் ஒழுகும் பாதங்களோடே
தனியே நட
உனக்காய் யாரும்
விளக்கேந்தவில்லை என்றாலும்
இடிமின்னல் கூடிய மழையிரவில்,
எல்லோரும் கதவடைத்துக் கொண்டாலும்,
மின்னல் உன் விலா எழும்பை எரித்தாலும்,
டே! மடையா!
தனியே எரி....
    -இரவீந்த்ரநாத் தாகூர்
மொழிபெயர்ப்பு: ஆ. ஈல்வரன்

குறிப்பு: இக்கவிதை இரவீந்த்நாத் தாகூரின் புகழ்பெற்ற எக்கல சலோ (ekla chalo re) வின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். என் அறைத்தோழன்(தீப்ரூ சக்ரவர்த்தி, இளமுனைவர் ஆய்வாளர், சமஸ்கிருதச் சிறப்பு மையம், ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகம், புது தில்லி)  மேற்கு வங்காளத்தைச் சார்ந்தவன். அவன் இக்கவிதையை ஆங்கிலத்தில் விளக்க அதை நான் தமிழில் மொழிபெயர்த்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன