வெள்ளி, 14 மார்ச், 2014

மேடை


மூலம் : ஆங்கிலம்
தமிழில் : ஆ. ஈஸ்வரன்

நாங்கள் எங்களின் பெயரால் அமைந்த
எந்த மேடையும் ஏறியதில்லை
நாங்கள் அதற்காக
அழைக்கப்பட்டதும் இல்லை.
எங்களின் நிலம்
எங்களுக்கே சுட்டுவிரலால் சுட்டிக் காட்டப்பட்டது.
அங்கு பயந்தவாறே இரு கால்களையும்
குத்திட்டு அமர்ந்தோம்.

எங்களை அவர்கள் உயர்வாக மெச்சினார்கள்,
மேடையில் இருந்தவாறு
எங்களின் துன்பங்களைப் பற்றி
எங்களிடமே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால்
எங்களின் துன்பம் எங்களுக்கே உரித்தானது
அவர்களுடையதாக எப்போதும் இருந்ததில்லை.
என்று முனுமுனுத்தோம்.
அவர்கள் கடுகடுத்தவாறு கேட்டுவிட்டு கர்ஜித்தார்கள்.
எங்களை இழுத்து
காதைத் திருகி 
மன்னிப்பு கேளுங்கள் இல்லாவிட்டால்....

குறிப்பு: இக்கவிதை, வரு சோனவான் (Vahru Sonawane) எனும் மகாராஷ்ர 
பழங்குடிக் கவிஞரால் பாலி (Bhil dialect) எனும் வட்டார மொழியில் எழுதப்பட்டது.  இக்கவிதையை இணையதளத்தில் கண்டு, ஆங்கிலம் வழியாக தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன